Realme 8 5G இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் சிறப்பம்சம் 4 ஜி பதிப்பிலிருந்து வேறுபட்டது. Realme 8 5 ஜி மீடியா டெக்கின் புதிய பரிமாணம் 700 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. சாதனம் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் பெரிய டிஸ்பிலேவை கொண்டுள்ளது.
ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் சூப்பர்சோனிக் புளூ மற்றும் சூப்பர்சோனிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
ரியல்மி 8 5ஜி 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அன்ட் வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரியல்மி 8 5ஜி 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது