சோனி எக்ஸ்பீரியா இசட் Review

எழுதியது Vishal Mathur | அப்டேட் ஆனது May 13 2015
சோனி எக்ஸ்பீரியா இசட் Review
DIGIT RATING
90 /100
 • design

  90

 • performance

  90

 • value for money

  70

 • features

  80

User Rating : 2.5/5 Out of 2 Reviews
 • PROS
 • புத்துணர்வூட்டும் வடிவமைப்பு
 • நீர்புகா, தூசி புகா கட்டுமானம்
 • மிக சிறந்த செயல்பாடு
 • சிறப்பான முழு உயர் வரையறை காட்சித்திரை
 • சிறந்த கேமரா
 • ரெட்ஒன் பயனர் முகப்பு நேர்த்தியாகவும், நெறிப்படுத்தப்பட்டும் உள்ளது
 • CONS
 • இன்னமும் அண்மைய அண்ட்ராய்ட் பதிப்பைக் கொண்டிராதது
 • கீறல் விழக்கூடிய கண்ணாடியாலான பின்புறம்

தீர்ப்பு

சோனி எக்ஸ்பீரியா இசட் மிக ஆற்றல் வாய்ந்த அண்ட்ராய்ட் ஸ்மார்ட் கைப்பேசி ஆகும். செயல்பாட்டை பொருத்த வரையில், கிட்டத்தட்ட இது ஹெச்டிசி பட்டர்ஃபிளை அளவு உள்ளது. ஆனால் எக்ஸ்பீரியா இசட், ஹெச்டிசி பட்டர்ஃபிளை-ஐ விட நீளமாகவும்,அகலமாகவும் இருப்பது, ஒரு சில உபயோகிப்பாளர்களுக்கு ஒத்து வராது. ஓரளவு நன்றான காட்சித்திரை கொண்ட இந்த கைப்பேசியின் ரெட்ஒன் பயனர் முகப்பும் நேர்த்தியாக உள்ளது. அண்ட்ராய்ட் ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் சோனி ஒரு பெரிய முயற்சியை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு இது சரியான உந்துதல் ஆகும். நாம் 2012-இல் பார்த்த அனைத்து எக்ஸ்பீரியா கைப்பேசிகளை காட்டிலும் இது மேம்பட்டு இருக்கிறது. சோனி நிறுவனத்தை உச்சத்தில் அமர வைக்கும் ஒரு அண்ட்ராய்ட் ஸ்மார்ட் கைப்பேசியாக இல்லாவிடினும், இந்த கைப்பேசியைக் கொண்டு, சோனி சரியான பாதையில் அடி எடுத்து வைத்துள்ளது. சோனி எக்ஸ்பீரியா-வின் விலை ரூ. 38,990 என இருக்கும் போது, ஹெச்டிசி பட்டர்ஃபிளை சற்று விலை அதிகமாக தோன்றுகிறது. மேலும் எந்தவொரு பெரிய செயல்பாடு நன்மைகளையும் அது அளிக்கவில்லை. எனவே எக்ஸ்பீரியா இசட் ஒரு நல்ல தெரிவாக இருக்கிறது.

இந்திய சந்தையில்,சோனி எக்ஸ்பீரியா,1080 படவரைப்புள்ளி முழு உயர் வரையறை ரெசொலுஷன் காட்சித்திரை வழங்கும் இரண்டாம் ஸ்மார்ட் கைப்பேசி ஆகும். அவ்வாறு முதலில் வழங்கியது ஹெச்டிசி பட்டர்ஃபிளை. பட்டர்ஃபிளை கைப்பேசியால் நாங்கள் பெரிதும் கவரப்பட்டோம். பரிசோதனை முடிவுகள், இதை சந்தையிலேயே வேகமான அண்ட்ராய்ட் கைப்பேசி என கட்டியம் கூறின. சோனி எக்ஸ்பிரியா இசட் ஹெச்டிசி பட்டர்ஃபிளை போன்றே வன்பொருளைக் கொண்டுள்ளது.  எனவே இது பட்டர்ஃபிளை-ஐ தோற்கடிக்க நிறைய வாய்ப்புள்ளது. எக்ஸ்பீரியா அதை செய்யுமா? அதைக் கண்டறிவோம்.

BUY சோனி எக்ஸ்பீரியா இசட்
Buy now on amazon கிடைக்கும் 32490
Buy now on flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 36883

சோனி எக்ஸ்பீரியா இசட் detailed review

கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு


எக்ஸ்பீரியா இசட்-இன் பலகை போன்ற வடிவமைப்பு, உடனே கவனத்தைக் கவரும் வண்ணம் உள்ளது. 2012 எக்ஸ்பீரியா கைப்பேசிகளில், வெவ்வேறு அளவுகளில் நாம் பார்த்த உருளையான விளிம்புகள் மற்றும் சற்றே வளைந்த பின் உறைக்கான காலம் போய் விட்டது.

இப்போதுள்ள எக்ஸ்பீரியா கைப்பேசி ஒரு பார் சாக்லேட் போல் தோற்றமளிக்கிறது. ஒரு 5 அங்குல கைப்பேசிக்கு, விளிம்புகள் மற்றும் நேர் கோடுகள் இணைந்து ஒரு அசத்தலான உருவத்தை தருகிறது. முன் பக்க 5 அங்குல காட்சித்திரை, அதீத பளபளப்பான கண்ணாடிக்கு கீழ் அமர்ந்துள்ளது. இந்த கண்ணாடி நொறுங்கா தன்மை மற்றும் கீறல் விழா தன்மை கொண்டது என சோனி கூறுகிறது. பின் பக்கத்திலும் இதே போன்ற கண்ணாடி உள்ளது. இது உண்மையிலேயே கைப்பேசிக்கு நல்ல பளபளப்பை தருகின்றது. பின்னால் இருக்கும் கண்ணாடியில், மிக எளிதாகவும், வேகமாகவும் கீறல் விழுகிறது. இது பல உபயோகிப்பாளர்களுக்கு நெருடலாக இருக்கும்.

முன் பக்கத்தில், காட்சித்திரைக்கு கீழே, எப்போதும் உள்ளது போன்ற தொடு பட்டன்கள் இல்லை எனக் கவனித்திருப்பீர்கள். இது திரையில் உள்ள பயனர் முகப்போடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இடது பக்கக் தண்டில், மைக்ரோ எஸ்டி கார்ட் பள்ளம் மற்றும் யூஎஸ்பி பள்ளம் ஆகியன உள்ளன. மேல்பக்கத்தில் 3.5 எம்எம் தலையணி ஒலிகேட்கும் கருவி இணைக்கும் துவாரம் உள்ளது.  வலது பக்கக் தண்டில் சிம் கார்ட் பள்ளம் உள்ளது. அனைத்து துவாரங்களும், மூடு பட்டையோடு உள்ளன. இவ்வாறு இருப்பதால் தான், எக்ஸ்பீரியா இசட் ஐபி57 நீர்ப்புகா மதிப்பீட்டை பெற்றுள்ளது.

பவர் விசை, வலது பக்க தண்டின் நடுப் பாகத்தில் உள்ளது. இது ஒரு கை இயக்கத்துக்கு பெரிதும் உதவும். மரபுபடி அது மேல் பகுதியில் இருந்தால், காட்சித்திரையை இயக்க அல்லது மூட, இரண்டாவது கையை கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய நிலை இருந்திருக்கும். பவர் விசைக்கு அருகில் ஒலி விசைகளும் இருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக சொல்வதென்றால், எக்ஸ்பீரியா நல்ல முறையில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. அதன் அளவு அனைவரும் பயன்படுத்தும் அளவு எளிதாக இல்லை. இதே அளவு காட்சித்திரை உள்ள ஹெச்டிசி பட்டர்ஃபிளை, வளைந்த விளிம்புகளை கொண்டிருப்பதால், கையடக்கமாக இருப்பதாக தோன்றுகிறது.

அம்சங்கள் மற்றும் விவரங்கள்

எக்ஸ்பீரியா இசட்-இல் உள்ள 5 அங்குல காட்சித்திரையைத் தான், சோனி, ரியாலிட்டி காட்சித்திரை என்றழைக்கிறது. இது 443 படவரைப்புள்ளி அளவைக் கொண்டுள்ளது. ஹெச்டிசி பட்டர்ஃபிளை-உடைய காட்சித்திரை இதே ரெசொலுஷன்-ஐக் கொண்டுள்ளது, ஆனால் சற்று குறைவாக 441 படவரைப்புள்ளி அளவுள்ளது. நிஜ வாழ்க்கை பயன்பாட்டில், எக்ஸ்பீரியா காட்சித்திரை நன்றாக இருக்கிறது. சிலிர்ப்பூட்டும் வண்ணம் உள்ள எக்ஸ்பீரியா காட்சித்திரை, தேவையான பிரகாச அளவோடு உள்ளது. மேலும் காட்சித்திரை சற்றே பிரதிபலிக்கும் தன்மையோடு உள்ளது. ஆனால் சோனி, எக்ஸ்பீரியா இசட்-இல் தானியங்கும் பிரகாச அமைப்பை செயல்படுத்தியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த அம்சம், சென்ற வருட உயர் தர எக்ஸ்பீரியா கைப்பேசிகளில் இல்லை.செய்தி உரை வார்த்தைகளை திரையில் வாசிக்கும்  எளிமை, மற்றும் அதன் கூர்மை ஆகியவற்றில் ஹெச்டிசி பட்டர்ஃபிளை கை ஓங்குகிறது.

ஒரு போது இல்லாததை விட தாமதமாக வருவது மேலானது. நான்கு உள்ளகங்கள் கொண்ட கைப்பேசியை உருவாக்க சோனி மேற்கொண்ட பயணத்தைக் குறிக்க இது ஒன்றே போதும். இதை செயல்படுத்த அவர்களுக்கு நேரம் எடுத்தாலும், அவர்கள் இப்போது நவ நாகரிகமான ஒன்றைக் கொடுத்துள்ளார்கள். எக்ஸ்பீரியா-வில் உள்ள 1.5GHz க்வால்காம் ஸ்நாப்டிராகன் எஸ்4 ப்ரோ மைய செயலி, ஹெச்டிசி பட்டர்ஃபிளை மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் ஜி-இல் உள்ளது போன்ற நான்கு உள்ளகங்களை கொண்டது தான். இதற்கு உதவ 2ஜிபி தற்காலிக நினைவகம் உள்ளது. இத்தகைய ஆற்றல்மிக்க தொழில்நுட்பங்களோடு, தற்போதைய நிலவரப்படி, பட்டர்ஃபிளை, இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அதி வேக அண்ட்ராய்ட் கைப்பேசி ஆகும்

எக்ஸ்பீரியா, அண்ட்ராய்ட் 4.1.2 இயங்குதளத்தோடு வருகிறது. 4.2-க்கான மேம்பாடு விரைவில் வெளியடப்படும் என்று சோனி அறிவித்துள்ளது. இது சற்றே ஏமாற்றமாக இருக்கிறது. இவ்வளவு விலை கொடுக்கும் போது, கைப்பேசி அண்மைய இயங்குதளத்தோடு வர வேண்டும் என எதிர்ப்பார்ப்பது, கண்டிப்பாக மிகையான ஒன்றில்லை. மேம்படுத்தப்பட்ட பயனர் முகப்பு, நேர்த்தியாக இருக்கிறது. முன்றைய தலைமுறையை சேர்ந்த, பாக்ஸ் வடிவிலான ஐகான்களுக்கு பதிலாக, வட்ட வடிவ ஐகான்கள் காணப்படுகின்றன. எல்லா குறுஞ்செயலிகளுக்கும் இவ்வாறு இல்லை என்றாலும், சோனி நிறுவன குறுஞ்செயலிகளுக்கு இவ்வாறு இருக்கின்றன. புது ரக சுவர் படங்கள் மற்றும் திரைக்கருகள், வரவேற்கத்தக்கது. ஆனால் எக்ஸ்பீரியாவின் நிரல் பலகை ரகம், ஹெச்டிசி, சென்ஸ் பயனர்முகப்பு கொண்டு, பட்டர்ஃபிளை-இல் தருமளவு இல்லை. கைப்பேசி திரையை திறக்க, விரல்களை திரைக்கு மேலே தேய்க்க வேண்டிய சைகை கட்டுப்பாடு, ஜன்னல் மறைவுத்தட்டிகளுக்கு இடையே விரல்களை விடுவது போல உள்ளது! கேமரா பயன்பாட்டை, பூட்டப்பட்ட திரை முகப்பில் இருந்து இயக்கலாம். ஆனால் அவ்வாறு இயக்கம் போது, நிறைய அமைப்புகள் கேமராவில் இல்லாதது விந்தையாக இருக்கிறது. 

காணொளி காட்சி ஆய்வு

நிஜ பயன்பாட்டில் கைப்பேசி எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய, சோனி எக்ஸ்பீரியா இசட் குறித்த, எங்களுடைய காணொளி காட்சி ஆய்வைப் பாருங்கள். இதில் கட்டுமான தரம் மற்றும் வடிவமைப்பு,  காட்சித்திரையின் செயல்பாடு, அண்ட்ராய்ட் இயங்குதளத்தின் மேல் செயல்படும் சோனி-யின் புதிய பயனர் முகப்பு ஆகியவற்றைப் பற்றி விரிவாக காணலாம்.

செயல்பாடு

எக்ஸ்பீரியா இசட், ஹெச்டிசி பட்டர்ஃபிளை-ஐ, முதல் ஒப்பீட்டளவு பரிசோதனையில் வென்ற போது, சிறிது குழப்பம் நிலவியது. க்வாட்ரன்ட் பரிசோதனையில், பட்டர்ஃபிளை 7744 மதிப்பெண்கள் பெற்ற போது, எக்ஸ்பீரியா இசட் 7863 மதிப்பெண்களை பெற்றது. சிறந்த ஆற்றல் மற்றும் அதி வேக செயல்பாடுக்கான குறியீடாக இந்த மதிப்பெண்கள்  இல்லையென்றால், வேறெதுவும் இதற்கு சான்றாக முடியாது. ஏஎன் டு டு பரிசோதனையில், ஹெச்டிசி 20905 மதிப்பெண்கள் பெற்று தன்னைக் காத்து கொண்டது. எக்ஸ்பீரியா இந்த சோதனையில் 18426 மதிப்பெண்கள் பெற்றது. ஸ்மார்ட்பெஞ்ச் 2012 பரிசோதனை, இதே போன்ற முடிவுகளையே தருகின்றது. பட்டர்ஃபிளை 4659 மதிப்பெண்களும், எக்ஸ்பீரியா இசட் 4882 மதிப்பெண்களும் பெற்றுள்ளது. எக்ஸ்பீரியா இசட்-இன் செயல்திறனை லேசாக எடுத்து கொள்ளக்கூடாது எனபதை இந்த பரிசோதனைகள் குறிக்கின்றன. அன்றாட பயன்பாட்டில், எக்ஸ்பீரியா, குறுஞ்செயலியை தொடங்கும் போதும் சரி, விளையாட்டை தொடங்கும் போதும் சரி எந்தவொரு மந்த நிலையையும், தொய்வையும் காட்டவில்லை. இருந்தாலும், ஆப் டிராயர் பயன்பாடு, எக்ஸ்பீரியாவில் இருப்பதை விட பட்டர்ஃபிளை-இல் சற்று விரைவாகவும், சீராகவும் இருக்கிறது.

எக்ஸ்பீரியா இசட்-இல், ஹெச்டிசி பட்டர்ஃபிளை-இல்  இருப்பது போலவே அட்ரீனோ 320 வரைகலை செயலி உள்ளது. அதற்கான ஒப்பீட்டளவு மதிப்பெண்கள் ஒரே அளவு இருக்கின்றன. நேனாமார்க்2 பரிசோதனையில் பட்டர்ஃபிளை 59.1 எஃப்.பி.எஸ்-உம், எக்ஸ்பீரியா இசட் 59.9 எஃப்.பி.எஸ்-உம் காட்டின. ஜிஎல் ஒப்பீட்டளவு பரிசோதனையிலும் இந்த செயல்திறன் ஒற்றுமை நிரூபிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பீரியா இசட் 6427 ஃப்ரேம்கள் பெற்ற போது போது, பட்டர்ஃபிளை 6528 ஃப்ரேம்கள் பெற்றது. செயல்பாட்டில் உள்ள வித்தியாசம் மிகவும் சிறியது. எனவே அதை புறக்கணிக்கலாம். நீங்கள் ப்ளேஸ்டோர்-இல் இருந்து தரவிறக்கும் எந்தவொரு விளையாட்டும், வன்பொருள் மீது அழுத்தத்தை கொடுக்காது.

எக்ஸ்பீரியா-வின் 13 எம்பி கேமரா, அதற்கு கொடுக்கப்படும் அதீத விளம்பரத்துக்கு தகுந்தவாறே உள்ளது. குறிப்பாக குறைந்த ஒளி செயல்பாட்டு விஷயத்தில். நோக்கியா லூமியா 920, குறைந்த ஒளி புகைப்படங்களை ஒளிர வைத்து, ஒரு செயற்கை ஒளியை தருகின்றது.
எக்ஸ்பீரியா கேமரா அது போல் அல்லாமல், குறைந்த ஒளி புகைப்படங்களை பிரகாசமாக காட்டுகிறது. ஆனால் இது செயற்கையாக தோன்றவில்லை. சில புகைப்படங்களைப் பார்த்தால், அது குறைந்த ஒளியில் எடுக்கப்பட்டதாகவே தோன்றவில்லை. இதுவே கேமராவின் திறனுக்கு சாட்சி. காலை வேளை மற்றும் நல்ல ஒளி உள்ள சூழலில், வண்ணச்செறிவு தேவையான அளவு இருப்பதோடு, ஏற்புடைய அளவு விவரங்களும் இருக்கின்றன. இந்த புகைப்படங்களை பெரிதுபடுத்தும் போது, கேமரா-வின், காட்சிப்பிழைகள் நீக்கும் நெறிமுறையின் செயல்பாட்டைக் காணலாம். அப்போது விவரங்கள் சற்றே மென்மை படுத்தப் படுகின்றன.  ஐஃபோன் 5 அல்லது ப்ளாக்பெரி இசட்10 புகைப்படங்களுடன் ஒப்பிடும் போது எக்ஸ்பீரியாவில் விளிம்பு ஓரத்தில் காட்சிப்பிழைகள் அதிகம் காணப்படுகின்றன. எத்தனை பேர் இதை கவனிப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதை செய்யாத மிகுதியானோர்க்கு, இது மிக சிறந்த கேமரா. 

கேமரா ஒப்பீடு அம்சத்தில், எங்களிடம் நிறைய புகைப்படங்கள் இருப்பதோடு, அதை ஐஃபோன் 5 புகைப்படங்களுடன் அருகருகே வைத்து ஒப்பிடலாம். 2012 எக்ஸ்பீரியா கைப்பேசி கேமராக்களை விட, இந்த கேமரா பெரியளவு மேம்பட்டது என்பதை எங்களால் கண்டிப்பாக கூற முடியும். எப்போதும் உள்ள தெரிவுகளான, இமேஜ் மற்றும் வீடியோ ஸ்டேபிலைசஷன், பனோரமா செயல்வகை, ஹெச்டிஆர் செயல்வகை ஆகியன இதில் உள்ளன. சுப்பீரியர் ஆட்டோ செயல்வகையை சோனி இதில் கூடுதலாக கொடுத்துள்ளது. இது, ஸ்டாண்டட் ஆட்டோ செயல்வகையின் எளிமையான வடிவமாகும். காணொளி காட்சி பதிவின் போதும், பனோரமா காட்சிப்படுத்துதல் போதும், ஹெச்டிஆர் செயல்வகையை உபயோகிக்க இயலும். ஆனால், நீங்கள் எதை காட்சிப்படுத்துகிறீர்களோ அதைப் பொருத்து, காட்சிகள் ஒரு சமயம் சிறப்பாகவும், ஒரு சமயம் சற்று செயற்கையாகவும் அமைகின்றது. ஒரு 5 அங்குல கைப்பேசியில், கேமரா உங்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக தோன்றுமானால்,எக்ஸ்பீரியா இசட், ஹெச்டிசி பட்டர்ஃபிளை-ஐ விட சிறப்பானதாகும்.

2330எம்ஏஹெச் பேட்டரியால் வழங்கப்படும் ஆயுள், ஒரு நாள் முழுதும் கைப்பேசியை இயக்க போதுமானதாக இருக்கிறது. நாங்கள் இதை முதன்மை கைப்பேசியாக பயன்படுத்தி பார்த்தோம். காலை ஏழு மணிக்கு 100% ஆற்றலும், இரவு 9 மணி அளவில் பேட்டரியை திறன் ஏற்றும் போது 10-12% ஆற்றலும் எஞ்சியிருந்தது. உட்புற பயன்பாட்டில் 20% பிரகாசமும், வெளிப்புற பயன்பாட்டில் தானியங்கும் பிரகாச அமைப்பும் தெரிவு செய்திருந்தோம். ஸ்டேமினா செயல்வகையை பயன்படுத்தினால், தரவு இணைப்புகளை கைப்பேசி நிறுத்தி விடுகிறது. அன்றாட பயன்பாட்டில் இது பெரிதாக உதவவில்லை எனினும், இந்த ஸ்டேமினா செயல்வகை கொண்டு பேட்டரியில் இருந்து இன்னும் அதிக ஆற்றல் பெறலாம்.
 
இறுதி வார்த்தை

செயல்பாட்டைப் பொருத்தவரை சோனி எக்ஸ்பீரியா இசட் ஏமாற்றமளிக்கவில்லை. சந்தேகமே இல்லாமல் இது, தற்போது இந்தியாவில் இருக்கும் ஒரு உயர் ரக அண்ட்ராய்ட் கைப்பேசி ஆகும். ஆனால் கைகளில் இருக்கும் போது இது ஹெச்டிசி பட்டர்ஃபிளை-ஐ விட சற்று பெரிதாக தெரிகின்றது. சற்று கூடுதல் அகலமும், நீளமும் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது. பலகை போன்ற வளைவுகள் இல்லாத வடிவமைப்பு வித்தியாசத்தை கூட்டுகின்றது.  வித்தியாசமான வடிவமைப்பை விரும்புகிறவர்களுக்கு இது பிடிக்க வாய்ப்புள்ளது. எக்ஸ்பீரியா-வின் அளவு உங்களுக்கு வசதியாக இருக்குமானால், கைப்பேசியின் மற்ற அம்சங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. மக்கள் விருப்பம் என்ற விஷயத்தில், இந்த கைப்பேசி கொண்டு சோனி நிறுவனம், ஹெச்டிசி பட்டர்ஃபிளை-ஐ முந்த இயலாது. வரவிருக்கும் காலக்சி எஸ்4 போன்றவற்றுடன் ஒப்பிடும் போது, இது எவ்வாறு செயல்படும் எனபது எங்களுக்கு தெரியாது. ஆனால் இந்த வருடத்தின் எஞ்சிய காலத்திற்கு, இந்த கைப்பேசி சோனியை ஒரு நல்ல நிலையில் வைத்திருக்கும்.

சோனி எக்ஸ்பீரியா-வின் விலை ரூ. 38,990 என இருக்கும் போது, ஹெச்டிசி பட்டர்ஃபிளை, சற்று விலை அதிகமாக தோன்றுகிறது. மேலும் எந்தவொரு பெரிய செயல்பாடு நன்மைகளையும் அது அளிக்கவில்லை. எனவே எக்ஸ்பீரியா இசட் ஒரு நல்ல தெரிவாக இருக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா இசட் Key Specs, Price and Launch Date

Expected Price:
Release Date: 06 Mar 2014
Variant: 16GB
Market Status: Discontinued

Key Specs

 • Screen Size Screen Size
  5" (1080 x 1920)
 • Camera Camera
  13.1 | 2.2 MP
 • Memory Memory
  16 GB/2 GB
 • Battery Battery
  2330 mAh
Vishal Mathur
Vishal Mathur

Email Email Vishal Mathur

About Me: https://plus.google.com/u/0/107637899696060330891/posts Read More

Install App Install App
Advertisements
Advertisements

சோனி எக்ஸ்பீரியா இசட்

சோனி எக்ஸ்பீரியா இசட்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status