5000Mah பேட்டரி கொண்ட OPPO A53 அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது

Updated on 04-May-2021
HIGHLIGHTS

ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டது

ஒப்போ ஏ53 4ஜிபி+64ஜிபி விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 10,990 என மாறி இருக்கிறது

Oppo A53 எலெக்ட்ரிக் பிளாக், பேரி வைட் மற்றும் பேன்சி புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இரு வேரியண்ட்களின் புது விலை ப்ளிப்கார்ட் தளத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.
 
விலை குறைப்பின் படி ஒப்போ ஏ53 4ஜிபி+64ஜிபி விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 10,990 என மாறி இருக்கிறது. ஒப்போ ஏ53 6ஜிபி+128ஜிபி மாடல் விலை ரூ. 2500 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 12,990 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் பிளாக், பேரி வைட் மற்றும் பேன்சி புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

ஒப்போ ஏ53 அம்சங்கள்

– 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
– 4ஜிபி, 6 ஜிபி ரேம்
– 64ஜிபி, 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– 16 எம்பி செல்பி கேமரா
– கைரேகை சென்சார்
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :