Airtel வழங்குகிறது ஒவ்வொரு மாதமும் ரூ.7000 இந்த நன்மை யாருக்கு கிடைக்கும்.?

Updated on 24-Mar-2022
HIGHLIGHTS

ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது

பெண் ஊழியர்கள் 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறை எடுத்துகொள்ளலாம்

ஒவ்வொரு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என ஒரு வருடத்திற்கு கூடுதல் விடுமுறையும் வழங்கப்படவுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் பெண் ஊழியர்களுக்கு 26 வார மகப்பேறு விடுப்பை வழங்குகிறது. இதற்குப் பிறகு, நிறுவனம் ஊழியர்களுக்கு 24 வாரங்கள் நெகிழ்வான வேலையை வழங்குகிறது, இதனால் அவர்கள் தங்கள் சொந்த வேகத்தில் வேலைக்குத் திரும்ப முடியும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நேரத்தை நிர்வகிக்க முடியும்.

ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்நிறுவனம் தனது பெண் ஊழியர்கள் யாருக்கேனும் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை தரப்போவதாக அறிவித்துள்ளது.

இதைத்தவிர பெண் ஊழியர்கள் 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறை எடுத்துகொள்ளலாம், அதன்பிறகு 24 வாரங்களுக்கு தாங்கள் விரும்பும் நேரங்களில் வேலை செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இத்துடன் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என ஒரு வருடத்திற்கு கூடுதல் விடுமுறையும் வழங்கப்படவுள்ளது.

குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகும் வரை ரூ.7000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பெண் ஊழியர்கள் குழந்தையை தத்தெடுத்தாலும் இந்த தொகை வழங்கப்படும் என கூறியுள்ளது.

அதேபோல சமீபத்தில் தந்தையானவர்களும் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துகொள்ள 8 வாரங்களுக்கு விடுமுறை எடுத்துகொள்ளலாம் அறிவித்துள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :