ASUS ZenFone 8 மினி இந்தியாவில் மே 12 ஆம் தேதி அறிமுகம் ஆகும்.

Updated on 12-May-2021
HIGHLIGHTS

ASUS ZenFone ரிஸ் மாடல்களை மே 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

ASUS ZenFone Mini பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது

அசுஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் சென்போன் 8 சீரிஸ் மாடல்களை மே 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. சென்போன் 8, சென்போன் 8 ப்ரோ மற்றும் சென்போன் 8 மினி என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மூன்று மாடல்கள் இந்திய வெளியீடு கேள்விக்குறியாகவே இருந்தது.
 
இந்த நிலையில், அசுஸ் சென்போன் 8 மினி பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது. புதிய அசுஸ் சென்போன் 8 மினி ASUS_1006D எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. 

அம்சங்களை பொருத்தவரை  இத்துடன் 5.92 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது.

புது சென்போன் 8 மினி டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், செவ்வக கேமரா மாட்யூல், முன்புறம் பன்ச் ஹோல் கேமரா கட்-அவுட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஸ்மார்ட்போனின் வலதுபுறத்திலும், கீழ்புறத்தில் யுஎஸ்பி டைப் சி, ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :