சபாஷ் சரியான போட்டி ஒரே மாதுரியான விலை ரூ,349 யில் வரும் jio, Airtel மற்றும் VI இந்த திட்டத்தில் எது கெத்து ?

Updated on 12-Feb-2026

தனியார் டெலிகாம் நிறுவனங்களான Jio, Airtel மற்றும் Vi தங்கள் கஸ்டமர்களை ய்ஜக்க வைத்து கொள்ள பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்தவகையில் ஒரே மாதுரியாக இருக்கும் பல திட்டங்களை தங்களிடம் கொண்டு வந்துள்ளது, அந்த வகையில் ரூ,349 யில் வரும் இந்த திட்டத்தை மூன்று நிறுவனங்களும் வைத்துள்ளது இந்த ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா வழங்கும் இந்த மூன்று திட்டங்களில் எது பெஸ்ட் எது அதிக நன்மை வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,349 கொண்ட திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம், டெலிகாம் நிறுவனத்தின் மற்றொரு குறைந்த விலை 5G ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம், கஸ்டமர்கள் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2GB தினசரி டேட்டாவைப் வழங்குகிறது . இந்தத் திட்டத்தின் மூலம், FUP (ஸ்டேடண்டர்ட் ஆப் பாலிசி கொள்கை) டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு கஸ்டமர்கள் 64 Kbps ஸ்பீடில் டேட்டாவைப் பெறலாம் . இந்தத் திட்டத்துடன் அன்லிமிடெட் 5G டேட்டாவும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வழங்குகிறது.

Jio rs 349

இதை தவிர இந்த திட்டத்தில் ரூ,35100 மதிப்புள்ள Google Gemini சப்ஸ்க்ரிப்ஷன் 18 மாதங்களுக்கு வழங்குகிறது இதை தவிர JioHotstarயின் Mobile/TV சப்ஸ்க்ரிப்ஷன், JioAICloud இலவச 50 GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

Airtel ரூ.349 திட்டம்

ஏர்டெல் யின் இந்த திட்டத்தின் விலையில் ஜியோவை போல ரூ.349 திட்டத்தைக் கொண்டுள்ளது, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 இலவச SMS ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும், ஏர்டெல்லின் ரூ.349 திட்டத்திலிருந்து டேட்டா நன்மைகள் வேறுபடுகின்றன. ஜியோ தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்கும் அதே வேளையில், ஏர்டெல் தினசரி 1.5 ஜிபி மட்டுமே வழங்குகிறது. இருப்பினும், நீங்கள் 5G பயனராக இருந்தால், அன்லிமிடெட் டேட்டாவிலிருந்து பயனடைவீர்கள் மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி .

airtel rs 349

இந்தத் திட்டத்துடன் ஏர்டெல் கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளேக்கான இலவச அக்சஸ் அடங்கும், இது பயனர்கள் 20+ OTT கன்டென்ட் இலவசமாகப் பார்க்க அனுமதிக்கிறது. கூடுதலாக, நீங்கள் இலவச ஸ்பேம் எச்சரிக்கைகள், 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான இலவச அக்சஸ், இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் இலவச ஆப்பிள் மியூசிக் ஆகியவற்றைப் வழங்குகிறது

இதையும் படிங்க :Jio VS Airtel VS VI: தினமும் 1.5GB டேட்டா 84 வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தில் யாரு கெத்து ?

VI ரூ.349 திட்டம்

Vi rs 349

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் Vi நிறுவனம் தனது கஸ்டமர்களுக்கு ரூ.349க்கு 28 நாள் வேலிடிட்டி வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தையும் வழங்குகிறது. ஏர்டெல்லைப் போலவே, Vi நிறுவனமும் அன்லிமிடெட் காலிங் , தினமும் 100 இலவச SMS மற்றும் தினமும் 1.5GB டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. இருப்பினும், Vi நிறுவனம் கூடுதல் டேட்டா சலுகைகளையும் வழங்குகிறது. உதாரணமாக, நீங்கள் 5G கஸ்டமராக இருந்தால், உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். கூடுதலாக, 4G மற்றும் 5G கஸ்டமர்கள் இருவரும் காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா, வார இறுதி டேட்டா ரோல்ஓவர் மற்றும் மாதத்திற்கு 2GB பேக்கப் டேட்டா ஆகியவற்றிலிருந்து பயனடைவார்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :