ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 உற்பத்தி இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன் 12 சீரிசில் – ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன் 12 உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என தெரிகிறது. தற்சமயம் இதே ஆலையில் ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஐபோன் 12 உற்பத்தி தமிழ் நாட்டில் இயங்கி வரும் பாக்ஸ்கான் ஆலையில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு ஆலைகளில் இருந்து 10 சதவீத உற்பத்தியை இந்தியாவுக்கு கொண்டுவர ஆப்பிள் முடிவு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், ஆப்பிள் இந்திய வாடிக்கையாளர்களுக்கான ஐபோன்களின் விலையை குறைத்தால், நிறுவனம் இந்திய சந்தையில் பெரும் பங்கைப் பெறும். ஆப்பிள் இந்திய சந்தையில் பெரும் பகுதியைக் கவனித்து வருகிறது, இது நிறுவனத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்