Xiaomi 15 Ultra
Xiaomi தனது பிரீமியம் ஸ்மார்ட்போனான Xiaomi 17 Ultra-வை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டு Xiaomi 15 Ultra- மற்றும் இந்த ஆண்டு Xiaomi 17 சீரிஸ் நான்காவது ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் இதுவரை இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த சிப்செட்டைக் கொண்டுள்ளது – Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசர் மற்றும் 200MP கேமரா வழங்குகிறது மேலும் இதன் மிக சிறந்த அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்.
Xiaomi 17 Ultra-வின் விலை 6,999 யுவானில் (இந்திய வெர்சனின் தோராயமாக ₹90,000 ) தொடங்குகிறது . இது 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் மாடலுக்கானது. 16GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட மிகப்பெரிய வேரியண்டின் விலை 8,499 யுவான் (தோராயமாக ₹1,09,000). லைக்கா பதிப்பும் கிடைக்கிறது, சிறந்த வேரியண்டின் விலை 8,999 யுவான் (தோராயமாக ₹1,15,000) ஆகும். இதன் விற்பனை டிசம்பர் 27 முதல் சீனாவில் நடைபெறும்.
Xiaomi 17 Ultra ஆனது HyperOS 3 உடன் இணைக்கப்பட்ட சமீபத்திய Android 16 OS இல் இயங்குகிறது. இந்த தொலைபேசியில் 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 1060 nits ஹை ப்ரைட்னஸ் மற்றும் 120 Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் டிஸ்ப்ளேவில் டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ஆல் பாதுகாக்கப்படுகிறது.
இதையும் படிங்க அதிர வைக்கும் ஆபர் iphone யின் இந்த மாடலுக்கு ஒரே அடியாக ரூ,12,901 டிஸ்கவுண்ட்
Xiaomi 17 Ultra போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் Qualcomm Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 3nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதோடு Adreno 840 GPU, 16GB LPDDR5x Ultra RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
இந்த போனில் லைக்கா பிராண்டட் கேமரா அமைப்பு உள்ளது. பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 1 இன்ச் சென்சார் உள்ளது. 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் சேர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது சென்சார் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகும். பின்புற கேமரா 4K வீடியோவை ரெக்கார்டிங் செய்ய முடியும். முன் கேமரா 50 மெகாபிக்சல் ஆகும்.
Xiaomi 17 Ultra 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் மேலும் இந்த போனில் 6,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் IP66 + IP68 + IP69 ரெட்டிங்களுடன் வருகிறது, அதாவது இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் .