லேனோவா A6000 Review

எழுதியது Prasid Banerjee | அப்டேட் ஆனது Jun 14 2016
லேனோவா A6000 Review
DIGIT RATING
79 /100
  • design

    75

  • performance

    77

  • value for money

    86

  • feature

    81

User Rating : 4/5 Out of 3 Reviews
  • PROS
  • சிறந்த செயல்திறன்
  • போதுமான திறமுள்ள நிழற்படக்கருவி (Camera)
  • கழற்றக்கூடிய பின்புறம் கொண்ட திடமான வடிவமைப்பு
  • CONS
  • பேட்டரி ஆயுள் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்
  • காட்சி மேலும் சிறப்பாக இருக்க வேண்டும்

தீர்ப்பு

தற்பொழுதைய சூழலில் லெனோவா எ6000 நீங்கள் வாங்கக்கூடிய  குறைந்த விலையிலான ஆன்றோயிட்(Android) நுண்ணலைபேசிகளில் மிகச்சிறந்தது. இருப்பினும், இந்த  நுண்ணலைபேசி  சில  இடங்கலில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.  இது லெனோவாவை வரும் காலத்தில் அச்சுறுத்தகூடும், ஏனெனில் போட்டியாளர்கள் இதனினும் சிறந்த கருவிகளை சந்தைக்கு கொணர்வர்.   ஒரு புதிய  நுண்ணலைபேசி  வாங்கும் அவசரத்தில் இருந்தால் மட்டுமே இதனை வாங்கவும்.

ஒரு  தயாரிப்பை  முதலில் சந்தைக்கு  கொண்டு  வருவதில்  என்றுமே  ஒரு  குறிப்பிட்ட  சாதகம்  இருக்கும்.  மோடோரோலா  தாங்கள்  இந்தியாவில்  கால்பதித்ததன்  முதலாண்டு  நிறைவை  கொண்டாடும்  அதே  வேளையில்  அதன்  மோடோ-ஜி(Moto-G)  மற்றும்  மோடோ-ஈ(Moto-E)  சந்தைக்கு  வந்து  பலயுகம்  ஆனதுபோல்  தோன்றுகிறது.  ரூபாய் ஏழாயிரத்திற்கு   குறைவான  நுன்னலைபேசி  பிரிவில்  நீண்டகாலமாகவே  மோடோ-ஈ  ஒரு  அளவுகோலாக  விளங்குகிறது (ஆம்,  ரெட்மி-1எஸ்(Redmi 1S) வெளியான  பிறகும்தான்).  எனினும்  குவால்காமின்  புதிய  எஸ்-ஒ-சி(SoC) யின்  வருகைக்குப்பின்  மோடோ-ஈ  அதன்  அரியணையை  விட்டுக்கொடுக்க  வேண்டும்.

இன்று  நாம்  பார்க்ககூடிய  குறைந்த  விலை  நுண்ணலைபேசிகளின்  இடையிலான  போரை  துவைக்கிவைத்ததும்,  அதனை  முதலில்  சந்தை  படுத்தியதும்  மோடோ-ஈ  தான். இருப்பினும்  அது  ஸ்னாப்ட்ராகன்-200(Snapdragon 200) மற்றும்  400 எஸ்-ஒ-சி களின்   காலமாகும். தற்பொழுது  நாமிருப்பது  64-பிட்(64 bit) தலைமுறையில். மேலும்  இன்று  நாம்  அனைவரும்  ஸ்னாப்ட்ராகன்-410(Snapdragon 410) ஐ  உற்று  நோக்குகிறோம். இப்பொழுதைய வருகை :  லெனோவாஎ6000. 

கடந்த  ஆண்டின்  இறுதியில்  மோடோரோலாவை லெனோவா கையகப்படுத்தியது.  தற்போழுது,  மோடோரோலா  எதற்கு  மிகவும்  அரியப்பட்டதோ  அதையே  லெனோவா செய்கிறது.  எ6000  ஒரு மிகச்சிறந்த  குறைந்த விலை நுண்ணலைபேசி,  மோடோ-ஈயின்  வெளியீட்டு  விலையிலேதான்  இதுவும்  வெளியிடப்பட்டுள்ளது, ரூ. 6,999. சந்தையில்  மிகைப்படுத்தவும் அதன் விநியோக  சங்கிலிகளுக்கு  சில  நிவாரணம்  கொடுக்கவும்  லெனோவா ஃபிளாஷ்(Flash)  விற்பனை  யுக்தியை  கடைபிடித்தது. ஆகவெ, இவ்வலைபேசி  எதிர்படும்  காலத்தில்  பெரிய  எண்ணிக்கையில்  சந்தைக்கு  வராது; நாம் அதைபற்றி  என்ன  நினைத்தாலும்  சரி.

மேலும்  தாமதத்திற்கு  இடமின்றி,  லெனோவா எ6000 யின்  விமர்சனத்திற்கு  வருவோம்.

BUY லேனோவா A6000

லேனோவா A6000 detailed review

கட்டமைப்பு  மற்றும்  வடிவமைப்பு


எந்தவொரு  முன்மாதிரி  வடிவமைப்பு  கண்டுபிடிப்பும் இங்கெ இல்லை.  இந்த  நுண்ணலைபேசி  பாரம்பரிய  கட்டி  வடிவத்தை  கடைபிடிக்கிறது.  எனினும், அளவு, எடை  மற்றும்  உபயோகப்படுத்தப்பட்ட  பொருட்களிற்கிடையே லெனோவா   ஒரு  சமநிலையை  அடைந்திருக்கிற்து.  அடிப்படையில்  இந்த  சாதனம்  பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டாலும், மேட்(Matte) போன்ற  பின்புற  பூச்சுவேலையும், விளிம்புகளில்  உள்ள  வளைவுகளும்  சேர்ந்து ஒரு  உயர்தர  உணர்வை  தருகிறது. கொடுக்கும் விலைக்கான  ஒரு உயர்தர  உணர்வு. 

கூடுதலாக வெளிப்புற  பட்டைகளின்(bezels)  மெல்லிய வடிவம் இந்த நுண்ணலைபேசியை  அடக்கமாகவும்,  உபயோகிக்க  எளிதாகவும்  ஆக்குகிறது. மேலும், 8.2 மிமி கனத்தில்(8.2 mm), இது மிகவும் மெல்லிய அளவில்லை, ஆனால் கட்டி வடிவ  அலைபேசிகளின் வரிசையில், லெனோவா எ6000 ஒரு மெல்லிய சாதனமாகவெ  தெரிகிறது.

இது கண்டிப்பாக  சந்தையில் நீங்கள்  பார்க்கக்கூடிய  புத்தம் புதிய வடிவமைப்பாக இல்லாவிடிலும், மோடோ-ஈ  மற்றும் சியோமி ரெட்மி 1எஸ்(Xiomi Redmi 1S)-ஐ விட  சிறந்த  தோற்றம்  கொண்ட  நுண்ணலைபேசியாகும். ஏன், ஆஸஸ் ஜென்போன் 4(Asus Zenfone 4) ஐ  காட்டிலும் தான். 

காட்சி

5 அங்குலத்திற்க்கு, ஒரு நுண்ணலைபேசியின் குறைந்த பட்ச காட்சி 720பி(P) ஆகவாவது இருக்க வேண்டும். எனினும் சேமிக்கும் நோக்கத்தில், லெனோவா   கொரிலா(Gorilla) கண்ணாடியை அகற்றியுள்ளது. இது காட்சியை பலவீனப்படுத்துவதோடு, தொடு-உணர்வின்  ஒட்டுமொத்த அனுபவத்தை  குறைத்துவிடுகிறது. காட்சி உயர்தரமாக உணரப்படவில்லை, உன்மையை கூறினால் மிகவும் மலிவாக  உணரப்படுகிறது. இருப்பினும் காட்சியின் நிறங்கள் மற்றும் பிரகாசத்தின்மேல்  கேள்வி எழுப்ப முடியாது. நிறங்கள் மிகத்துல்லியமாக உள்ளன. மேலும், வைப் யுஐ(Vibe UI ), இல்லம் மற்றும் பூட்டுத்திரைகளை துடிப்பாக வைக்க உதவுகின்றது.

பயனர்  இடைமுகம்

சியோமி போன்ற  நிறுவனங்கள் உண்மையில்  அவர்களது பயனர்-இடைமுகத்தை வருவாய் ஆதாரமாகவும் தங்களுக்கான சமூகத்தை உருவாக்கவும்  பயன்படுத்தும் வேளையில், லெனோவா அதை செய்வதில்லை. சொல்லப்போனால் இந்த நிறுவனம்  ஸாம்ஸங்கை (Samsung) போன்றதே. வைப் யுஐ ஒரு வண்ணமயமான  மற்றும் சிறந்த தோற்றமுள்ள பயனர்  இடைமுகமாக இருப்பினும், அது முழுதும் ப்ளோட்வேர்(bloatware) நிறைந்ததாகும்.  ஆம், லெனோவா சேர்ட்(SHAREit)  போன்ற  பயன்பாடுகள்  சில நெரங்களில் மிக  உபயோகமாக  இருக்கும், ஆனால், அவற்றை  பதிவிறக்கம் செய்வதும் செய்யாததும் பயனரின் முடிவாகவே இருக்கும். நல்லவேளையாக சில முன்-பதியப்பட்ட  பயன்பாடுகளை  நீங்கள் அழித்துக்கொள்ளலாம். ஆனால் மற்றவையோடு  நீங்கள் போராடிவீர்கள்.

ஒட்டுமொத்தமாக, இந்த பயனர்  இடைமுகம்  ஒரு  குறைந்தவிலை  சாதனத்திற்கு, சிறப்பாகவே உள்ளது. இது சில நேரங்களில், சில  உச்சகட்ட  பயன்பாடுகளுப்பிறகு சற்று மந்தமாக இருந்தது. ஆனால் பயன்படுகளை  அழிப்பது  நல்ல  விளைவை தரும். கூடுதலாக, நுண்ண்லைபேசியிலுள்ள 1ஜிபி ராம் (    1GB) - இல், 400 எம்பி(400MB) காலியாக உள்ளது.  குறைந்த விலை சாதனத்திற்கு இது  போதுமானதாகும். எம்ஐ யுஐ(MiUI)  மற்றும் ஆன்றோயிட் உபயோகிக்கும்  சாதனங்களிலும்  இதுபோன்ற எண்ணிக்கைகளை  நாம் காணமுடியும்.

இந்த பயனர் இடைமுகம் டுயல்-டால்பி(Dual-Dolby) ஒலிவடிவத்தின்  அமைப்புகளையும் கொண்டுள்ளது; இதை பற்றி லெனோவா இதன் வெளியீட்டு விழாவிலும் பேசியது. ஒலியமைப்பிற்கு சில முன்னமைவுகளை தேர்வு செய்ய உதவுகிறது. எனினும் இது மிகப்பெரிய  மாற்றத்தை  தருவதில்லை. சாதனத்தின் பின்புறத்தில்  உள்ள இரட்டை ஒலிபேருக்கிகள்  இந்த  அளவுகோலிலுள்ள  அலைபேசிக்கு, சிறந்த ஒலி-அளவு மற்றும்  ஒலி-தரம் கொண்டுள்ளன.  எனினும்  ஹெச்.டி.சி - ப்ஹூம்-சவுண்ட்(HTC Boom Sound) இதில் இல்லை. 

செயல்திறன்

இந்த நுண்ணலைபேசி 1ஜி ராமுடன்(1GB RAM ) சேர்த்து  ஸ்னாப்ட்ராகன்-410 64-பிட் குவாட் கோர் எஸ்ஒசி யும் (410 64-bit quad-core SoC) கொண்டுள்ளது. அடிப்படையில் இது ஸ்னாப்ட்ராகன்-400 முறைபடுத்தியின் அடுத்த தலைமுறையாகும். மோடொ-ஜி (இரண்டாம் தலைமுறை) மற்றும் சியோமி ரெட்மி நோட் 4ஜி உட்பட பல இன்றைய  நுண்ணலைபேசிகளை  செயல்படுத்துவது ஸ்னாப்ட்ராகன்-400 ஆகும்.

இந்த நுண்ணலைபேசியின் செயல்திறனே இதை ஒரு தரமான  குறைந்த விலை சாதனமாக மட்டுமல்லமல் தற்பொழுதய தலைமுறை நுண்ண்லைபேசிகளில் ஒன்றாகவும் உருவாக்குகிறது. ஆளவுகோளின்  அடிப்படையில் லெனோவா எ6000, மோடொ-ஜி (இரண்டாம் தலைமுறையை)  விட சற்றே  திறம்பட செயல்படுகிறது. ஆனால் இது அந்த அளவிற்கு எளிதாக பயணிப்பதில்லை. இந்த நுண்ணலைபேசி  சில பாதிப்புகளை காண்பிக்கிறது, மேலும் உயர்-நிலை விளையாட்டுகளை பதிவேற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது.  இருப்பினும், குறைந்தவிலை நுண்ணலைபேசிக்கு, இது ஏற்கக்கூடியதே. 

மோடொ-ஈ இதன் எதிரில் போட்டியிட வாய்ப்பே  இல்லை. ஆச்சிரியமாக, சியோமி ரெட்மி 1எஸ்   நாம் எதிர்ப்பார்த்ததைவிட பின்னிலையிலே தங்கிற்று.

ஒட்டுமொத்தமாக, விளையாட்டுகளிலும் பன்முனை செயல்பாட்டிலும், குறைந்த தொய்வோடும், செயல் நிறுத்தமின்மையோடும், லெனோவா எ6000 திருப்திகரமாக உள்ளது. 

நிழற்படக்கருவி 

இந்த நுண்ணலைபேசியின்  சிற்ப்பம்சம், அதன் 8எம்.பி பின்புற  புகைப்படக்கருவியாகும். இது வெளிபுற சூரியவொளியிலும், உட்புற ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்திலும்  சில மிகச்சிறந்த புகைப்படங்களை காட்சிபடுத்தியது.  இருப்பினும் இது சியோமி ரெட்மி 1எஸ் ஐ  தோற்கடிக்க  முடியவில்லை. பிரகாசமாக  இருந்த   ரெட்மி 1எஸ்-இன்  புகைப்படங்களோடு  ஒப்பிடுகையில்  லெனோவா எ6000-இன்  படங்கள்  சற்று  மந்தமாகவே  வெளிப்பட்டன.

எனினும்  ரு. 6,999 மட்டுமே விலை கொண்ட சாதனத்திற்கு இது ஒரு சிறந்த புகைப்பட கருவியாகும்.  இதன்  தானியங்கி குவியம்  வேகமாக உள்ளது, புகைப்படத்தின் செயலாக்கும்  நேரம் அதிகம்  இல்லை.  மேலும்,  புகைப்படக்கருவி  பயன்பாடு எளிமையாகவும்  பயன்படுத்த  ஏதுவுமாகவும் உள்ளது. 

பேட்டரி 

இந்த ஒரு பிரிவில் எ6000 சற்று  ஏமாற்றமளிக்கிறது.  எமது பேட்டரி  தேர்வில் எ6000, மோடோ-ஈ க்கு  பிறகே  வந்தது.  ஆனால்  ரெட்மி 1எஸ் ஐ  முந்தியது. ஒரு  மணி நேர விளையாட்டு,  அதிக இணை உலாவுதல், ஏறக்குறைய ஒரு மணி  நேர  அழைப்புகள் கொண்ட என் நுண்ணலைபேசியின்  தீவிர  உபயோகத்தில், ஒரு நாளில்  இரு முறை மின்னேற்றம்  தேவைப்பட்டது.    எனினும் சதாரண  சூழல்களில், மின்னேற்றம்  செய்ய  தேவையில்லாமல் ஒரு  நாள் முழுவதும் எ6000  தாக்குப்பிடிக்கக்  கூடும்.

இறுதிவரிகள்

தற்பொழுதைக்கு,  குறைந்தவிலை  சாதனமாக லெனோவா எ6000 ஒரு சிறந்த் நுண்ணலைபேசியாகும்.  லெனோவாவின்  முக்கிய  உந்துதலே  அது புதிய எஸ்.ஒ.சி-ஐ முதன்  முதலில்  சந்தைபடுத்தியதே ஆகும்.  சாதனத்தின் செயல்திறனைப்பார்க்கையில், புதிய ரெட்மி 2 (அதே அம்சங்கள், ஆனால்  2 ஜிபி ராம்)  நுண்ணலைபேசி  இதை விட மிக  சிறப்பாக  இருக்கும்  என  எதிர்ப்பார்க்கிறோம்.  மேலும், வெகு  விரைவிலேயே போட்டியாளர்கள்  இதேபோன்ற, அல்லது இதை விட  சிறப்பான சாதனங்களை  சந்தைப்படுத்துவர். 

குறைகூறுவதற்கல்ல, எ6000 ஒரு மிகச்சிறந்த  குறைந்த விலை சாதனம். ஆனால் காட்சித்திரை,  பேட்டரி  போன்ற  சில  அம்சங்களை மேம்ப்படுத்தலாம். போட்டியாளர்கள் இந்த அம்சங்களிலேயே  மூலதனமாய்  கவனம் செலுத்தக்கூடும்.  இன்றைய நிலயில், மிக மலிவான,  எல்-டி-இ (LTE ) திறன்  கொண்ட நுண்ணலைபேசி எ6000 ஆகும்.  எனவே, ஒரு  புதிய  நுண்ணலைபேசி  வாங்கும் அவசரத்தில்  நீங்கள்  இல்லையென்றால், தாமதித்து, மற்ற  நிறுவனங்களின் சாதனங்களுக்கு காத்திருப்பது நல்லது.  மாறாக உங்களுக்கு அவசரமாக ஒரு நுண்ணலைபேசி தேவைப்படுகிறதென்றால்,  எ6000 ஒரு  சிறந்த  தேர்வாகும். 

logo
Prasid Banerjee

Trying to explain technology to my parents. Failing miserably.

Advertisements
Advertisements

லேனோவா A6000

லேனோவா A6000

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.