ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சமீபத்தில் தங்கள் ப்ரீ-பெய்டு திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. ஏர்டெல் திட்டங்களை விலையுயர்ந்ததாக மாற்றத் தொடங்கியது, அதன் பிறகு வோடபோன் ஐடியாவும் இப்போது ஜியோவும் தங்கள் திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளன. ஏர்டெல்லின் புதிய திட்டங்கள் நவம்பர் 26 முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. ஏர்டெல் திட்டங்களின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இன்றைய அறிக்கையில், 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் உள்ள சில ஏர்டெல் திட்டங்களைப் பற்றி பேசுவோம். தெரிந்து கொள்வோம்…
ரூ.300 க்கு கீழ் ஏர்டெல் வழங்கும் முதல் மற்றும் முதன்மையான திட்டம் ரூ.155 ஆகும். இதுவொரு ட்ரூலி அன்லிமிடெட் வாய்ஸ் கால் திட்டமாகும். இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளுடன், பயனர்கள் மொத்தம் 1ஜிபி டேட்டாவையும் பெறுகிறார்கள். இந்த திட்டத்துடன் பயனர்கள் மொத்தம் 300 எஸ்எம்எஸ்களையும் Amazon Prime வீடியோவிற்கான மொபைல் எடிஷனையும் (Free Trail) பெறலாம்.
பட்டியலில் அடுத்ததாக உள்ள ஏர்டெல் திட்டம் ரூ.179 ஆகும். இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு வரம்பற்ற அழைப்பு விருப்பத்தை வழங்குகிறது. உடன் அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் எடிஷனுக்கான இலவச ட்ரையலுக்கான சந்தாவுடன் பயனர்கள் மொத்தம் 2ஜிபி அளவிலான டேட்டாவையும் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் பயனர்கள் 300 எஸ்எம்எஸ்களையும் பெறுகிறார்கள்.
மேலே உள்ள இரண்டு திட்டங்களுக்கும் 300 எஸ்எம்எஸ்களை மட்டுமே இலவசமாக அனுப்ப அனுமதிக்கும், அதன்பிறகு அனுப்பும் ஒவ்வொரு எஸ்எம்எஸ்ஸுக்கும் ரூ.1 வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக உள்ள திட்டம் ரூ.239 ப்ரீபெய்ட் பிளான் ஆகும். இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும், பயனர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டாவையும் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும். உடன் மொபைல் எடிஷன் Amazon Prime வீடியோவின் இலவச சோதனை மற்றும் Wynk Musicக்கான அணுகல் போன்ற கூடுதல் நன்மைகளும் அணுக கிடைக்கும்.
பட்டியலில் நான்காவதக உள்ள திட்டம் மேலே கண்டதைப் போலவே உள்ளது. இந்த திட்டம் ரூ.265 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இது வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இதுவும் மொபைல் எடிஷன் Amazon Prime வீடியோவின் இலவச சோதனை மற்றும் Wynk Musicக்கான அணுகலை வழங்குகிறது.
கடைசியாக ரூ.300க்குள் வரும் ஏர்டெல் திட்டம் ரூ.299 ஆகும். இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்குகிறது. அமேசான் பிரைம் வீடியோ மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றுடன், இந்த திட்டம் ஷா அகாடமிக்கான அணுகல் மற்றும் இலவச ஹெலோட்யூன்கள் போன்ற சில கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.