Airtel ஆக்சிஸ் பேங்குடன் சேர்ந்து அறிமுகப்படுத்தியது கிரெடிட் கார்ட்-

Updated on 08-Mar-2022
HIGHLIGHTS

ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்கஸ் செயலிக்கு சென்று இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 25 சதவீதம் கேஷ்பேக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்கஸ் செயலிக்கு சென்று இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கார்ட் ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் ரூ.500 அமேசான் இ-வவுச்சர் வழங்கப்படும்.

மொபைல், டிடிஹெச் ரீசார்ச், ஏர்டெல் பிளேக், எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ஆகிய சேவைகளுக்கு இந்த கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 25 சதவீதம் கேஷ்பேக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்ட்டை பயன்படுத்தி ஏர்டெல் சேவைகளுக்கு கட்டணம் செலுத்தும்போது 25 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும். மேலும் மின்சாரம், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பில் கட்டணங்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக், ஸ்விக்கி, ஜொமேட்டோ, பிக்பாஸ்கெட் ஆகியவற்றில் ஆர்டர் செய்யும்போது 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகின்றன.

"மறுபுறம், ஏர்டெல்லின் பரவலான அணுகல் மற்றும் மொபைலிட்டி மற்றும் டிடிஎச் முதல் பயன்பாட்டு பில் செலுத்துதல் வரையிலான சேவைகளை நாங்கள் பயன்படுத்துவோம், இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை அதிகரிக்க வாய்ப்பளிக்கிறது" என்று ஆக்சிஸ் வங்கியின் MD மற்றும் CEO அமிதாப் சவுத்ரி கூறினார்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :