Airtel, Vi மற்றும் Jio வின் 200 ரூபாய்க்குள் இருக்கும் அசத்தலான புதிய ரீசார்ஜ் திட்டங்கள்.

Updated on 18-Feb-2022
HIGHLIGHTS

இந்தியாவில் ஸ்மார்ட்போன் உபயோகமும், இண்டர்நெட் உபயோகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, விஐ ஆகிய நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டன.

ரூ.200-க்கும் குறைவான பட்ஜெட் விலையில் சில திட்டங்களும் உள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் உபயோகமும், இண்டர்நெட் உபயோகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல தொலை தொடர்பு நிறுவனங்களும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, விஐ ஆகிய நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இருப்பினும் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில், ரூ.200-க்கும் குறைவான பட்ஜெட் விலையில் சில திட்டங்களும் உள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

ஜியோ (Jio )

ஜியோவை பொறுத்தவரை 3 ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.200-க்கு கீழ் இருக்கின்றன. ரூ.149 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 20 நாட்களுக்கு வழங்கப்படும். அதேபோன்று ரூ.179 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 24 நாட்களுக்கு வழங்கப்படும்.

இதேபோன்று ரூ.119-க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 14 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகின்றன.

வோடபோன் ஐடியா (VI)

வி.ஐ வாடிக்கையாளர்களுக்கு 4 ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.200-க்கும் கீழ் வழங்கப்படுகின்றன. இதன்படி ரூ.155-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் கால்கள் , 300 எஸ்.எம்.எஸ், 1 ஜிபி டேட்டா ஆகியவை 24 நாட்களுக்கு வழங்கப்படும். 

அதேபோன்று ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் தரப்படும். இந்த திட்டத்தில் இலவச எஸ்.எம்.எஸ்கள் கிடையாது. ரூ.199 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 18 நாட்களுக்கு வழங்கப்படும். ரூ.179-க்கு அன்லிமிடெட் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்.எம்.எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படும்.இத்துடன் வி.ஐ மூவிஸ், டிவி ஆகிய சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் (Airtel )

ஏர்டெல் நிறுவனம் ரூ.200-க்கும் குறைவான விலையில் 3 ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. இதன்படி ரூ.99-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 200 எம்.பி டேட்டா வழங்கப்படும். அழைப்புகள் இந்த திட்டத்தில் இலவசம் கிடையாது. ஒரு நொடிக்கு ஒரு பைசா வசூலிக்கப்படும். லோக்கல் எஸ்.எம்.எஸ்-க்கு ஒரு ரூபாயும், எஸ்.டி.டி எஸ்.எம்.எஸ்-க்கு ரூ.1.50ம் வசூலிக்கப்படும். 

அடுத்ததாக ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தையும் ஏர்டெல் வழங்குகிறது. இதில் அன்லிமிட்டெட் அழைப்புகள், மொத்தமாக 1 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ்கள் 24 நாட்களுக்கு வழங்கப்படும். அதேபோன்றும் 30 நாட்களுக்கு அமேசான் பிரைமின் மொபைல் எடிஷன் ட்ரெயில், இலவச ஹெலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் ஆகியவை வழங்கப்படும்.

ரூ.179 ரீசார்ஜ் திட்டத்திற்கு மொத்தமாக 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ்கள், அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 30 நாட்களுக்கு அமேசான் பிரைமின் மொபைல் எடிஷன் ட்ரெயில், இலவச ஹெலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் ஆகியவையும் தரப்படுகின்றன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :