Jio அறிமுகப்படுத்தியது 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம்.தினமும் 1.5GB டேட்டா கிடைக்கும்.

Updated on 28-Mar-2022
HIGHLIGHTS

Jio இறுதியாக ஒரு மாத ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது ஜியோ ஒரு மாத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

ஜியோவின் இந்த ஒரு மாத திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்...

நீங்கள் காத்திருந்த நீண்ட காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்தது. ரிலையன்ஸ் ஜியோ பல வருட காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக ஒரு மாத ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எந்தச் சட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு 28 நாட்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை பயனாளர்களிடம் இருந்து வந்தது. இது தொடர்பாக பல எதிர்ப்புகளும் எழுந்தன, அதன் பிறகு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத செல்லுபடியாகும் சில திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று TRAI கூறியது. தற்போது ஜியோ ஒரு மாத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலேயே இவ்வாறு செய்யும் முதல் தொலைத்தொடர்பு நிறுவனம் இது என்று ஜியோ தெரிவித்துள்ளது. ஜியோவின் இந்த ஒரு மாத திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்…

ஜியோ 30 நாட்கள் திட்டத்தின் நன்மைகள்

ஜியோவின் இந்த ஒரு மாத திட்டத்தின் விலை 259 ரூபாய். இதில், நீங்கள் ஒரு மாதம் முழுவதும் வேலிடிட்டியைப் பெறுவீர்கள், அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதி ரீசார்ஜ் செய்தால், மே 1 ஆம் தேதி மட்டுமே அடுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிட்டட் காலிங் கிடைக்கும்.

இந்த திட்டத்தை ஒரே நேரத்தில் பல முறை ரீசார்ஜ் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் செல்லுபடியாகும் காலம் முடிந்த பிறகு, புதிய திட்டம் தானாகவே செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த திட்டத்திலும், மற்ற திட்டங்களைப் போலவே, ஜியோவின் அனைத்து பயன்பாடுகளும் சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கும்..

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :