BSNL யின் அதிரடி திட்டம் 425 நாட்களுக்கு வேலிடிட்டி.

Updated on 26-Feb-2022
HIGHLIGHTS

பி.எஸ்.என்.எல். ரூ. 2399 பிரீபெயிட் சலுகையில் 60 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டி வழங்குகிறது

BSNL வேலிடிட்டி குறுகிய காலக்கட்டத்திற்கு 425 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது

ரூ. 2399 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். ரூ. 2399 பிரீபெயிட் சலுகையில் 60 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டி வழங்குகிறது. அதன்படி இந்த சலுகை வேலிடிட்டி குறுகிய காலக்கட்டத்திற்கு 425 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ரூ. 2399 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். டியூன்ஸ், இரோஸ் நௌ சந்தாவும் வழங்கப்படுகிறது. வேலிடிட்டி நீட்டிப்பு பற்றிய அறிவிப்பு தமிழகத்துக்கான பி.எஸ்.என்.எல். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. 

பி.எஸ்.என்.எல். ரூ. 1999 விலை பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 500 ஜி.பி. டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.  

இதுதவிர பி.எஸ்.என்.எல். ரூ. 1499 விலையிலும் பிரீபெயிட் சலுகையை வழங்கி வருகிறது. இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2 ஜி.பி. டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :