இன்று முதல் தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் குரல் திட்டங்கள், டேட்டா டாப்அப்கள் மற்றும் அன்லிமிடெட் voice packs ஆகியவை அடங்கும். நுழைவு நிலை கட்டண குரல் திட்டம் பற்றி பேசுகையில், இது சுமார் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அன்லிமிட்டட் வொய்ஸ் பேக்குக்கு சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. நீங்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருந்தால், இன்று முதல் நீங்கள் பின்வரும் திட்டங்களை அதிக விலையில் வாங்க வேண்டி இருக்கும்.
ஏர்டெல் தனது ரூ. 49 சலுகையை நீக்கியது. இந்த சலுகையில் எஸ்.எம்.எஸ். பலன்கள் வழங்கப்படவில்லை. 28 நாட்களுக்கு ரூ.79 என்று இருக்கும் கட்டணத்தை ரூ.99 என்றும், ரூ.149 கட்டணத்தை ரூ.179 எனவும், ரூ.219 கட்டணத்தை ரூ.265 ஆகவும் உயர்த்தியுள்ளது. 1 வருடத்துக்கு ரூ.2,498 என்று இருக்கும் கட்டணத்தை ரூ.2,999 ஆக அதிகரித்துள்ளது.
எஸ்.எம்.எஸ். பலன்கள் அடங்கிய சலுகை கட்டணங்கள் தற்போது ரூ. 179 முதல் துவங்குகின்றன. முன்னதாக இந்த சலுகை விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 219 சலுகையின் விலை தற்போது ரூ. 265 என மாறி இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் பிரபல பிரீபெயிட் சலுகையான ரூ. 598 சலுகை கட்டணம் தற்போது ரூ. 719 என மாறி இருக்கிறது. இதில் பயனர்கள் 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா பெற முடியும். மற்ற பிரீபெயிட் சலுகை கட்டணங்கள் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது..
ரூ.698 திட்டத்தை ரூ.839க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். இத்துடன் அன்லிமிடெட் அழைப்பும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், ரூ.1,498 திட்டத்தை ரூ.1,799க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதில் பயனர்களுக்கு 365 நாட்களுக்கு 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் அழைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரூ.2,498 திட்டத்தை ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதில் அன்லிமிட்டெட் அழைப்பு வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி காலம் 365 நாட்கள்.ஆகும்