Apple Event iPad Pro: ஆப்பிள் தனது புதிய ஐபாட் புரோ மாடல்களை ஆப்பிள் எம் 1 ப்ரோசெசருடன் பொருத்தப்பட்டுள்ளது. நிறுவனம் ஐபாட் புரோ மாடல்களை இரண்டு ஸ்க்ரீன் அளவுகளில், 11 இன்ச்கள் மற்றும் 12.9 இன்ச்களின் அறிமுகப்படுத்தியுள்ளது என்பதையும், இது 2 TP வரை ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும். முக்கியமான அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 5 ஜி ஆதரவு, ப்ரோமோஷன் ஆகியவற்றை ஆதரிக்கிறது. புதிய ஐபாட் புரோ மாடலின் அனைத்து அம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவல்களை இப்போது தருகிறோம்.
புதிய 11 இன்ச் ஐபேட் ப்ரோ விலை 799 டாலர்கள் என்றும் 12.9 இன்ச் மாடல் விலை 1099 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 30 ஆம் தேதி துவங்குகிறது.
புதிய ஐபேட் ப்ரோ எம்1 பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே மினி OLED கொண்டிருக்கின்றன.
மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 16 ஜிபி ரேம் மற்றும் 2 டிபி வரையிலான இன்டர்னல் மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் லிடார் சென்சார், வைபை 6, பேஸ் ஐடி, நான்கு ஸ்பீக்கர் ஆடியோ வசதி, நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புது ஐபேட் ப்ரோ தண்டர்போல்ட், மல்டி டச், டால்பி அட்மோஸ் ஆடியோ, ஆப்பிள் பென்சில் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகின்றன