இனி சீனா ஆப் வேண்டாம் 52 சீன மொபைல் ஆப் தடை செய்ய முடிவு

இனி சீனா ஆப் வேண்டாம் 52 சீன மொபைல் ஆப் தடை செய்ய முடிவு
HIGHLIGHTS

52 சீன மொபைல் பயன்பாடுகளை இந்திய பாதுகாப்பு அமைப்பு அடையாளம் கண்டுள்ளது

டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர் போன்ற மொபைல் பயன்பாடுகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன.

தேசத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தடை செய்யப்பட வேண்டிய  52 சீன மொபைல் பயன்பாடுகளை இந்திய பாதுகாப்பு அமைப்பு அடையாளம் கண்டுள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கவோ அல்லது மக்கள் இவற்றை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட தேசிய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

இவை தவிர வால்ட்-ஹைடு, வீகோ வீடியோ, பிகோ லைவ், வெய்போ, வீசாட், ஷேர் இட், லைக், எம்ஐ கம்யூனிட்டி, யுகேம் மேக்கப், கிளீன் மாஸ்டர், கிளாஷ் ஆஃப் கிங்ஸ் போன்ற முன்னணி செயலிகள் தேசிய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இடம்பிடித்து இருக்கின்றன.

பாதுகாப்பு அமைப்பு அறிக்கையின்படி, இந்த பயன்பாடுகள் மூலம் நாட்டின் முக்கியமான பாதுகாப்பு தரவு இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்படுகிறது. டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர் போன்ற மொபைல் பயன்பாடுகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன.

ஆனால் பயனர் தரவை நாட்டிற்கு வெளியே அனுப்பும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்த நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo