உங்கள் ஈமெயிலை பெறுநர் படித்துவிட்டார்களா இல்லையா எப்படி தெரிந்து கொள்வது ?

Updated on 15-Jun-2022
HIGHLIGHTS

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் எந்த வேலைக்கும் ஈமெயில் அனுப்ப வேண்டும்.

மெயில் அனுப்பினால் அந்த மெயிலின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

எதிரே இருப்பவர் அந்த ஈமெயில் படித்தாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் எந்த வேலைக்கும் ஈமெயில்  அனுப்ப வேண்டும். அதே சமயம் நாம் யாருக்காவது மெயில் அனுப்பினால் அந்த மெயிலின் பதிலுக்காக காத்திருக்கிறோம். நீண்ட நேரம் பதில் வரவில்லை என்றால், எதிரில் இருப்பவர் மெயிலைப் பார்த்தாரா இல்லையா என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமானது, அப்படியொரு வசதி மெயிலில் கொடுக்கப்படாததால், எதிரே இருப்பவர் அந்த ஈமெயில் படித்தாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், இப்போது உங்கள் பிரச்சினை தீர்க்கப்படலாம். உங்கள் ஈமெயில் எந்த நேரத்தில், எந்த நாளில் மற்றும் எத்தனை முறை பார்க்கப்பட்டது என்பதை நீங்கள் சரிபார்க்கக்கூடிய ஒரு ட்ரிக்ஸ் இன்று நாங்கள் உங்களுக்கு வழங்க உள்ளோம். இதைச் செய்வது மிகவும் எளிதானது, இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டெப்களை பின்பற்றினால் போதும், உங்கள் வேலையை எளிதாகச் செய்யலாம்.

இதற்கு நீங்கள் கூகுளில் மெயில் டிராக் எக்ஸ்டென்ஷன் பயன்படுத்த வேண்டும். இதைச் செய்ய, Google யில் ஈமெயில் டிராக் எக்ஸ்டென்ஷன் டைப் செய்து சர்ச் செய்ய வேண்டும்.. இன்டர்நெட் திறந்ததும் Add to Chrome என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் முன் ஒரு பக்கம் திறக்கும், அதில் Google கணக்கைச் சேர்க்கும்படி கேட்கப்படும். ஈமெயில்  ஐடியைத் டைப்  செய்வதன் மூலம் சேர்க்கும் போது ஈமெயில் டிராக் எமைலை அணுகும்படி கேட்கப்படுவீர்கள். இங்கே நீங்கள் Allow பட்டனை கிளிக் செய்க. இதைச் செய்வதன் மூலம் நீங்கள் அனுப்பிய அனைத்து ஈமெயில்களையும் எளிதாகக் கண்காணிக்கலாம்.

இப்போது அதைச் செயல்படுத்த, உங்கள் போனில் ஜிமெயிலைத் திறந்து புதிய ஈமெயில் எழுத வேண்டும். ஈமெயிலை எழுதிகிய பிறகு, அதை அனுப்பும் முன், சென்ட்  பட்டனுக்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்யவும்.

இப்போது கீழ்தோன்றும் மெனுவில் nsert from Mailtrack  என்ற விருப்பத்தைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்வதன் மூலம் Track Email  தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் செட்டிங் ஆக்டிவேட் ஆகும். இப்போது நீங்கள் அனுப்பிய ஈமெயிலை Mailtrack இன் டாஷ்போர்டில் இருந்து எளிதாகக் கண்காணிக்கலாம்.

இது தவிர, ஜிமெயிலின் மொபைல் பதிப்பிலும் இந்த நிலையை நீங்கள் பார்க்கலாம். ஆனால் இதற்கு நீங்கள் Mailtrack ஐப் பயன்படுத்தி ஒரு செய்திக்கு பதிலளித்திருப்பது அவசியம். மேலும், ஒவ்வொரு ஈமெயிலுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Available add-ons விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் ஈமெயில்  எளிதாகக் கண்காணிக்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :