பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.16க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் நிமிடத்திற்கு 20 பைசா என ஆன் நெட் கால்களும், நிமிடத்திற்கு 20 பைசா என ஆஃப் நெட் கால்களும் வழங்கப்படும். எஸ்.எம்.எஸ், டேட்டா பலன்கள் இந்த திட்டத்தில் கிடையாது. பிஎஸ்என்எல் சிம்மை பயன்பாட்டில் வைத்துகொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் பலன் தரும்.
பிஎஸ்என்எல் ரூ.147க்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் ரூ.147க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் கால்கள், 10 ஜிபி டேட்டா ஆகியவை 30 நாட்களுக்கு வழங்கப்படும்.
நீங்கள் இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து , பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் வழங்கும் STV_247க்கு செல்லலாம். இந்தத் திட்டம் பயனர்களுக்கான SMS நன்மைகளையும் வழங்குகிறது. பயனர்கள் அன்லிமிட்டெட் வொய்ஸ் காலுடன் 50ஜிபி டேட்டாவையும், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுடன் 100 எஸ்எம்எஸ்/நாள்.ஆகும்.
இது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் யின் மற்றொரு அற்புதமான சிறப்பு கட்டண வவுச்சர் (STV) ஆகும். இந்த திட்டத்தில், பயனர்கள் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வொய்ஸ் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றைப் வழங்குகிறது. நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) டேட்டா லிமிட் தீர்ந்தவுடன் இன்டர்நெட் வேகம் 80 Kbps ஆக குறைகிறது.
தற்போது ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஆகியவை 30 நாட்கள் வேலிட்டி ரீசார்ஜ்ஜை வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் ஏற்கனவே 30 நாட்கள் திட்டத்தை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது