குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பிராட்பேண்ட் திட்டத்தில் எது பெஸ்ட்

Updated on 04-Mar-2022
HIGHLIGHTS

இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது

கொரோனா ஏற்படுத்தியுள்ள ஊரடங்கு சூழல் பலரையும் வீடுகளில் இருந்து வேலை பார்க்கும் வகையில் மாற்றியுள்ளது.

பிராட்பேண்ட் திட்டங்களை ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்குகின்றன

இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியர்களில் பெரும்பாலானோர் மொபைல் டேட்டா தான் இண்டர்நெட்டுக்காக பயன்படுத்தி வந்தாலும், கொரோனா ஏற்படுத்தியுள்ள ஊரடங்கு சூழல் பலரையும் வீடுகளில் இருந்து வேலை பார்க்கும் வகையில் மாற்றியுள்ளது.

வீடுகளில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கும், அதிகமாக இண்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கும் ஆரம்பகட்ட குறைந்தவிலை பிராட்பேண்ட் திட்டங்களை ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்குகின்றன. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

பி.எஸ்.என்.எல் ஃபைபர் பேசிக் பிளான் திட்டத்தில் மாதம் ரூ.449-க்கு 30 Mbps வேகத்தில், 3.3 டிபி டேட்டா எஃப்.யூ.பி லிமிட்டுடன் வழங்கப்படுகிறது.

இதன்படி ஜியோ தனது ஜியோ ஃபைபர் அடிப்படை திட்டத்தில் மாதம் ரூ.399-க்கு 30 Mbps வேகத்தில் எஃப்.யூ.பி லிமிட்டில் 3.3 டி.பி டேட்டா வழங்குகிறது. 

ஏர்டெல்லை பொறுத்தவரை அடிப்படை திட்டத்தில், மாதம் ரூ.499-க்கு 40 Mbps வேகத்தில், 3.3 டிபி டேட்டா எஃப்.யூ.பி லிமிட்டில் வழங்கப்படுகிறது.

ஆக்ட் நிறுவனம் மாதம் ரூ.549-க்கு 40 Mbps வேகத்தில் 500 ஜிபி டேட்டா எஃப்யூபி லிமிட்டுடன் கிடைக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :