WhatsApp யில் யில் இப்படி ஒரு விஷயம் நடக்குமா, அதை எப்படி தடுப்பது /

Updated on 19-Jan-2022
HIGHLIGHTS

வாட்ஸ்அப் ஒரு விரிவான மீடியா கண்ட்ரோல்களுடன் வருகிறது, இது வாட்ஸ்அப் வழியாக பெறப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற மல்டிமீடியா உள்ளடக்கங்களை வாட்ஸ்அப் எவ்வாறு கையாள வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த பயனர்களுக்கு உதவுகிறது.

யனர்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஆனது தேவையில்லாத ஸ்டோரேஜ்களால் அடிக்கடி நிரப்பப்படுகிறது.

ங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு சில வாட்ஸ்அப் தந்திரங்கள் உள்ளன.

வாட்ஸ்அப் ஒரு விரிவான மீடியா கண்ட்ரோல்களுடன் வருகிறது, இது வாட்ஸ்அப் வழியாக பெறப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற மல்டிமீடியா உள்ளடக்கங்களை வாட்ஸ்அப் எவ்வாறு கையாள வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த பயனர்களுக்கு உதவுகிறது.

இதுபற்றிய தெளிவு இல்லாத பயனர்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஆனது தேவையில்லாத ஸ்டோரேஜ்களால் அடிக்கடி நிரப்பப்படுகிறது.

ஒருவேளை அந்த பட்டியலில் நீங்களும் ஒருவர் என்றால்.. நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு சில வாட்ஸ்அப் தந்திரங்கள் உள்ளன.

'முதலாவது – ஆட்டோ டவுன்லோட்!

அதாவது உங்கள் வாட்ஸ்அப் சாட்டிற்கு வரும் எந்த மீடியாவும் உங்கள் உத்தரவின்றி தானாகவே பதிவிறக்கம் செய்யப்படும் செயல்பாடு.

வாட்ஸ்அப் எனும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆனது தன் பயனர்களுக்கு எல்லா சாட்களுக்குமான ஆட்டோ-டவுன்லோட் செயல்பாட்டை ஒரே நேரத்தில் முடக்கும் விருப்பத்தை வழங்குகிறது.

வழக்கமாக அனைத்து வாட்ஸ்அப் அக்கவுண்ட்களுமே பெறப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட்போனின் கேலரியில் சேமிக்கிறது. இது அதிக டேட்டாவைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒழுங்கீனமான மற்றும் தேவையற்ற ஸ்டோரேஜ் நுகர்வுக்கும் காரணமாகிறது.

அடுத்தது – மீடியா விசிபிலிட்டி!

வாட்ஸ்அப்பில் அணுக கிடைக்கும் இந்த விருப்பத்தை Off செய்வதால் ஸ்மார்ட்போனின் கேலரியில் இருந்து புதிதாக பதிவிறக்கம் செய்யப்பட்ட எல்லா உள்ளடக்கத்தையும் நீக்கலாம்

இந்த இரண்டு வாட்ஸ்அப் மீடியா செட்டிங்ஸ்-களை எவ்வாறு பயன்படுத்துவது / நிர்வகிப்பது என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

முன்நிபந்தனைகள்:

  • — உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷன் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
  • – தவிர உங்கள் அக்கவுண்ட்டும், உங்கள் இண்டர்நெட்டும் ஆக்டிவ் ஆக இருப்பதையும் உறுதி செய்யவும்

WhatsApp-இல் ஆட்டோ டவுன்லோட் செயல்முறையை முடக்குவது எப்படி?

  1. 1. வாட்ஸ்அப்பைத் திறந்து, மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டுவதன் மூலம் Settings-க்குச் செல்லவும்
  2. 2. பின்னர் Storage and data-ஐ கிளிக் செய்வதின் வழியாக Media auto-download பிரிவை கண்டறியவும் –
  3. 3. இந்த இடத்தில் தான் ஒரு மீடியா எப்போது டவுன்லோட் செய்யப்பட வேண்டும் என்று உங்கள் தேவைக்கு ஏற்ற நீங்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
  • – மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தும் போது (When using mobile data) என்கிற விருப்பத்திற்குள் சென்று எல்லா பாக்ஸ்களையும் அன்செக் செய்யவும்
  • – வைஃபை இல் இணைக்கப்படும்போது (When connected with Wi-Fi) என்கிற விருப்பத்திற்குள் சென்று எல்லா பாக்ஸ்களையும் அன்செக் செய்யவும்,
  • – ரோமிங் செய்யும் போது (When roaming) என்கிற விருப்பத்திற்குள் சென்று எல்லா பாக்ஸ்களையும் அன்செக் செய்யவும். அவ்வளவுதான்!
  • இது ஒரு தீவிரமான செட்டிங்ஸ் என்பதை நினைவில் கொள்க. இதில் உங்களுக்கு எது சிறந்தது என்பதை நீங்கள் தீர்மானித்து அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யவும்.

WhatsApp-இல் எல்லா சாட்களுக்கான Media Visibility-ஐ டிஸேபிள் செய்வது எப்படி?

இதை செய்ய Settings -> Chats -> Media visibility சென்று அதை ஆப் செய்யவும்.

WhatsApp-இல் ஒரு தனிப்பட்ட சாட்டிற்கான Media Visibility-ஐ டிஸேபிள் செய்வது எப்படி?

  • இதை செய்ய தேவையான / குறிப்பிட்ட அம்சத்தை பயன்படுத்த விரும்பும் சாட்டை திறந்து, மேலே உள்ள chat name-ஐ டேப் செய்யவும். இப்போது குறிப்பிட்ட காண்டாக்ட்டின் பெயரின் கீழே Mute Notifications, Custom Notifications போன்ற விருப்பங்களை தொடர்ந்து Media Visibility விருப்பத்தை காண்பீர்கள், அதை கிளிக் செய்து டீபால்ட் ஆக இருக்கும் Yes விருப்பத்திற்கு மாறாக Off செய்யவும், அவ்வளவு தான்.
  • நாம் மேற்கான அனைத்து வாட்ஸ்அப் மீடியா கண்ட்ரோல்களுமே உங்கள் ஸ்டோரேஜ் சிக்கலை தீர்க்க / சரி செய்ய போதுமான வேலையை செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :