ஒன்பிளஸ் Review

எழுதியது Prasid Banerjee | அப்டேட் ஆனது May 12 2015
ஒன்பிளஸ் Review
DIGIT RATING
86 /100
 • design

  79

 • performance

  83

 • value for money

  98

 • features

  87

User Rating : 4/5 Out of 1 Reviews
 • PROS
 • நல்ல உருவாக்க தரம்
 • உயர்வான செயல்திறன்
 • நல்ல பேட்டரி ஆயுள்
 • நம்ப இயலாத அளவு பைசா வசூல்
 • CONS
 • அவ்வளவாக பிரகாசமில்லாத திரை
 • இன்னமும் சிறப்பாக இருந்திருக்க வேண்டிய கேமரா தரம்
 • நிலையாக செயல்படாத சைனஜென்மோட்(CyanogenMod)
 • அழைப்புகளை ஏற்று பேசுகையில், மிகவும் குறைவான எதிர்முனை ஒலி

தீர்ப்பு

ஒன்பிளஸ் ஒன் ஸ்மார்ட் கைப்பேசி ஒரு கொளுத்தும் பட்டாசாகவே இருந்தாலும், அதை பெருமைப்படுத்தும் விதமாக வந்த  விமர்சனங்கள்,சற்று மிகையாக விளம்பரப்படுத்தியதாக தோன்றுகிறது. இந்த கைப்பேசியை தயாரித்துள்ள நிறுவனம், விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக சில சமரசங்களை செய்திருப்பதால், நீங்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக கிடைத்துள்ளதாகவே தோன்றும். இருப்பினும் தற்போதைய நிலவரப்படி, விலைக்கு உரிய மதிப்பை அளிக்க கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஒன்றாகவே இது திகழ்கின்றது. சைனஜென்மோட்(CyanogenMod) மற்றும் சேன்ட்ஸ்டோன்(Sandstone) வடிவமைப்பு புதியதொரு அனுபவத்தை தருகிறது. அறிவுசார்ந்த, அதிநவீன உபயோகங்களுக்கு தேவையான அதிகாரங்களை வழங்கும்  வகையில், முன்னமே ரூட்(pre-rooted) செய்யப்பட்டுள்ளது. ஒரு ஸ்மார்ட் கைப்பேசியை விட பெரிய திரையாகவும்,டேப்லட் கம்ப்யூட்டர்-ஐ(Tablet Computer) விட சிறிய திரையாகவும் இருக்கும், ஃபேப்ளட்-ஏ(phablet) தங்கள் விருப்பம் என்றால், இந்த கைப்பேசியே நீங்கள் தேடும் ஒன்றாகும். என்ன, இதை சொந்தமாக்க உங்களுக்கு அழைப்பு கிடைக்க வேண்டும், அவ்வளவுதான்.

BUY ஒன்பிளஸ்
Buy now on amazon அவுட் ஆஃப் ஸ்டோக் 19000
Buy now on flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 19499

ஒன்பிளஸ் detailed review

ஆய்வு


இந்த மாதம், இந்தியாவில் பல பெரிய கைப்பேசிகள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த கைப்பேசி குறித்த அறிவிப்பு ஒரு பொருத்தமான உச்சம் என கொள்ளலாம்.

2014-இன் ஃப்ளாக்ஷிப் கில்லர் (flagship killer) என்று அழைக்கப்படும், ஒன்பிளஸ் ஒன் கைப்பேசி, வெகு விரைவில் இந்தியாவில் கிடைக்க இருக்கிறது. அது வருவதற்கு முன்னரே அதை பயன்படுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டியது. இதற்கு மேலும் பேசாமல், நாங்கள் இதை குறித்து ஆய்வு செய்ததை பகிர்கிறோம்.

கட்டமைப்பு மற்றும் வடிவம்

ஒன்பிளஸ் ஒன், ஃபேப்ளட்(phablet) வகையறா-வை சேர்ந்ததால், அதன் பெரிய அளவு எதிர்பார்த்த ஒன்றே.
இருப்பினும் கைப்பேசியின், மேல் மற்றும் கீழ் பகுதியில் உள்ள பெசல்(bezel) எனப்படும், காட்சித்திரைக்கும், கைப்பேசி விளிம்புக்குமான இடைவெளி சற்று கத்தரிக்கப்பட்டிருக்கலாம். ஒப்போ ஃபைண்ட் 7 -ஐ (Oppo Find 7) நீங்கள் முன்னமே பார்த்திருந்தால், அதன் வடிவமைப்பை ஒத்தே ஒன்பிளஸ் ஒன் இருப்பதை உணர்வீர்கள். ஆயினும், ஒன்பிளஸ் ஒன் தன்னகத்தே சில மாறுப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது, கைப்பேசியின் பின் புறத்தில் உள்ள சேன்ட்ஸ்டோன் ஃபினிஷ்(Sandstone Finish). இது ஒரு தனிப்பட்ட அனுபவத்தை பயனாளருக்கு அளிக்கிறது.வடிவமைப்பை  பொருத்தமட்டில்,ஸ்மார்ட் கைப்பேசிகள், பழக்கப்பட்ட பாதையில் சிக்கி உள்ளதாகவே தெரிகிறது. வடிவமைப்பில் பொதுவாக பாலிகார்பனேட் பிளாஸ்டிக்(polycarbonate plastic) பயன்படுத்தபடுகிறது. உயர்ரக கருவிகள், உலோக வடிவமைப்பைக் கொண்டுள்ளன. 

 மோட்டோரோலா நிறுவனம்(Motorola), வித்தியாசமாக, மரத்தாலான பின்பகுதி, என முயற்சித்தது. இருந்தாலும் கூட, சேன்ட்ஸ்டோன் ஃபினிஷ்(Sandstone Finish)  இந்த கருவிக்கு முற்றிலும் தனித்துவமான அனுபவத்தை தருகிறது. இந்த கைப்பேசியில் அவ்வளவு சீக்கிரம் கீறல் விழுவதில்லை. அதுவே ஒரு கூடுதல் மதிப்பான அனுபவத்தை உண்டாகுக்கிறது.

5.5 அங்குல காட்சித்திரை, கைப்பேசியை பெரியதாக்குகிறது. 8.9 எம்எம் அளவு தடிமன் மற்றும் 162 கிராம் எடை, இதை ஒரு கனமான கருவி ஆக்குகின்றன.

தற்போது கிடைக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளில், மிகவும் பெரியது என எளிதாக கூறி விடக்கூடிய,ஒன்பிளஸ் ஒன் கைப்பேசி, கையடக்க கைப்பேசிகளை விரும்புவோருக்கானதல்ல. ஃபேப்ளட்(phablet) எனப்படும் வகையறா ஒன்று இருந்தால்,அதில் தான் இது சேரும்.

செவ்வக வடிவமைப்போடு, மேல்பக்கம் மற்றும் கீழ்ப்பக்கம் காணப்படும் வளைவுகளால், பார்க்க மிகவும் நன்றாகவே இருக்கின்றது. அதனோடு, முன் பகுதியில் உள்ள உலோக பூச்சு, பின் பகுதியுடன் சேர்ந்து, ஒரு மதிப்பான உணர்வை தருகின்றது.

காட்சித்திரை

எந்த அளவுக்கு காட்சித்திரை பெரிதோ, அந்த அளவுக்கு தவறுகளுக்கான வாய்ப்புகள் குறைவு. ஒன்பிளஸ் ஒன், 5.5 அங்குல முழு உயர் வரையறை(Full HD) காட்சித்திரை கொண்டுள்ளது. சூரிய வெளிச்சத்தில் நன்றாகவே வேலை செய்கின்றது. எளிதில் விரல் தடங்களும்,அழுக்கு தடங்களும் பதிந்தாலும், வெளிப்புற பயன்பாட்டில் இந்த கருவி எனக்கு எந்த ஒரு சிக்கலையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் நான் முன்னர் சொன்னது போல, பெரியதொரு காட்சித்திரை, அனைத்தையும் வெளிக் கொணர்வதால் தவறு நிகழும் வாய்ப்பு குறைவு. மற்ற முழு உயர் வரையறை ஸ்மார்ட் கைப்பேசிகளோடு ஒப்பிடும் போது, ஒன்பிளஸ் ஒன் காட்சித்திரை சற்று ஒளி குறைவாக தெரிகின்றது. விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக, நிறுவனம் செய்து கொண்ட சமரசம், இதற்கு காரணியாக இருக்கலாம்.

ஒட்டுமொத்தமாக, தங்களுக்கு பெரிய காட்சித்திரை விருப்பமானால், ஒன்பிளஸ் ஒன்-இன் 1080p திரை தங்களுக்கானது. வண்ணங்களின்  வெளிப்பாடு மோசமாக இல்லை. சைனஜென்மோட் 11, இதில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது.
 
செயல்திறன்

ஒன்பிளஸ் ஒன் குறித்து நாங்கள் அதிகம் படித்திருந்ததால், இதை குறித்த எங்கள் எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. ஸ்நாப்டிராகன் 801(Snapdragon 801) சிப் அமைப்பு மற்ற கைப்பேசிகளில் செயல்படுவதில் போலவே இதிலும் செயல்படுகின்றது. அதிக செயல் திறனை உபயோகப்படுத்தும் விளையாட்டுகள் மற்றும் பணிகளில் கருவி சூடேறுகிறது. அதிக செயல்பாட்டின்  விளைவுகள் கருவியை பாதிக்கும் முன்னர், என்னால் தொடர்ச்சியாக ஒரு 30 நிமிடம் கைப்பேசியில் விளையாட முடிந்தது. எனினும் அதிக சூட்டின் காரணமாக, கருவியைக் கையாளுவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் சூடு குறைந்து, குளிர்வடைய, கருவி சிறிது நேரம் எடுத்து கொள்கிறது.

இருந்தாலும் கூட, இயங்குதளம் சிறப்பாக செயல்படுவதை, 801 சிப் அமைப்பு  உறுதி செய்கின்றது.சில பயன்பாடுகள் செயலிழந்து நொறுங்குவதற்கு, எப்போதும் சொல்லபடுகின்ற மோசமான நினைவக நிர்வாகம் காரணியாக அல்லாமல்,நிலையில்லாத, வாசிப்பு மட்டும் அனுமதிக்க கூடிய நினைவகம்(ROM) காரணியாக இருக்கின்றது. கருவியை அட்டைப்பெட்டியில் இருந்து பிரித்து உபயோகப்படுத்த தொடங்கிய உடனேயே, மேற்சொன்ன சிக்கலுக்கான ஒரு மேம்பாடு கொடுக்கப்பட்டது. அது முதல் கைப்பேசியும் சீராக செயல்படுகின்றது.

கைப்பேசியின் செயல்திறன், சந்தையில் உள்ள மற்ற பிரதான கைப்பேசிகளின் செயல்திறன் அளவுக்கு இணையாக உள்ளது. அந்த இடத்தில தான் விலை பற்றிய பேச்சு உள் நுழைகிறது. சியோமி(Xiaomi) அதன் எம்ஐ4(Mi4) பதிப்பை சரியானபடி விலை நிர்ணயித்தால், ஒன்பிளஸ் ஒன் கைப்பேசிக்கு, அது மட்டுமே போட்டியாக இருக்க முடியும். செயல் திறனை பொறுத்தவரை இந்த கைப்பேசி, ஒரு மிருகத்தின் வேகத்தோடு செயல்படுகிறது. நான் முயற்சித்த வரையில், குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு வேறு ஒரு குறையும் என்னால் காண இயலவில்லை.

அழைப்புகளை ஏற்று பேசுகையில் எதிர்முனையின் ஒலி சற்று குறைவாகவே உள்ளது. எனினும் நிறுவனம் இதை நிவர்த்தி செய்யும் என நம்புவோம். வெளி இடங்களில் இருக்கும் போது, ஒலியை அதன் அதிகப்படி அளவு கூட்டி வைத்த போதும், எதிர்முனையில் இருந்து பேசுவதை கேட்பதில் எனக்கு சிறிது சிரமம் இருந்தது. ஒரு கைப்பேசியில் மோசமான அழைப்பு தரம் என்பது ஏற்க முடியாத ஒன்று. அழைப்புகளில் உள்ள ஒலிபெருக்கி பயன்பாடும், கீழே உள்ள இரு ஸ்டீரியோ ஒலிப்பெருக்கிகளும் அவ்வளவு மோசமாக இல்லை.

சைனஜென்மோட் 11எஸ்(CyanogenMod 11S)

ஒன்பிளஸ் ஒன்-இல், பெரிதும்  மாறுபடுத்தும் அம்சமாக இருப்பது, சைனஜென்மோட் 11எஸ் ஆகும். இது மற்ற அண்ட்ராய்ட்(Android) கைப்பேசிகளோடு ஒப்பிடும் போது,ஒன்பிளஸ் ஒன்-இற்கு ஒரு வித்தியாசமான, புதுமையான அனுபவத்தை தருகின்றது. முக்கியமாக, கைப்பேசி முன்னமே ரூட்(pre-rooted) செய்யப்பட்டதால், சூப்பர் யூசர்(super user) எனப்படும் உரிமையோடு வருகின்றது. இதன் காரணமாக ஒன்பிளஸ் ஒன், அறிவுசார்ந்த, அதிநவீன உபயோகங்களுக்கு தேவையான அதிகாரங்களை விரும்பும் பயனாளிகளின் கனவு கைப்பேசி ஆகும்.

குறிப்பு: கைப்பேசி முன்னமே ரூட்(pre-rooted) செய்யப்பட்டு வருவதில்லை. சைனஜென்மோட் இருப்பதால் சூப்பர் யூசர்(super user) உரிமைகள் பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு. எனினும் இதை பயன்படுத்த ரூட்(root) செய்வது அவசியம். ரூட்(root) செய்வதால் ஒன்பிளஸ் ஒன்-இன் வாரண்டி மீறப்படுவதில்லை.

கிட்கேட்(Kitkat)-இன் சிஎம்(CM) கிளை, பயனர்முகப்பை தனிப்பயனுக்கு தகுந்தவாறு மாற்றுவதற்கு வாய்ப்பளிக்கிறது. இது ஏனைய உற்பத்தியாளர்கள் அளிக்கும், பயனர்முகப்பு தனிப்பயன் அமைப்பை விட கூடுதலாகும். இதன் மூலமாக பட்டன்கள் முதல் ஐகான்ஸ்(icons), சுவர் பின்னணி படங்கள், திரைக்கரு வரை, என அனைத்தையும் மாற்றி அமைக்கலாம். சிஎம் தீம் ஸ்டோர்(CM theme store) மூலமாக பல திரைக்கரு பேக்குகளை தரவிறக்கம் செய்து அதில் உள்ள வெவ்வேறு அம்சங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து, உங்கள் கைப்பேசியின் தோற்றத்தையும், பயனர் அனுபவத்தையும் நீங்கள் விரும்பியவாறு அமைத்து கொள்ளலாம்.

நீங்கள் எங்களுடைய எம்ஐ(MI) பயனர் முகப்பு ஆய்வை படித்திருந்தீர்கள் என்றால்,அதில் உள்ள, எளிய பயன்பாடுகள் அனுமதி நிர்வாகம் குறித்து நாங்கள் எவ்வளவு ஈர்க்கப்பட்டோம் என்பதை அறிவீர்கள். அது சிஎம்(CM) கிளைக்கும் ஒத்து போகும். நீங்கள்  ப்ரைவசி(privacy)-க்குள் நுழைந்து, பயன்பாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை, ப்ரைவசி கார்ட் தெரிவின்(Privacy guard option) மூலமாக மாற்றி அமைக்கலாம்.

கப்பாசிடிவ் பட்டன்களில்(capacitive buttons) இருந்து முகப்பு திரைக்கு மாறும் வாய்ப்பும், பல்பணிகளை கையாளும் விசைகளும், பயனுள்ள அம்சங்களாகும். ஸ்டாக் அண்ட்ராய்ட்(Stock Android) இயங்குதள பயன்பாட்டை வசதியாக உணர்வீர்களானால், மேற்சொன்ன அம்சத்தின் பயன் விளங்கும். சிஎம்-இல்(CM) உள்ளகத்தே இருக்கும் மாறுபடா பயனர்முகப்பு, மெட்டீரியல் டிசைன்(Material Design) எனப்படும் கூகிள் நிறுவனத்தின் விரிவான வடிவமைப்பு கையேடு-களின் கோட்பாடு படியே உள்ளது. இருப்பினும் இது கூகிள்-இன் லாலிபாப்(Lollipop) வடிவமைப்பில் இருந்து மாறுபடுகிறது. துரித அமைப்பு மாற்றும் விசையை இயக்கியோ, அல்லது இரு விரல்கள் கொண்டு திரையை தேய்த்தோ கைப்பேசி அமைப்புகளை மாற்றுவதைக் காட்டிலும், மேல்வலது புறத்தில் இருந்து திரையை தேய்ப்பதால், துரிதமாக கைப்பேசி அமைப்புகளை மாற்றியமைக்கும் கீழ் விரி பட்டியலுக்கு(drop down menu) வர இயலும். ஸ்மார்ட் கைப்பேசியின் பெரிய திரை அளவை கருத்தில் கொள்ளும்போது இது விவேகமான செயலாகும்.

சைனஜென்மோட் ஒரு, நிலையற்ற, வாசிப்பு மட்டும் அனுமதிக்க கூடிய நினைவகம்(ROM) என்பதொரு சிக்கலாகும். நாங்கள் பெட்டியில் இருந்து எடுத்து கைப்பேசியை செயல்படுத்த தொடங்கியவுடன், இந்த சிக்கலுக்கான மேம்பாடு கிடைக்க பெற்றாலும், சில சமயங்களில் கருவி செயலிழந்து நின்றது. இதற்கு பெரும்பாலும், நிலையற்ற, வாசிப்பு மட்டும் அனுமதிக்க கூடிய நினைவகமே(ROM) காரணியாக இருக்கலாம். முன்பு சொன்னது போல, மைய செயலி சிறப்பாக செயல்படுகிறது. கிட்காட்-இல்(kitkat) நினைவக நிர்வாக திறனும் நன்றாகவே உள்ளது. ஆயினும், வாசிப்பு மட்டும் அனுமதிக்க கூடிய நினைவக(ROM) செயல்பாடு நம்மை சிந்திக்க வைக்கிறது.

பல பயனர்கள் முன்னமே குறிப்பிட்டது போல, ஒன்பிளஸ் ஒன்-இலும், கோஸ்ட் டச்(ghost touch) எனப்படும்  செயல்படாத திரை(unresponsive screen) சிக்கல்  இருக்கிறது.

இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், நிறுவனம் ஓ.டி.ஏ(OTA) வழியாக மேம்பாட்டை அளித்திருந்தாலும், எங்களிடம் இருந்த பரிசோதனை கருவியில் நாங்கள் இந்த சிக்கலை சந்திக்க நேர்ந்தது. இது வன்பொருள் சிக்கலா, மென்பொருள் சிக்கலா என தெரியவில்லை. இருப்பினும் ஒரு  ஓ.டி.ஏ(OTA) வழி மேம்பாடு  இந்த பிரச்சனையை நீக்க இயலாத போது, இதற்கு காரணம் வன்பொருள் குறைப்பாடே என நான் கருதுகிறேன்.

அன்றாட பயன்பாட்டில், இந்த கருவி போதுமானதை விட நன்றாகவே வேலை செய்கின்றது. முன்பு கூறிய சில தருணங்களை தவிர்த்து, பயனர் முகப்பு, நுட்பமாகவும், விரைவாகவும் செயல்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில அம்சங்களும் உள்ளன. அதில் ஒன்று, திரைக்கு மேலே தோன்றும் அறிவிப்புகள்(heads up notifications). இது போன்ற அம்சங்கள் நன்றாகவே இருந்தாலும், சிஎம்(CM) இதனை செம்மைபடுத்த வேண்டும். கைப்பேசி கிடைத்த முதல் மாதத்தில், ஒவ்வொரு பட்டியலிலும் உள்ள பல்வேறு தெரிவுகளை தெரிந்து கொள்வதிலேயே, நீங்கள் நேரம் செலவிட வாய்ப்பு உள்ளது.

பேட்டரி

அண்மையில் நான் ஐபோன் 6(iPhone 6) குறித்த எனது ஆய்வில், ஐபோன்-இன் செயல் திறனுக்கு கருவியின் பேட்டரி துணை செய்யாததை பற்றி கூறியிருந்தேன். விளையாட்டு அனுபவத்தை பொருத்தமட்டில் ஐபோன் சிறப்பானதாக இருந்தாலும்,அதற்கு உதவும் பேட்டரி ஆயுள், கருவியிடமில்லை.ஆனால் ஒன்பிளஸ் ஒன் கைப்பேசி அவ்வாறில்லை. அன்றாட பயன்பாட்டின் போது, சிறிதளவு கைப்பேசியில் விளையாட்டு விளையாடிய பிறகு, 30-35%  பேட்டரி ஆற்றல் மட்டுமே கொண்டு, ஒரு நாள் முழுதும் இந்த கருவி செயல்பட்டது.  என்னுடைய வழக்கமான விளையாட்டு அளவு சற்றே அதிகம். அந்த நிலையிலும் கூட,குறைந்த பேட்டரி ஆற்றல் குறித்த முன்னறிவிப்பு திரையில் தோன்றும் வரை, எஞ்சிய பேட்டரி ஆற்றல் கொண்டே அந்த நாளை ஓட்ட முடிந்தது. நான் எப்போதும் திரையின் ஒளி அளவை அதன் அதிகபட்ச அளவில் வைப்பதே வாடிக்கை. இந்த திரைஒளி அளவை குறைத்து வைத்திருந்தால், கைப்பேசி இன்னும் சில மணி நேரங்கள் நீடித்து உழைத்து இருக்கும்.

எங்களுடைய பேட்டரி பரிசோதனையில், ஒன்பிளஸ் ஒன் கைப்பேசி ஐபோன் 6 போலவே முடிவுகளை காட்டியது.11% பேட்டரி ஆற்றல் மட்டுமே இழந்தது. விளையாடும் போது,ஐபோன் 6 போல இது அவ்வளவு சீக்கிரம் பேட்டரி இழப்பதில்லை. ஒன் பிளஸ் ஒன், தன் மைய செயலியின் வேகத்தை குறைப்பதே இதற்கு காரணமாக இருக்கும். ஐபோன் 6 அவ்வாறு மைய செயலியின் வேகத்தை குறைப்பதில்லை. அண்ட்ராய்ட் போன்களான எல்ஜி3(LG 3) மற்றும் சாம்சங் காலக்சி நோட் 4(Samsung Galaxy Note 4), ஒன்பிளஸ் ஒன் போலவே பேட்டரிகள் கொண்டுள்ளது. ஆனால் ஒன்பிளஸ் ஒன்-ஐ விட செறிவான திரைகள் இவற்றில் உள்ளன. எனினும் ஒன்பிளஸ் ஒன் பேட்டரி-ஐ விட, சற்று கூடுதலான பேட்டரி ஆற்றலை இந்த கைப்பேசிகள் தருகின்றன.

எண்களை கொண்டு தரம் அறிய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள, பிசி மார்க்(PC Mark) எனப்படும் அண்ட்ராய்ட் ஒப்பீட்டளவு மதிப்பெண்கள் கொண்டு முடிவு செய்து கொள்ளுங்கள்.

இரண்டாம் தலைமுறை மோட்டோ எக்ஸ்(Moto X 2nd Gen), ரூ.31,999 என விலை நிர்ணயிக்கிப்பட்டுள்ள நிலையில், காலக்சி ஆல்பா(Galaxy Alpha) மற்றும் ஆனர் 6(Honor 6), முறையே ரூ.39,990 என்றும், ரூ.19,999 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேமரா

ஒன் பிளஸ் ஒன்-இன் 13 MP கேமரா, புகைப்பட கலையில் அதிகம் ஆர்வம் இல்லாதோர்க்கு, போதுமானதாக தோன்றினாலும், சிறப்பான செயல்பாடாக அது ஜொலிக்கவில்லை. சாதாரண ஒளி அமைப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நிறைவாக தோன்றவில்லை. மேலும் ஆட்டோ-ஃபோகஸ்(auto-focus) மெதுவாக இயங்குகிறது. ஒளி கட்டுப்பாடு குறித்து ஒரு அமைப்பும் இல்லாததால், சிறிய பொருட்கள் கூட பெரிதாக காட்சி படுத்தப் படுகின்றன. ஒளிஅமைப்பு சரி இல்லாத சூழ்நிலைகளில், கேமரா-வின் குவிமையம் அதிகமாக திணறுகிறது. சியோமி எம்ஐ 3-இன்(சியோமி மி 3) 13MP கேமரா, ஒன்பிளஸ் ஒன்-இன் கேமரா-வை விட வெகு சிறப்பாக இருக்கின்றது.

எனினும் , ஒன்பிளஸ் ஒன்-இன் 5 MP முன்பக்க கேமரா பரந்த காட்சி புலத்தை கொண்டு சிறப்பான ஒன்றாக திகழ்கின்றது. ஒன்பிளஸ் ஒன் கொண்டு செல்ஃபி(selfie) எடுக்க இயலும் என யார் எதிர்பார்த்தார்கள்? ஆம், இது ஒன்பிளஸ் ஒன்-இல் சாத்தியமே.

மேலும், மங்கலான காட்சியமைப்பை சீர் செய்யக்கூடிய இமேஜ் ஸ்டேபிலைசேஷன்(image stabilisation) தெரிவு, இல்லாததால், காணொளி காட்சிகள் அவ்வளவு நன்றாக அமையவில்லை. ஒன்பிளஸ் ஒன்-இல் இருக்க கூடிய டிஜிட்டல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்(digital image stabilisation) எப்போதுமே சிறப்பானதாக இருந்ததில்லை.

எனவே உங்களுடைய 1080p காணொளி காட்சிகள் சற்று நிலையில்லாத கைகளினால் பாதிக்கப்படலாம். விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக செய்யப்பட்ட ஒரு சமரசமே இது.

இறுதிவார்த்தை

இந்த கைப்பேசியின் விலையை கவனிக்காமல் மேலோட்டமாக செல்ல முடியாது. இந்த கைப்பேசி ஒவ்வொரு பைசாவிற்கும் உரிய மதிப்பை தருகின்றது. இதன் விலையை மட்டும் கருத்தில் கொண்டு, பல விமர்சனங்கள், இதன் குறைகளை மன்னித்துள்ளன. இந்த கைப்பேசியை வாங்க நீங்கள் முடிவு செய்திருந்தால், இது வரை படித்த விமர்சனங்களை மறந்து விடுங்கள். ஃபேப்ளட்-ஐ(phablet) நீங்கள் விரும்வீர்களானால்,ஒன்பிளஸ் ஒன் கைப்பேசி, அதன் விலைக்கு உரிய மதிப்பை தருகின்றது.  இந்த விலையில் தருவதற்காக கைப்பேசியில் சில சமரசங்கள் செய்யப்பட்டுள்ளன. சியோமி, எம்ஐ 3-க்கு(Mi 3) இது போன்ற சமரசங்களை செய்தது. எம்ஐ 4-க்கும்(Mi 4) செய்யவுள்ளது.

தெறிக்கும் பட்டாசாக இந்த ஸ்மார்ட் கைப்பேசி இருந்தாலும், இந்தியாவில் இயக்கத்தை தொடங்குவதில் சற்று தாமதப்பட்டதாக தெரிகிறது. சீன உற்பத்தியாளரான சியோமி(Xiaomi), ஒன்பிளஸ் ஒன்-இற்கு நல்ல போட்டியாக இருக்கும். சியோமி, எம்ஐ 4-ஐ(Mi 4) சந்தைப்படுத்தும் போது, ஒன்பிளஸ் ஒன் உடன் இணைந்து, தற்போதைய நிலவரப்படி, சந்தையில் மக்கள் ஆர்வத்தை தூண்டுகிற வண்ணம் கைப்பேசியை உற்பத்தி செய்யும் இருவர், என திகழ்வர்.

ஒன்பிளஸ் Key Specs, Price and Launch Date

Price:
Release Date: 13 Jul 2015
Variant: 64GB
Market Status: Launched

Key Specs

 • Screen Size Screen Size
  5.5" (1080 x 1920)
 • Camera Camera
  13 | 5 MP
 • Memory Memory
  64 GB/3 GB
 • Battery Battery
  3100 mAh
logo
Prasid Banerjee

Trying to explain technology to my parents. Failing miserably.

Advertisements
Advertisements

ஒன்பிளஸ்

Buy now on amazon ₹ 19000

ஒன்பிளஸ்

Buy now on amazon ₹ 19000

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status