Jio vs Airtel vs Vi: ஒரே மாதுரி விலை கொண்ட திட்டத்தில் ஜியோவையும் தோற்கடித்த வோடபோன் ஐடியா
Reliance Jio, Bharti Airtel, மற்றும் Vodafone Idea (Vi), இந்த மூன்று நிறுவனங்களும் கஸ்டமர்களுக்கு ஒரே விலையில் திட்டங்களை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் விலை ரூ,799 ஆகும் மேலும் இந்த மூன்று திட்டங்களையும் ஒப்பிட்டு எது அதிக நன்மை வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
SurveyReliance Jio,ரூ.799 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.799 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 1.5 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 84 நாட்கள ஆகும். இதற்கு சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.9.51 செலவாகும். இந்த திட்டத்துடன் 5G நன்மை எதுவும் இணைக்கப்படவில்லை.
Airtel ரூ.799 திட்டம்
பாரதி ஏர்டெல் ரூ.799 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 77 நாட்கள் ஆகும். இதன் விலை சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.10.38 ஆகும். இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 5G நன்மையும் இல்லை.
வோடபோன் ஐடியா ரூ.799 திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.799 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் 100 SMS/நாள் மற்றும் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 77 நாட்கள் ஆகும். மேலும், இந்த திட்டத்துடன் கூடுதல் சலுகைகளும் உள்ளன. பயனர்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவைப் பெறுவார்கள். இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு வார இறுதி டேட்டா ரோல்ஓவர் நன்மையையும் வழங்குகிறது. கஸ்டமர்களுக்கு 2 ஜிபி பேக்கப் டேட்டாவும் வழங்குகிறது.
இதையும் படிங்க :திடீர் என கண் முழித்து கொண்ட Vodafone Idea, பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ போல ரூ,200க்குள் வரும் பிளான்
FUP (ஸ்டேண்டர்ட் பயன்பாட்டுக் பாலிசி ) டேட்டா பிறகு, திட்டத்துடன் டேட்டா ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது. பல வட்டங்களில், இந்தத் திட்டம் பயனர்களுக்கு 5G ஐயும் இணைக்கிறது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.10.38 ஆகும், இது ஏர்டெல்லைப் போன்றது.
Jio vs Airtel vs Vi இதில் எது பெஸ்ட்?
இதுவரை jio தான் குறைந்த விலையில் அதிக நன்மை வழங்கியது, ஆனால் இங்கோ எல்லாரையும் விட வோடபோன் ஐடியா இந்த திட்டத்தில் பல மடங்கு டேட்டாவுடன் 5G நன்மையும் வழங்குகிறது, இங்கே, ஏர்டெல்லின் திட்டம் Vi மற்றும் ஜியோவின் சலுகைகளுக்குப் பின்னால் உள்ளது, இருப்பினும், இது Vi ஐ விட சிறந்த நெட்வொர்க்குகளைக் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile