டெலிகாம் திட்டங்களின் விலை உயர்வு எவ்வளவு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Dec 05 2019
Slide 1 - டெலிகாம் திட்டங்களின் விலை உயர்வு எவ்வளவு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

வோடபோன் ஐடியா  (Vodafone Idea)  மற்றும்  ஏர்டெல் (Airtel) யின் பிறகு  ரிலையன்ஸ் ஜியோ டெரிப் திட்டத்தை அதிகரிக்க அறிவிப்பு கொடுத்துள்ளது. நிறுவனம் டிசம்பர் 6 லிருந்து அதன் ஆல் யின் திட்டத்தில் 40 சதவிகிதம் வரை அதிகரிக்கப்படும். வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய கட்டணத் திட்டங்களை நிறுவனம் அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜியோவின் திட்டங்கள் டிசம்பர் 6 முதல் விலை உயர்ந்ததாக இருக்கும், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா டிசம்பர் 3 முதல் தங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது .

Slide 2 - டெலிகாம் திட்டங்களின் விலை உயர்வு எவ்வளவு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

வோடபோன் ஐடியா கட்டண உயர்வு விவரங்கள்
வோடபோன்-ஐடியா தனது புதிய மற்றும் விலையுயர்ந்த கட்டண திட்டங்களையும் அறிவித்துள்ளது. விலையுயர்ந்த திட்டங்கள் டிசம்பர் 3 முதல் செயல்படுத்தப்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக அதன் கட்டண விகிதங்களை விலை உயர்ந்ததாக மாற்றப்போவதாக நிறுவனம் கடந்த மாதம் கூறியது. டெலிகாம் டாக் யின் அறிக்கையின்படி, கட்டண அதிகரிப்புக்குப் பிறகு, வோடபோன்-ஐடியாவின் குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டம் ரூ .19 ஆகிவிட்டது. இதன் மூலம், நிறுவனம் இப்போது மற்ற நெட்வொர்க்குகளில் செய்யப்படும் அழைப்புகளுக்கான FUP லிமிட் நிர்ணயித்துள்ளது.

Slide 3 - டெலிகாம் திட்டங்களின் விலை உயர்வு எவ்வளவு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

புதிய விலைப்பட்டியலின் படி அன்லிமிட்டெட் சலுகைகள் ரூ. 149 முதல் துவங்கி, ரூ. 249, ரூ. 299 மற்றும் ரூ. 399 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 149 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, தினமும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ. 249 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Slide 4 - டெலிகாம் திட்டங்களின் விலை உயர்வு எவ்வளவு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

ரூ. 299 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ. 399 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. அனைத்து அன்லிமிட்டெட் சலுகைகளும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கின்றன.

 

Slide 5 - டெலிகாம் திட்டங்களின் விலை உயர்வு எவ்வளவு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகள் ரூ. 379, ரூ. 599 மற்றும் ரூ. 699 விலையில் கிடைக்கின்றன. அதன்படி ரூ. 379 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு மாதத்திற்கு 6 ஜி.பி. டேட்டா, 1000 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

 

Slide 6 - டெலிகாம் திட்டங்களின் விலை உயர்வு எவ்வளவு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

ரூ. 599 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ரூ. 699 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.

Slide 7 - டெலிகாம் திட்டங்களின் விலை உயர்வு எவ்வளவு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

இவற்றுடன் ரூ. 97, ரூ. 197, ரூ. 297 மற்றும் ரூ. 647 விலையில் ரீசார்ஜ் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 97 சலுகையில் ரூ. 45 டாக்டைம், 100 எம்.பி. டேட்டா, அழைப்பு கட்டணம் நொடிக்கு 1 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

Slide 8 - டெலிகாம் திட்டங்களின் விலை உயர்வு எவ்வளவு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

ரிலையன்ஸ் ஜியோவின் கட்டண உயர்வு விவரங்கள்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டங்களுக்கான கட்டணம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த நிறுவனமும் தனது கட்டணங்களை 40 சதவீதம் வரை அதிகரிக்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Slide 9 - டெலிகாம் திட்டங்களின் விலை உயர்வு எவ்வளவு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

மேலும் புதிய திட்டங்கள் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளது. இதன் மூலம் 300 சதவீதம் கூடுதல் பலன்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது.

Slide 10 - டெலிகாம் திட்டங்களின் விலை உயர்வு எவ்வளவு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

ஏர்டெல் திட்டங்களின் கட்டண உயர்வு விவரங்கள்.

ஏர்டெல் நிறுவன சேவை கட்டணங்கள் 14 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் 28 நாள் கட்டணம் ரூ.129-ல் இருந்து ரூ.148 ஆகவும், 84 நாட்கள் சேவை கட்டணம் ரூ.448-ல் இருந்து ரூ.598 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 365 நாட்களுக்கான கட்டணம் ரூ.1699-ல் இருந்து ரூ.2398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Slide 11 - டெலிகாம் திட்டங்களின் விலை உயர்வு எவ்வளவு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஐடியா ஆகிய இரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை கட்டண உயர்வு நாளை (டிசம்பர் 3) முதல் அமலுக்கு வருகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வருகிற 6-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளது.

தொடர்புடைய / சமீபத்திய போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements

பாப்புலர் போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.