ஏர்டெல் அதன் ரூ.359 மற்றும் ரூ.599 தினசரி டேட்டா திட்டத்துடன் ரூ.50 தள்ளுபடி வழங்குகிறது.
இந்த திட்டங்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் சலுகையைப் பெறலாம்.
அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை அதன் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்துடன் வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்டெல் மட்டுமே.
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளுக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்குகிறது. எனினும், இந்த சலுகை ஏர்டெல் தேங்ஸ் செயலி பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் தேர்வு செய்யும் போது, கூடுதல் டேட்டா கூப்பன்களும் வழங்கப்படுகிறது.
ரூ. 359 விலையில் கிடைக்கும் ஏர்டெல் பிரீபெயிட் சலுகை தற்போது ரூ. 309-க்கு கிடைக்கிறது. இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 2 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ. 599 பிரீபெயிட் சலுகைக்கும் ரூ. 50 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை ரூ. 549 விலையில் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் தனித்தனியாக ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது, இது தினசரி 2ஜிபி டேட்டாவை அணுகும் மற்றும் 56 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இது 4ஜிபி டேட்டா கூப்பன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.