பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 249 மற்றும் ரூ. 298 விலையில் புதிய பிரீபெயிட் சலுகைகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு சலுகைகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், குறுந்தகவல் பலன்கள் வழங்கப்படுகிறது.
ரூ. 298 பிஎஸ்என்எல் சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மறஅறும் இரோஸ் நௌ சந்தா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். இந்த சலுகையை அனைவரும் ஆன்லைன், ஆப்லைன் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.
புதிய பிஎஸ்என்எல் ரூ. 249 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 2 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு அனைத்து பலன்களும் இரண்டு மாதங்களுக்கு கிடைக்கும். இது முதல் முறை வாடிக்கையாளர்களுக்கான சலுகை ஆகும்