ஜியோ, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நன்மைகளுடன் வந்த சில திட்டங்களில் இத்தகைய மாற்றங்களைச் செய்துள்ளன. ஏர்டெல் அதன் சில திட்டங்களை திருத்தியுள்ள நிலையில், ஜியோ இப்போது இந்தத் திட்டங்களுக்கு டேட்டா நன்மைகளைச் சேர்க்கிறது. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டத்துடன் 10 ஜிபி வரை கூடுதல் தரவை வழங்கும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டத்தின் விலைக்கு ஏற்ப இந்த திட்டங்களின் விலையை டெல்கோ அதிகரித்திருந்தாலும், இப்போது பயனர்களுக்கு கூடுதல் செலவில்லாமல் கூடுதல் டேட்டாவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை நாட்டில் அறிமுகப்படுத்தியது.அந்த திட்டங்கள் அனைத்துமே சமீபத்தில் நடைமுறைக்கு வந்த புதிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வழக்கமான நன்மைகளான – அன்லிமிட்டட் வாய்ஸ் கால், ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் பலவற்றோடு வருகிறது.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், வெளியான சில தினங்களில் ஜியோ அதன் சில புதிய ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா திட்டங்களை மாற்றியமைத்து, தற்போதுள்ள தினசரி டேட்டா வரம்பை விட அதிகமான டேட்டாவை சேர்ந்துள்ளது. அந்த திட்டங்கள் – ஜியோ ரூ.499, ரூ.888 மற்றும் ரூ.2,599 ஆகும்!
இனிமேல் இந்த திட்டம் 6 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். உடன் வழக்கமான நன்மைகளையும் தொகுக்கும்: அதாவது 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்புகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும்.
இனிமேல் இந்த திட்டம் 5 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். உடன் வழக்கமான நன்மைகளையும் தொகுக்கும்: அதாவது 84 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்புகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும்.
இனிமேல் இந்த திட்டம் 10 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். உடன் வழக்கமான நன்மைகளையும் தொகுக்கும்: அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்புகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும்.
கூடுதல் டேட்டாவாக அணுக கிடைக்கும் 5ஜிபி, 6ஜிபி மற்றும் 10ஜிபி ஆனது எந்த விதமான டெய்லி லிமிட்டையும் கொண்டிருக்காது மற்றும் மெயின் ரீசார்ஜின் செல்லுபடியாகும் காலத்துடன் ஒற்றுப்போகும்.
ஏனெனில், ஏர்டெல் மற்றும் வி ஆகிய நிறுவனங்களும் இதே போன்ற திட்டங்களை வழங்குவதால், ஜியோ அதன் வாடிக்கையாளர்களை அதன் நெட்வொர்க்கை நோக்கி ஈர்க்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பது வெளிப்படை!