BSNL யின் அசத்தலான அறிவிப்பு 4G வருமுன்னே 5G அறிவிப்பு வெளியாகியது.

Updated on 13-May-2022
HIGHLIGHTS

அரசாங்கத்தால் நடத்தப்படும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு 5ஜியை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனம் 4G மையத்தில் 5G ஐ அறிமுகப்படுத்தும், இதன் மூலம் 5G NSA ஐ மேம்படுத்தும்.

நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றையை அரசாங்கம் இன்னும் ஒதுக்கவில்லை.

அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 2023 இல் 5ஜியை அறிமுகப்படுத்தும் என்று ஒரு ஆதாரம் பிடிஐயிடம் தெரிவித்தது. 4G உள்கட்டமைப்பைப் போலவே, அரசாங்கத்தால் நடத்தப்படும் தொலைத்தொடர்பு நிறுவனமும் உள்நாட்டு 5G உள்கட்டமைப்பிற்கும் செல்லும் என்று கூறப்படுகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றன. திட்டமிட்டப்படி அனைத்து பணிகளும் நடைபெறும் பட்சத்தில் தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வி உள்ளிட்டவை இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைகளை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். 
 
இந்தியாவில் 5ஜி சேவைகள் வெளியாக முட்டுக் கட்டையாக இருப்பது ஸ்பெக்ட்ரம் ஏலம் மட்டும் தான். மத்திய அரசு சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான சரியான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும் என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. முன்னதாக டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் வெளியிட்ட தகவல்களின் படி இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் நடைபெறும் என அறிவித்து இருந்தார்.

எதுவாயினும், தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு இவை அனைத்தும் அதி வேகமாக நடைபெற்று விடும். இதே நிலை மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-க்கு மட்டும் பொருந்தாது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்னமும் தனது பயனர்களுக்கு 4ஜி சேவையை வழங்காமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 4ஜி சேவைகளை வழங்குவதில் பி.எஸ்.என்.எல். கவனம் செலுத்த முடிவு செய்து உள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏற்கனவே 4ஜி கோர் உருவாக்கி விட்டது. இதனை உருவாக்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் மத்திய டெலிமேடிக்ஸ் வளர்ச்சி மையம், டி.சி.எஸ். போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :