BSNL புதிய பிளான் குறைந்த விலையில் தினமும் 2GB டேட்டா மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி.

Updated on 21-Aug-2021
HIGHLIGHTS

BSNL புதிய ஓராண்டுத் திட்டத்தை ரூ.1,498 என்கிற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.1,498 திட்டத்தை முதலில் கண்டறிந்து அறிக்கை வெளியிட்டது kerelatelecom.info ஆகும்

இந்த திட்டம் 365 நாட்கள் என்கிற நீண்ட கால செல்லுபடியாகும் மற்றும் இது தற்போதுள்ள மற்றும் புதிய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் என இருவருக்குமே அணுக கிடைக்கும்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ஓராண்டுத் திட்டத்தை ரூ.1,498 என்கிற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.1,498 திட்டத்தை முதலில் கண்டறிந்து அறிக்கை வெளியிட்டது kerelatelecom.info ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டேட்டா நன்மையை தவிர்த்து, அதாவது ஒரு நாளைக்கு 2 ஜிபி அதிவேக டேட்டாவை தவிர்த்து இதில் எந்த விதமான கூடுதல் நன்மைகளும் கிடைக்காது. அதாவது எஸ்எம்எஸ் அல்லது அழைப்பு நிமிடங்கள் அணுக கிடைக்காது.

ஆனால் இந்த திட்டம் 365 நாட்கள் என்கிற நீண்ட கால செல்லுபடியாகும் மற்றும் இது தற்போதுள்ள மற்றும் புதிய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் என இருவருக்குமே அணுக கிடைக்கும்.

வீட்டிலிருந்து வேலை செய்ய அல்லது ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள உதவும் குறைந்த விலையிலான டேட்டா ஒன்லி பிளானை தேடும் மக்களுக்கு இந்த திட்டம் ஒரு சரியான தேர்வாகத் தெரிகிறது. புதிய ரூ.1,498 ப்ரீபெய்ட் திட்டமானது ஆஃப்லைன் அல்லது ஆன்லைனில் வழியாக ஆக்டிவேட் செய்யலாம்.

இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டெய்லி ஹைஸ்பீட் டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு, இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆகக் குறையும். இது வருகிற ஆகஸ்ட் 23 முதல் நிறுவனத்தின் அனைத்து வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :