BSNL யின் ரூ,1 கூடுதலாக கொடுப்பதன் மூலம் தினமும் 3GB டேட்டா கிடைக்கும்.

Updated on 22-Apr-2022
HIGHLIGHTS

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்

BSNLஅதன் பயனர்களுக்கு சிறந்த மற்றும் குறைந்த விலையில் திட்டங்களை வழங்குகிறது

SNL இன் இரண்டு திட்டங்களின் விவரங்களை இன்று உங்களிடம் கொண்டு வந்துள்ளோம்.

ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. அதே நேரத்தில், அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL அதன் பயனர்களுக்கு சிறந்த மற்றும் குறைந்த விலையில்  திட்டங்களை வழங்குகிறது. ரூ.300க்கும் குறைவான விலை கொண்ட BSNL இன் இரண்டு திட்டங்களின் விவரங்களை இன்று உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். இந்த திட்டங்களில் ஒன்று ரூ.298, மற்றொன்று ரூ.299. இந்த இரண்டின் விலையில் 1 ரூபாய் மட்டுமே வித்தியாசம் உள்ளது, ஆனால் இவற்றின் பலன்களில் பெரிய வித்தியாசம் உள்ளது உங்களை ஆச்சரியப்படுத்தலாம். எனவே இந்த திட்டங்களுக்கு என்ன வித்தியாசம் என்று பார்ப்போம்.

BSNL யின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தில் என்ன கிடைக்கும்:

இந்த திட்டத்தில், பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் அன்லிமிட்டட் வொய்ஸ் கால் வசதி வழங்கப்படுகிறது. இது தவிர, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. டேட்டாவைப் பற்றி பேசுகையில், ஒவ்வொரு நாளும் வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. இவை அனைத்தையும் தவிர, EROS NOW பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அக்சஸ் வழங்கப்படுகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள்.ஆகும்.

BSNL இன் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் என்ன கிடைக்கும்:

இப்போது இந்த திட்டத்தின் விலை மேலே உள்ள திட்டத்தை விட ரூ.1 அதிகம். நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில், பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் அன்லிமிடேட் வொய்ஸ் கால்  வசதி வழங்கப்படுகிறது. இது தவிர, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. டேட்டாவைப் பற்றி பேசுகையில், ஒவ்வொரு நாளும் வரம்பு தீர்ந்த பிறகு இன்டர்நெட் ஸ்பீட் 40 Kbps ஆக குறைகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள்.

இரண்டு திட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்:

இரண்டின் விலையிலும் 1 ரூபாய் மட்டுமே வித்தியாசம் உள்ளது. மேலும் செல்லுபடியாகும் வேறுபாடு உள்ளது. 56 நாட்கள் வேலிடிட்டி ரூ.298க்கு கிடைக்கும். அதே நேரத்தில், ரூ.299 திட்டத்தில் 30 நாட்கள் செல்லுபடியாகும். டேட்டாவில் உள்ள வித்தியாசத்தைப் பற்றி பேசுகையில், ரூ.298 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவும், ரூ.299 திட்டத்தில் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், EROS NOW பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அணுகல் ரூ.298 திட்டத்தில் வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இரண்டில் எந்தத் திட்டம் உங்களுக்குச் சிறந்தது என்று பார்த்தால், 1 ரூபாய் குறைவாகச் செலவழித்து, 298 ரூபாய்க்கான திட்டத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வோம். ஏனெனில் இதற்கு 56 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் EROS NOW பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அணுகல் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :