இந்தியாவின் 5G விரைவில் அறிமுகமாகும் எப்போன்னு தெரிஞ்சிக்கோங்க.

Updated on 04-Mar-2022
HIGHLIGHTS

இந்தியாவில் வரும் சுதந்திர தினத்தன்று 5ஜி அறிமுகம் செய்யப்படும்

தொலைத்தொடர்புத் துறைக்கு (டிஓடி) பரிந்துரை செய்ய வேண்டும்

5ஜி அலைக்கற்றை ஏலத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் சுதந்திர தினத்தன்று 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் உள்ளிட்ட விஷயங்களில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு (டிஓடி) பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால் டிராய் இன்னும் பரிந்துரை வழங்காததால் 5ஜி அலைக்கற்றை ஏலத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து டிராய் தனது செயல்முறையை விரைவுப்படுத்தி இந்த மாதத்திற்குள் பரிந்துரையை சமர்பிக்க வேண்டும் என தொலைத்தொடர்புத்துறை கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு அறிக்கை சமர்பிக்கப்பட்டால் 5ஜி அலைக்கற்றை ஏலம் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும், வரும் ஆகஸ்டு 15-ம் தேதி 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் 6ஜி நெட்வொர்க்கும் இந்தியாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 6ஜி மேம்பாட்டிற்கு தேவையான அனுமதிகளை மத்திய அரசு முன்னதாகவே வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா (விஐ) உள்ளிட்ட 13 நிறுவனங்களின் 5ஜி சோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :