BSNL அறிவித்திருக்கும் புதிய சலுகை ரூ. 18 விலையில் கிடைக்கிறது. இது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 19 சலுகையை விட விலை குறைவு ஆகும். பி.எஸ்.என்.எல். ரூ. 18 சலுகையில் அன்லிமிடெட் காலிங், வீடியோ காலிங் உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை அதிகப்படுத்த ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் தங்களின் என்ட்ரி-லெவல் சலுகைகளை நீக்கி வருகின்றன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் மிக குறைந்த விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.
இத்துடன் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ. 19 பிரீபெயிட் சலுகையில் 200 எம்.பி. டேட்டா, அன்லிமிடெட் காலிங் உள்ளிட்டவை 48 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. புது சலுகை தவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 49, ரூ. 75, ரூ. 94, ரூ. 106, ரூ. 197 மற்றும் ரூ. 397 என ஆறு சலுகைகளின் பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.