ஆப்பிள் நிறுவனம் IOS 14.5 அப்டேட் வெளியிட துவங்கியது

Updated on 27-Apr-2021
HIGHLIGHTS

IOS 14.5 அப்டேட் வெளியிட துவங்கியது

ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பெரன்சி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது

புதிய மாற்றங்களுக்கு அனுமதி அளிக்காத செயலிகள் நீக்கப்படும் என ஆப்பிள் ஏற்கனவே தெரிவித்து விட்டது

ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 14.5 அப்டேட் வெளியிட துவங்கியது. இது செப்டம்பரில் வெளியாகும் முழு ஒஎஸ் அப்டேட் இல்லை எனினும், இது அசத்தலான புதிய அம்சங்களை வழங்குகிறது. முகக்கவசம் அணிந்த படி ஐபோனினை அன்லாக் செய்யும் வசதி, ஏடிடி எனப்படும் ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பெரன்சி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய மாற்றங்களுக்கு அனுமதி அளிக்காத செயலிகள் நீக்கப்படும் என ஆப்பிள் ஏற்கனவே தெரிவித்து விட்டது. ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு பின் சமர்பிக்கப்படும் செயலிகள் ஏடிடி திட்டத்திற்கு ஆதரவளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் ஆப்பிள் தெரிவித்து உள்ளது.

புது அப்டேட் வழங்கும் முக்கிய அம்சமாக ஏடிடி இருக்கிறது. இந்த அம்சம் சாதனத்தில் செயலிகள் பயனர் விவரங்களை சேகரிக்கும் முன் அவர்களின் அனுமதியை கேட்க வழி செய்துள்ளது. இந்த அம்சம் விளம்பர வியாபாரத்தை பெரிதும் பாதிக்கும் என பேஸ்புக் கருத்து தெரிவித்து இருக்கிறது.

ஐஒஎஸ் 14.5 அப்டேட் டூயல் சிம் 5ஜி, 200-க்கும் அதிக புது எமோஜிக்கள், புது வடிவமைப்பில் தடுப்பூசி எமோஜி, சிரி சேவையில் புது குரல்கள், விரும்பிய மியூசிக் பிளேயரை தேர்வு செய்யும் வசதி, பிஎஸ்5, எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் கண்ட்ரோலர்களுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :