Airtel மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன்' எனும் திட்டத்தை அறிவித்து இருக்கிறது
இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ. 249 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்த சலுகை பற்றிய முழு விவரங்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 'மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன்' எனும் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டம் கொண்டு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 6 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும்.
இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ. 249 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், முழு கேஷ்பேக் கிடைக்கும். குறைந்தபட்சம் ரூ. 12 ஆயிரம் அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
மீதமுள்ள ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் 36 மாதங்கள் ரீசார்ஜ் செய்ததும் வழங்கப்படும். இந்த சலுகை பற்றிய முழு விவரங்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
இந்த சலுகை அதிகபட்சம் 150 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பொருந்தும் என ஏர்டெல் அறிவித்து இருக்கிறது. ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் தொகை இருவழிகளில் வழங்கப்படுகிறது. 18 மாதங்கள் ரீசார்ஜ் செய்ததும் முதல் தொகையாக ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.