நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை விற்க விரும்பினால், அதை விற்று நல்ல சலுகையைப் பெறுவதற்கான தளத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், Flipkart இன் புதிய சேவை உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும். Flipkart இன்று (பிப்ரவரி ) முதல் பயனர்களுக்காக 'Sell Back Program' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை Flipkart இல் நல்ல விலையில் விற்கலாம். பிளிப்கார்ட் பழைய போனுக்கு ஈடாக மின்னணு பரிசு கூப்பனை அதிரடி சலுகைகளுடன் உங்களுக்கு வழங்குகிறது. முக்கியமாக, நீங்கள் பிளிப்கார்ட் தளத்தில் இருந்து வாங்காத போன்களைக் கூட செல்பேக் திட்டத்தின் கீழ் அந்த நல்ல விலைக்கு விற்க முடியும்.
இந்த திட்டத்தில் நீங்கள் பலன் அடைய சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. பழைய மொபைல்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல விலை கிடைக்கிறது. மேலும், இதில் கிடைக்கும் கேஷ் கூப்பனைக் கொண்டு பிளிப்கார்ட்டில் பொருள்கள் வாங்கும் போது கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது.
பிளிப்கார்ட் நிறுவனம், நாடு முழுவதும் 1700 பின்கோடுகளில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சென்னை, மதுரை, திருச்சி போன்ற பல நகரங்களும் அடங்கும். சமீபத்தில் பழைய மின்னணு பொருள்களை வாங்கி விற்கும் Yaantra எனும் தளத்தை பிளிப்கார்ட் வாங்கியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பிளிப்கார்ட் இந்த திட்டத்தை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.