டெலிகாம் நிறுவனங்களின் புத்தம் புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகை.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Jul 26 2019
Slide 1 - டெலிகாம் நிறுவனங்களின் புத்தம் புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகை.

டெலிகாம் நிறுவனங்கள் பல ஒன்றுடன் ஒன்றாக போட்டி போட்டு கொண்டு பல  அசத்தல் திட்டங்களை தினம் தினம்  கொண்டு வருகிறது. இதன்  இந்த  அதிரடி சலுகையிக்கு முதல் காரணமாக இருப்பது ஜியோ  தான் மேலும் இங்கு குறைந்த விலையில்  பல நிறுவனங்கள் அதிக  டேட்டாக்களை வழங்கி வருவது மட்டுமில்லாமல் அன்லிமிட்டட்  கால்கள் மற்றும் SMS  போன்றவை வழங்கி வருகிறது அந்த வகையில் நாம்  சமீபத்தில்  அறிமுகமான புத்தம் புதிய திட்டங்கள் என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

மேலும் இந்த டெலிகாம் நிறுவனங்களின் போட்டியில் பல  நிறுவனங்களில் BSNL,ஏர்டெல் ,வோடபோன்,ஐடியா மற்றும் ஜியோ போன்ற  நிறுவனங்கள் அடங்கியுள்ளது 

Slide 2 - டெலிகாம் நிறுவனங்களின் புத்தம் புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகை.

BSNL யின்  RS 186 மற்றும் RS 187 RECHARGE

BSNL ஆந்திரப்பிரதேச இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ரூ .186 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கும். முன்னதாக, இந்த திட்டத்திற்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி வழங்கப்பட்டது. இதில் அன்லிமிட்டட் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கால்கள் BSNL யின்  ரூ .186 ரீசார்ஜில் கிடைக்கின்றன, மேலும் பயனர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் . கூடுதலாக, நிறுவனம் தனிப்பட்ட ரிங் பேக் டோன்களுக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

ரூ .186 க்கு ப்ரீபெய்ட் திட்டத்தின் படி, ரூ .187 ரீசார்ஜ் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவிலும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள்  ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் தனிப்பட்ட ரிங் பேக் டோன்களுக்கான இலவச அணுகல் ஆகியவை அடங்கும். ரூ .187 புதுப்பிக்கப்பட்ட திட்டம் BSNL  கர்நாடக இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Slide 3 - டெலிகாம் நிறுவனங்களின் புத்தம் புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகை.

அமேசான் இலவச  பிரைம் சந்தா 

அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. BSNL  நிறுவன பிராட்பேண்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ. 745 விலைக்கு அதிகமான சலுகைகளை தேர்வு செய்வோருக்கு மட்டுமே அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. அமேசான் பிரைம் சந்தா ஒரு வருடத்திற்கு ரூ. 999 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்பொழுது ரூ. 499-க்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சலுகைகளுக்கும் அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. 

அமேசான் பிரைம் சந்தாவுடன் வருடாந்திர சலுகைகளில் கேஷ்பேக் பலன்களும் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவையை ஏற்கனவே பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும், புதிய வாடிக்கையாளர்களும் அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாக பெற முடியும்.

Slide 4 - டெலிகாம் நிறுவனங்களின் புத்தம் புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகை.

BSNL  பம்பர் சலுகை 

பம்பர் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜூலை 4 முதல் அக்டோபர் 1 வரை செல்லுபடியாகும் என்றும் BSNL அறிவித்துள்ளது. இந்த 2.2 ஜிபி டேட்டா சலுகை கடந்த ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்டது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம் .

பம்பர் சலுகையின் கீழ் ஒரு நாளைக்கு 2.2 ஜிபி கூடுதல் டேட்டா சேர்க்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், ஆனால் இந்த திட்டத்தின் செல்லுபடியை அதிகரிக்காது மற்றும் இதில் கால்கள் அல்லது செய்திகளில் எந்த நன்மையும் கிடைக்காது. டெலிகாம் டாக் அறிக்கையின்படி, இந்த சலுகை சென்னை வட்டத்தில் மட்டுமே உள்ளது, ஆனால் கேஜெட் 360 இன் அறிக்கையின்படி, பம்பர் சலுகை UP மேற்கு வட்டத்திலும் கிடைக்கும். 

Slide 5 - டெலிகாம் நிறுவனங்களின் புத்தம் புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகை.

வோடபோன் ரூ. 129 2 ஜி.பி டேட்டா 

வோடபோன் நிறுவனம் இந்தியாவில் அதன் புத்தம் புதிய சலுகையை அறிவித்துள்ளது இந்த திட்டமானது ஏர்டெல், ஜியோ  உடன் மோதும் விதமாக அமையும்.அதனை தொடர்ந்து இந்த புதிய திட்டத்தின் விலை  ரூ. 129 விலையில் வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த திட்டத்தின் கீழ்  தினமும் . 2 ஜி.பி. டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் போன்றவை வழங்கப்படுகிறது

Slide 6 - டெலிகாம் நிறுவனங்களின் புத்தம் புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகை.

JIO 102 ரூபாயின்  PREPAID PLAN.அமர்நாத் யாத்திரை 

புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 SMS. பலன்கள் ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் ரூ. 102 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என அறிவிக்கப்பட்டுள்ள 

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 102 பிரீபெயிட் சலுகை ஜம்மு காஷ்மீர் முழுக்க பல்வேறு விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் இதனை அமர்நாத் யாத்திரை நடைபெறும் வரை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஜியோ புதிய சலுகை அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இதில் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான வசதி வழங்ப்படவில்லை. இதுதவிர ஜம்மு காஷ்மீர் செல்லும் வாடிக்கையாளர்கள் அப்பகுதியில் புதிய உள்ளூர் இணைப்பைப் பெற்று புதிய சலுகையை பயன்படுத்தலாம்.

Slide 7 - டெலிகாம் நிறுவனங்களின் புத்தம் புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகை.

BSNL அமர்நாத் யாத்திரை சலுகை 

BSNL அமர்நாத் யாத்திரை சிம் கார்டு கட்டணம் ரூ. 230 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 333 நிமிடங்களுக்கு இலவச டாக்டைம், 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பத்து நாட்கள் ஆகும். அதிகளவு பயனர்கள் வருவார்கள் என்பதால் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் மற்ற மாநில சிம் கார்டுகள் வேலை செய்யாது என்பதால், BSNL நிறுவனம் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற்றிருக்கிறது.

சுற்றுலா பயணிகள் கூடும் வரவரேற்பு மையம் மற்றும் மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேம்ப்களில் பயனர்கள் தங்களின் அடையாளம் மற்றும் முகவரி சான்றிதழ் ஆதாரங்களை வழங்கி புதிய சிம் கார்டினை பெற்றுக் கொள்ளலாம். அமர்நாத் யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி துவங்கி ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

Slide 8 - டெலிகாம் நிறுவனங்களின் புத்தம் புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகை.

வோடபோன் 6ஜிபி டேட்டா சலுகை 

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 599 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் பயனர்களுக்கு 6 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

இச்சலுகையில் பயனர்களுக்கு மாதம் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் நேரலை டி.வி., திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை வோடபோன் பிளே செயலி மூலம் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

Slide 9 - டெலிகாம் நிறுவனங்களின் புத்தம் புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகை.

ABHINANDAN RS 151 PREPAID RECHARGE

Bharat Sanchar Nigam Limited (BSNL)  சமீபத்தில் 151 ரூபாய் யின் விலையில் ஒரு புதிய  prepaid recharge plan அதன்  பயனர்களுக்கு  அறிமுகம் செய்துள்ளது  டெலிகாம்  நிறுவனம் இந்த புதிய  திட்டத்தில் ஒரு சிறப்பு பெயர்  கொடுக்கப்பட்டுள்ளது  Abhinandan-151 Prepaid Recharge Plan அதன்  பயனர்களுக்கு அன்லிமிட்டட்  கால் தினமும் 1 GB  டேட்டா  மற்றும்  தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது. BSNL  யின்  புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் 24 நாட்களுக்கு  வேலிடிட்டி  உடன் வருகிறது.

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்,  BSNL  அதிகாரபூர்வமாக 151  ரூபாயில் இந்த ரிச்சார்ஜ்  திட்டத்தில் லிஸ்ட்  கொடுக்கப்பட்டுள்ளது. BSNL யின்  இந்த  திட்டத்தில் ப்ரோமோஷனல்  ஆபரின் கீழ் 90  நாட்களுக்கு இருக்கிறது. மற்றும் இந்த திட்டம் அனைத்துBSNL  பயனர்களுக்கு செல்லுபடியாக இருக்கும்.

தொடர்புடைய / சமீபத்திய போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements

பாப்புலர் போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.