DND (Do Not Disturb) மோடை செயல்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அனுமதிக்கின்றன
DND.யை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை இங்கே காண்பிக்கிறோம்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா பயனர்களுக்கு
மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நிறுவனங்களிலிருந்து வரும் போன் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றால் நீங்கள் கஷ்டப்பட்டீர்களா? தேவையற்ற போன்கள் / செய்திகளை அகற்ற DND (Do Not Disturb) மோடை செயல்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அனுமதிக்கின்றன. தொந்தரவு செய்யாத சேவையைச் செயல்படுத்திய பிறகு, நீங்கள் சந்தைப்படுத்தல் கால்களை பெறுவதை நிறுத்துகிறீர்கள். ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா பயனர்களுக்கு DND.யை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை இங்கே காண்பிக்கிறோம்.
Vodafone Idea பயனர்களின் இப்படி ஏக்டிவேட் செய்யுங்கள் DND மோட்
வோடபோன் ஐடியாவின் டிஎன்டி சேவையைத் தொடங்க இந்த லிங்கிற்கு (https://www.myvi.in/dnd) செல்லுங்கள்.
இப்போது உங்கள் வோடபோன்-ஐடியா எண்ணை உள்ளிட்டு Get OTP ஐக் கிளிக் செய்க.
நீங்கள் OTP ஐ உள்ளிட்டவுடன் உங்கள் DND செட்டிங்கள் திறக்கப்படும்.
இங்கிருந்து DND மோடில் கால்களை செயல்படுத்தலாம், அல்லது மாற்றலாம்.
SMS ப்லோக் செய்வதற்கான நாள் மற்றும் நேரத்தை நீங்கள் தீர்மானிக்கலாம்.
Airtel பயனர்கள் இப்படி ஏக்டிவேட் செய்யுங்கள் DND மோட்
இதற்க்கு ஏர்டெலின் வெப்சைட் (www.airtel.in) திறந்து மற்றும் DND பக்கத்தில் செல்லவும்.
நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை நேரடியாக (https://www.airtel.in/airtel-dnd/) யில் செல்ல வேண்டும்
இப்பொழுது ஏர்டெல் மொபைல் சர்விஸ் செக்சனுக்கு சென்று Click Here ஒப்ஷனில் க்ளிக் செய்யவும்
இப்போது உங்கள் ஏர்டெல் எண்ணை உள்ளிடவும் Get OTP யில் க்ளிக் செய்யவும்
OTP ஐ என்டர் செய்த பிறகு, இறுதியில் அனைத்து விருப்பத்தையும் சொடுக்கவும்.
Reliance Jio பயனர்கள் இது போல ஏக்டிவேட் செய்யுங்கள் DND மோட்
இதற்காக, உங்கள் போனில் MyJio பயன்பாட்டைப் பதிவிறக்கி லாகின் செய்க .
இப்போது இடதுபுறத்தில் உள்ள மெனு விருப்பத்திலிருந்து செட்டிங்களுக்கு செல்லவும்.
இங்கே நீங்கள் DND விருப்பத்தை காண்பீர்கள்.
நிறுவனம் உங்களுக்கு ஒரு கடிதம் கொடுக்கும், மேலும் 7 நாட்களுக்குள் DND மோடை செயல்படுத்தப்படும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.