மோட்டோ எக்ஸ் (இரண்டாம் தலை Review

எழுதியது Prasid Banerjee | அப்டேட் ஆனது May 12 2015
மோட்டோ எக்ஸ் (இரண்டாம் தலை Review
DIGIT RATING
86 /100
 • design

  88

 • performance

  86

 • value for money

  94

 • features

  82

User Rating : 4/5 Out of 2 Reviews
 • PROS
 • சீரான, எந்தவொரு பின்னடைவும் இல்லாத செயல்திறன்.
 • நல்ல கட்டுமான தரம். தோல் மற்றும் மரம் அளிக்கும் உயர்ரக அனுபவம்.
 • முழு உயர் வரையறை காட்சித்திரை மிக பிரகாசமாகவும், உயர் தரத்தோடும் இருப்பது.
 • சிறப்பான பேட்டரி ஆயுள்.
 • CONS
 • மட்டமான கேமரா தரம்.
 • எளிதாக கீறல் விழக்கூடிய தோல் பின்னுறை.

தீர்ப்பு

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ், தன்னுடைய புதிய அவதாரத்தில், உண்மையான பிரதான கைப்பேசியாக, சொல்லில் இருப்பதோடு மட்டும் அல்லாமல், செயல்திறனிலும் அதை காட்டுகிறது. இது, விலைக்கு தகுந்த மதிப்பை கொண்டிருந்தாலும், அதன் பல நிறைகளை, குறைபாடுகள் வீழ்த்தி விடுகின்றன. மட்டமான கேமரா மற்றும் வரையறுக்கப்பட்ட சேமிப்பகம், அதனுடைய விற்பனையை பாதிக்கலாம். ஆனாலும், ஏனைய விஷயங்களில், கைப்பேசி ஒரு சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளது.

இந்த ஆய்வை நான் தொடங்கும் முன்,முழுமையாக விவரங்களை தெரிவிக்கும் விதமாக,நான் இந்த மோட்டோ எக்ஸ்-ஐ சொந்தமாகி பயன்படுத்துவதோடு, இதை முழுமையாக விரும்புவதை இங்கே குறிப்பிடுகிறேன். ஆகையால் இந்த கருவியின் இரண்டாம் தலைமுறை பதிப்பை பயன்படுத்துவதில் நான் சந்தோஷமடைவது இயற்கையே. இந்த முறை, மோட்டோரோலா, சந்தைக்கு கொண்டு வந்துள்ளவற்றை காண்போம். ஒட்டுமொத்தமாக, உண்மையான, பிரதான அண்ட்ராய்ட் கைப்பேசியான, இரண்டாம் தலைமுறை மோட்டோ எக்ஸ், எல்லா வகையிலும் சிறப்பானதாக இல்லை என்றாலும், அதன் முந்தைய மோட்டோ எக்ஸ் பதிப்பின், சிறந்த மேம்பாடாக உள்ளது.

மோட்டோ எக்ஸ் (இரண்டாம் தலை detailed review

கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு


புதிய மோட்டோ எக்ஸ் இரண்டு வகையில் கிடைக்கிறது. அதன் முந்தைய பதிப்பை போலவே, மரப்பின்னுறையைக் தக்க வைத்தாலும்,இரண்டாம் தலைமுறை கருவி, நெகிழி உறைக்குப் பதிலாக, தோல் பின்னுறையைக் கொண்டுள்ளது. மரப்பின்னுறை இல்லாமலும்,ஒரு பிரதான ஸ்மார்ட் கைப்பேசி அளிக்க வேண்டிய,நல்ல உயர்ரக அனுபவத்தை அளிக்கின்றது.மர உறையை விட, விலை மலிவான தோல் பின்னுறையே, கைப்பேசியின் புதிய பதிப்பில், பார்க்க நன்றாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இந்த கைப்பேசியின் அளவு எனக்கு ஒத்து வரவில்லை என்பதை நான் குறிப்பிட வேண்டும். என்னைப் பொருத்தவரை, கைப்பேசிகள், கைக்கு அடக்கமாகவும், பிடித்து கொள்ள எளிதாகவும் இருக்க வேண்டும். 5.2 அங்குல, இரண்டாம் தலைமுறை மோட்டோ எக்ஸ், அதன் மூலமுதலின் வடிவத்திற்கு, எந்த வகையிலும்,அருகாமையில் இல்லை. இருப்பினும்,தற்போதுள்ள சந்தை நிலவரத்தின்படி,இது ஒரு சிறப்பான வடிவமே ஆகும். உங்களுக்கு பெரிய கைப்பேசிகள் பிடிக்குமானால், நான் அளவைக் குறித்து எண்ணியதைப் போல்,நீங்கள் எண்ணுவதற்கு எள்ளளவும் வாய்ப்பில்லை.

மோட்டோரோலா கருவியை மேலும் மெலிதாக்கி உள்ளதோடு, வளைந்த பின்பாகம் ஒரு நல்ல பிடிப்பை தருகிறது. பக்கங்களில் உள்ள உலோக விளிம்புகள்,கைப்பேசியின் உயர் தரத்தை மேலும் கூட்டி, இதை உண்மையிலேயே ஒரு உயர்ரக கருவி ஆக்குகின்றது.

கைப்பேசி, தோல், மரம், மீள்மப்படுத்தப்பட்ட நெகிழி என பல வகைகளில் வருகிறது. இவற்றுள் நெகிழி வகையறா மிகவும் மலிவானதாகும். இந்தியாவில், தோல் மற்றும் மரம் இரண்டும், ரூ.33,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீள்மப்படுத்தப்பட்ட நெகிழி வகையறா ரூ. 31,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது, மீள்மப்படுத்தப்பட்ட நெகிழி வகையறா, விலை மலிவாக இருந்தாலும், உயர்தர அனுபவத்தை அளிப்பதோடு, கைகளில் பார்ப்பதற்கு நன்றாகவும் தோன்றுகிறது.

காட்சித்திரை மற்றும் பயனர்முகப்பு

மோட்டோ எக்ஸ்-இல் அடுத்த பெரிய மாற்றம், அதனுடைய 1080p படவரைப்புள்ளி காட்சித்திரை. அமோலேட்(AMOLED) காட்சித்திரை, பிரகாசமாக இருப்பதோடு, சிலிர்ப்பூட்டும் வண்ணங்களை அளிக்கின்றது. மேலும், மற்ற மோட்டோரோலா ஸ்மார்ட் கைப்பேசிகள் போலவே கார்னிங் கொரில்லா கண்ணாடி-இன் மூன்றாம் பதிப்பு(Corning Gorilla glass 3), ஸ்மார்ட் கைப்பேசிக்கு,பாதுகாப்பு அளிப்பதோடு, உயர்தர உணர்வையும் தருகிறது.இந்த கைப்பேசியில் காணொளி காட்சிகள் காண்பதும், விளையாட்டுகள் விளையாடுவதும் ஒரு இன்ப விருந்தாக அமைந்தது. அதன் மூலமுதலான மோட்டோ எக்ஸ்-ஐ அதிக வித்தியாசத்தில் வீழ்த்துகிறது. ஏனைய பிரதான கைப்பேசிகளோடு ஒப்பிடும் போது, ஒரு சிலவற்றை விட சிறப்பாக இல்லை என்றாலும், இணையாக உள்ளது.

திரையின் ஒளிஅமைப்பு காரணமாக, நல்ல சூரிய வெளிச்சத்திலும், திரை பார்க்கக்கூடிய வகையில் உள்ளது.
இதற்கு, ஓரளவு விரல்பதிவுகள் படராதவாறு அமைக்கப் பட்டுள்ள திரை, உதவுகிறது. அழுக்கு தடங்கள் படிந்தாலும்,அது ஒரு குறையாக இல்லை.

மோட்டோ எக்ஸ் பயனர்முகப்பு பார்க்க நன்றாக இருக்கின்றது. 5.2 அங்குல காட்சித்திரை அதிக திரை இடத்தை தருகின்றது. அண்ட்ராய்ட் 4.4.4 பயனர்முகப்பு சீராகவும், எந்த குறைப்பாடுகள் இல்லாமலும் இயங்குகிறது. அதோடு, அதிகப்படியான காட்சித்திரை இடத்தை, நமக்கு நினைவுப்படுத்தும் விதமாக இயங்குகிறது. குறிப்பாக, ஆப்ஸ் டிராயர்(Apps Drawer) உள் நுழைந்து, ஐந்து வரிசையில் உள்ள பயன்பாட்டு ஐகான்களை, ஒன்றாக காணும் போது, திரையின் பெரிய அளவை உணர முடிகிறது. என்னுடைய அத்தனை பயன்பாடுகளுக்கும் மூன்று திரையே போதுமானதாக இருந்தது.

செயல்திறன்

இந்த புதிய மோட்டோ எக்ஸ்-இன் உடைய பெரிய அளவுக்கு, நான் விசிறி இல்லை. இதனுடைய காட்சித்திரையின் வசீகரத்தை மட்டும் கருத்தில் கொண்டு, இந்த கைப்பேசியை விலை கொடுத்து வாங்க என்னால் இயலாது. எனவே தான், மோட்டோரோலா, ஸ்நாப்டிராகன் 801 சிப் அமைப்பை இந்த கருவியில் நிறுவி உள்ளது.இந்த கருவி, மோட்டோரோலா மொபைல் கம்ப்யூடிங் சிஸ்டம்-ஐ(Motorola Mobile Computing System) தன்னகத்தே கொண்டுள்ளது. இதுவே இதன் முந்தைய பதிப்பு, சிறப்பாக இருந்ததற்கு பாதி காரணமாகும். மேலும் முந்தைய பதிப்பில் இருக்கும் ஸ்நாப்டிராகன் எஸ்4 ப்ரோ(Snapdragon S4 Pro),இன்னமும் பலவீனமாகவே உள்ளது. 

801 ஒரு வகையில், பிரதான கைப்பேசிக்கான இறுதி வடிவை தருவதில் பங்களிக்கிறது. கைப்பேசியின் தொழிநுட்ப விவரங்களை மட்டும் கருத்தில் கொண்டாலே, இது ஒரு பிரதான கைப்பேசி தான். ஒப்பீடளவுகளில் இது  சிறப்பாக செயல்படுகிறது. எக்ஸ்பீரியா இசட்3 மற்றும் காலக்ஸி  எஸ்5-க்கு இணையாக உள்ளது. 

மெலிதான வடிவமைப்பு, கைப்பேசி வேகமாக சூடேறுவதற்கு காரணியாக இருந்தாலும்,மோட்டோ எக்ஸ் மிதமான சூட்டை தாண்டியதில்லை. கூடுதலாக, ஒரு மணி நேரம் விளையாடிய போதும்,செயல்திறன் குறைவதில்லை. கைப்பேசி சூடேறுவதால், மைய செயலியின் செயல் திறன் குறைக்கப்படுவதில்லை. இது நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தலாம். மிதமான சூட்டை தாண்டாத இதன் நிலை,குறுகிய காலத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என கொள்ளலாம்.  

மேலும், மோட்டோ எக்ஸ்-இன் செயல்திறன், மிக சிறப்பான பேட்டரி ஆயுள் காரணமாக மிகுதியாகிறது. பேட்டரி-இன் சேமிக்கப்பட்ட ஆற்றலைக் கொண்டு, ஒரு நாள் முழுதும் செயல் பட முடிகிறது. இடையே விளையாட்டுகளும் விளையாட முடிகிறது. எங்களுடைய பேட்டரி பரிசோதனையில், கைப்பேசியில் சேமிக்கப்பட்ட ஆற்றலைக் கொண்டு, 10 மணி நேரம், முழு உயர் வரையறை காணொளி காட்சிகளைக் காண முடிந்தது.

கேமரா

இந்த ஒரு விஷயத்தில், இந்த கருவியின் மற்ற தொழில்நுட்ப விவரங்கள் உங்களை தோற்கடிக்கின்றன.
மோட்டோ எக்ஸ் இரண்டாம் தலைமுறை கைப்பேசி, பெயரளவில் 13எம்பி(MP) கேமராவைக் கொண்டுள்ளது. நிஜத்தில் இதற்கு இணையான ஏனைய கைப்பேசி கேமரா-வை விட மட்டமாக உள்ளது. சியோமி எம்ஐ3-இன் 13 எம்பி(MP) கேமரா, எக்ஸ்பீரியா இசட்3 கையடக்க பதிப்பு, காலக்ஸி ஆல்ஃபா, லூமியா 830 ஆகியவற்றின் கேமரா, மோட்டோ எக்ஸ் இரண்டாம் தலைமுறை கேமராவை தூள் தூளாக்குகின்றன.

இதன் கேமரா, மூலமுதலை விட சிறப்பாக இருந்தாலும்,

ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல கருவியில்லை. இதற்கு,அண்ட்ராய்ட் கேமரா நெறிமுறைகள் காரணியாக இருக்கலாம். ஆட்டோ வொயிட் பாலன்ஸ்(auto white balance), புகைப்படங்கள் சூடான ஒளியில் இருப்பதாக காட்டுகின்றது. மேலும் புகைப்படங்கள் மென்மையாகவும், கூர்மை இழந்தும் இருக்கின்றன. குறுநிரல் புகைப்படங்களில் கேமரா சிறப்பாக செயல்பட்டாலும்,இதன் விலைக்கு தகுந்த திருப்தியை தரவில்லை. அது மட்டுமல்லாமல் குறைந்த ஒளி புகைப்படங்கள் படு மோசமாக இருக்கின்றன. ஹெச்டிஆர்(HDR) செயல்வகை கூட இதைக் காப்பாற்ற முடியவில்லை.

தொடுதல் இல்லா கட்டுப்பாடுகள்

புதிய மற்றும் பழைய மோட்டோ எக்ஸ்-இல் உள்ள தொடுதல் இல்லா கட்டுப்பாடுகள், கண்கட்டு வித்தையாக மட்டுமே இருந்ததாலும், அதைப் பற்றி குறிப்பிட்டு பேசக்கூடிய நிலையில் உள்ளது. புதிய பதிப்பில் பல மேம்பாடுகள இருந்தாலும், இந்த விஷயத்தைப் பொருத்தவரை, இன்னும் பூரணமடையவில்லை.

புதிய மோட்டோ எக்ஸ், தனிப்பயன் குரல் உத்தரவுகளை தூரத்தில் இருந்து எடுத்து கொள்கிறது. என்னுடைய பேச்சு வகையை எளிதாக புரிந்து கொள்கிறது. ஆனாலும், குரல் உத்தரவுகளை, அதை முதலில் பதியும் போது எவ்வாறு பதிந்தோமோ, அவ்வாறு பேசினால் மட்டுமே உணர்ந்து கொள்கிறது. கைப்பேசியை உறக்கத்தில் இருந்து இயக்கும் உத்தரவை,நான் பல தொனிகளில் பிறப்பித்த போதும், ஒரு முறை மட்டுமே அது விழித்து இயங்கியது. மேலும் எந்த ஆண் குரலுக்கும் கைப்பேசி இயங்குகிறது. முந்தைய பதிப்பும் அவ்வாறே இருந்தது. இப்படியானால், கைப்பேசியை உறக்கத்தில் இருந்து இயக்கும் என் குரல் உத்தரவை அறிந்த எந்தவொரு ஆணும், என் கைப்பேசியை செயல்படுத்தலாம். பெண் குரலுக்கும் இவ்வாறே நடக்கிறது.

இறுதி வார்த்தை

உண்மையைச் சொன்னால், மோட்டோரோலா, அதன் புதிய மோட்டோ எக்ஸ்-இன் விலையை அறிவித்த போது, நான் அதற்கு முற்றிலும் எதிராக இருந்தேன். ஆனால் நிறுவனம் அதற்கான ஆராய்ச்சியை முன்னமே செய்துள்ளதாக தோன்றுகிறது. சோனி நிறுவனம் தன்னுடைய எக்ஸ்பீரியா இசட்3 கையடக்கப் பதிப்பை 45 ஆயிரம் அருகே விலை வைத்து, சாம்சங் மற்றும் மோட்டோரோலா-விற்கு உதவி செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் 40 ஆயிரம் என்று காலக்சி ஆல்ஃபா-விற்கு விலை வைத்துள்ளது. இவற்றின் காரணமாக மோட்டோ-எக்ஸ்-இன் 32 ஆயிரம் விலை, மலிவாக இருக்கின்றது. 

இந்த கருவிக்கு 30 ஆயிரம் அருகே விலை வைத்து இருக்க நான் பிரியப்பட்டாலும், 32 ஆயிரம் என்ற விலைக்கு உரிய  மதிப்பை இது தருகிறது. தனிப்பட்ட முறையில், இந்த கைப்பேசியின் கேமராவை நான் அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. அதை கருத்தில் கொண்டால் இதுவே எனக்கான கைப்பேசியாகும். கேமரா உங்கள் முடிவில் ஒரு முக்கிய பங்கு வகிக்குமானால், இது உங்களுக்கான கைப்பேசி இல்லை. ஆனால் மற்ற விஷயங்களில், இதுவே, தற்போதைய சந்தையில் ஒரு சிறப்பான கைப்பேசி ஆகும்.

மேலும்,எஸ்டி கார்ட் துணை இல்லாத 16 ஜிபி உள்ளடக்க நினைவகம் ஒரு உறுத்தல். நான் என்னுடைய கைப்பேசியில் பல பயன்பாடுகளை உபயோகிப்பதில்லை. ஆனால் நீங்கள் உபயோகிப்பீர்களானால், இந்த கம்மியான உள்ளடக்க நினைவகத்தால் பாதிக்கப்படுவீர்கள். மோட்டோரோலா 32 ஜிபி வகையறாவை ஏன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவில்லை என்பது கேள்விக்குறியாகும். குறைவான சேமிப்பு நினைவகம் மற்றும் கேமரா இந்த கருவியின் இரு பெரிய குறைபாடுகள் ஆகும்.

மோட்டோ எக்ஸ் (இரண்டாம் தலை Key Specs, Price and Launch Date

Price: ₹31999
Release Date: 05 Oct 2015
Variant: 32GB
Market Status: Discontinued

Key Specs

 • Screen Size Screen Size
  5.2" (1080 x 1920)
 • Camera Camera
  13 | 2 MP
 • Memory Memory
  32 GB/2 GB
 • Battery Battery
  2300 mAh
Prasid Banerjee
Prasid Banerjee

Email Email Prasid Banerjee

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Trying to explain technology to my parents. Failing miserably. Read More

Install App Install App
Advertisements
Advertisements

மோட்டோ எக்ஸ் (இரண்டாம் தலை

மோட்டோ எக்ஸ் (இரண்டாம் தலை

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status