ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்டு திட்டத்தை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ரூ. 1 விலை ஜியோ சலுகை 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
இதில் 100 எம்.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்டு திட்டத்தை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவின் இந்த திட்டம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே குறைந்த விலை ப்ரீ-பெய்டு திட்டமாகும். ஜியோவின் இந்த திட்டத்தின் விலை 1 ரூபாய் மட்டுமே. இதுவே குறைந்த விலை கொண்ட மற்றும் புதிய திட்டமாகும். வேறு எந்த இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் இதுபோன்ற திட்டம் இல்லை. டெலிகாம் டாக் முதலில் ஜியோவின் இந்தத் திட்டத்தைப் பற்றிய தகவலை அளித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது சலுகை கட்டணங்களை உயர்த்தியது. விலை உயர்வு டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 1 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
புதிய ரூ. 1 விலை ஜியோ சலுகை 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 100 எம்.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 100 எம்.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்பட்டு விடும். எனினும், பயனர்கள் மீண்டும் ரூ. 1 விலை சலுகைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த சலுகையை பெற முதலில் உங்களின் மொபைல் நம்பருக்கு புதிய சலுகை வழங்கப்பட்டு இருக்கிறதா என தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய மை ஜியோ செயலியின் ரீசார்ஜ் ஆப்ஷன் சென்று வேல்யூ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து அதர் பிளான்ஸ் பகுதியில் ரூ. 1 சலுகையை காணலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.