ஹெச்டிசி டிசையர் 820 Review

எழுதியது Hardik Singh | அப்டேட் ஆனது May 13 2015
ஹெச்டிசி டிசையர் 820 Review
  • PROS
  • புத்தம் புது வடிவமைப்பு
  • நல்ல காட்சித்திரை
  • லேசான பயனர் முகப்பு
  • சிறந்த கேமரா
  • CONS
  • சுமாரான செயல்பாடு

தீர்ப்பு

ஹெச்டிசி டிசையர் 820எஸ், மிருகத்தின் வேகத்தோடு செய்லபடுவதுமில்லை, மந்தமாக செயல்படுவதுமில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு செயல்பாடோடு திகழ்கிறது. அதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நல்ல அம்சங்களின் காரணமாக, மற்றவைகளை விட தெரிவு செய்யக்கூடிய கைப்பேசியாக தோன்றினாலும், சந்தேகமே இல்லாமல் பரிந்துரை செய்வதற்கான கைப்பேசியாக பூரணமடையவில்லை.

பட்ஜெட் ஸ்மார்ட் கைப்பேசி பிரிவு, கைப்பேசி உற்பத்தியாளர்களின் கவனத்தில் இருந்த வண்ணமே இருக்கிறது. ரூ.20,000  வரை உள்ள இந்த விலைப்பிரிவு, தற்போது  சிறந்த பைசா வசூல் கைப்பேசிகளை சந்தையில் அளிக்கிறது. ஒன்பிளஸ்ஒன், சியோமி எம்ஐ4 அல்லது ஆனர் 6 என எதுவாக இருந்தாலும், இவையனைத்தும் ஹெச்டிசி டிசையர் 820எஸ்-க்கு ஒரு நல்ல போட்டியாக இருக்கின்றன. இதை முறியடிக்க, டிசையர் 820எஸ், ஹெச்டிசி-இன் அதிக முயற்சிக்கப்பட்ட மற்றும் பரிசோதிக்கப்பட்ட மந்திரமான, அழகான தோற்றம்  மற்றும் பணத்திற்கு உரிய மதிப்பளிக்கும் அம்சங்கள் என்ற சூத்திரத்தை கை எடுத்துள்ளது. ஆனால் இது போதுமா? அதைக் கண்டறிவோம்.

 

BUY ஹெச்டிசி டிசையர் 820

Buy now on amazon கிடைக்கும் 14000
Buy now on flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 25999

ஹெச்டிசி டிசையர் 820 detailed review


வடிவமைப்பு மற்றும் கட்டுமானம்

கைப்பேசிக்கு ஒரு தனிப்பட்ட தோற்றத்தை தரும் விதத்தில்,தனக்கென ஒரு தனி வடிவமைப்பு பாணி கொண்ட நிறுவனங்களில் ஹெச்டிசி நிறுவனமும் ஒன்றாகும். ஹெச்டிசி-இன் டிசையர் வகையறா கைப்பேசிகளில், உபயோகிக்கப்படும் கட்டுமான பொருட்கள் வெவ்வேறாக இருப்பினும், அனைத்திலும் ஒரே மாதிரி வடிவமைப்பு உள்ளது.  எளிமையாக சொல்வதென்றால்,டிசையர் பார்ப்பதற்கு ஒரு அழகான கைப்பேசி. இரண்டு-வண்ண அமைப்பு, இதன் போட்டியாளர்கள் இடையே ஒரு தனிப்பட்ட தோற்றத்தை இதற்கு தருகின்றது. பட்டன்கள் பொதிக்கப்பட்டுள்ள இடங்கள் காரணமாக, அவை உபயோகிக்க வசதியாக இருப்பதோடு, ஒரு திருப்தியான உணர்வை தருகின்றன.

கட்டுமானம் குறித்த பார்வையில், ஸ்மார்ட் கைப்பேசி நெகிழி உறையைக் கொண்டிருப்பதால், இதே விலையில் கிடைக்கக்கூடிய ஒன்பிளஸ்ஒன் மற்றும் ஆனர் 6, ஆகியவற்றை விட மட்டமாக தெரிகின்றது. மெலிதான தோற்றமும், வளவளப்பான பின் பக்கமும் இருப்பதால் உபயோகிப்பாளர்கள், பின்னுறை வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். நான் கவனித்த மற்றுமொரு விஷயம், பின்னால் துருத்தி கொண்டிருக்கும் கேமரா மற்றும் அதன் மேல் இருக்கும் கண்ணாடி உறை. இது நாளடைவில் கீறல் விழா வாய்ப்புள்ளது. இதெல்லாம் சொன்னது போக, நான் உபயோகிக்கும் போது, கைப்பேசி உறுதியாக இருந்ததோடு, கவனமாக கையாண்டால் நன்றாக செயல் புரிவதாகவும் இருக்கிறது. 

காட்சித்திரை மற்றும் பயனர்முகப்பு

அண்மையில் வந்துள்ள ஹெச்டிசி கருவிகளில் காட்சித்திரை நன்றாகவே இருக்கின்றன. டிசையர் 820எஸ்-உம் அது போலவே, நல்ல காட்சித்திரையைக் கொண்டிருக்கிறது. அருமையான வண்ண வெளிக்கொணர்வும், ஏற்புடைய கேமரா கோணங்களும், இதில் உள்ளன. நல்ல தரமான எல்சிடி மையப்பலகையை இது பயன்படுத்துவதால், உரைகளைப் படிப்பது கண்ணுக்கு எளிதாக இருக்கின்றது. காட்சித்திரைக்கு கொரில்லா கண்ணாடி 3-இன் பாதுகாப்பும் இருக்கிறது. சூரிய ஒளி வெளிச்சத்தில், காட்சித்திரை தோற்றம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.

ஹெச்டிசி சென்ஸ் 6 பயனர்முகப்பு, அண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் பயனர்முகப்பின் மேல் இயங்குகிறது. இடது பக்கம் இருந்து தேய்த்தால், ப்ளிங்க் ஃபீட் வருகிறது. ஆங்காங்கே ஹெச்டிசியின் சிறு சிறு தனி அம்சங்களை காணலாம். இருப்பினும் இது ஒரு சுத்தமான, அண்ட்ராய்ட் இடைமுகத்துக்கு உண்மையான பயனர் முகப்பாக இருக்கிறது. ஹெச்டிசி ஒரு லேசான பயனர் முகப்பாக இருப்பதோடு, இரண்டே இரண்டு முன் நிறுவப்பட்ட பயன்பாடுகள் மட்டுமே கொண்டுள்ளது. 

செயல்பாடு

டிசையர் 820எஸ் அதன் விலைப் பிரிவில் சுமாரான செயல்பாடு கொண்ட கைப்பேசி. சியோமி எம்ஐ4 அலல்து ஒன்பிளஸ்ஒன் செயல்பாடை விட குறைவாக இருக்கிறது. புதிய தலைமுறை 64-பிட் மீடியாடெக் எம்டி6752 சிப் அமைப்பு ஆற்றல் அளிப்பதால், கைப்பேசி விரைவாகவும், நல்ல எதிர்வினை தருவதாகவும் இருக்கின்றது. நான் இந்த கைப்பேசியை உபயோகிக்கும் போது, ஒரு முறை கூட இது தொய்வடையவில்லை. ஆனால் ஸ்கைஃபோர்ஸ் 2014 விளையாடும் போது, திரை உறைந்து போய், கைப்பேசி தானே இரண்டு முறை அணைந்து, பிறகு இயங்கியது.

மீடியாடெக் தன் விமர்சகர்களின் பேச்சைக் கேட்டு,கைப்பேசி சூடேறும் சிக்கல்களை கையாண்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் இது ஒரு அளவுக்கு தான். இப்போதும் கைப்பேசி சூடேறுகிறது. ஆனால் கேமரா-வை நீண்ட நேரம் இயக்கினாலோ அல்லது ஒரு மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து விளையாட்டுகள் விளையாடினால் மட்டுமே இவ்வாறு ஆகிறது.

கைப்பேசி அண்ட்ராய்ட் 4.4 கிட்கேட்-ஐ அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. மேலும் இதை, அண்ட்ராய்ட் லாலிபாப் பதிப்பிற்கு மேம்படுத்த எண்ணமில்லை என்று ஹெச்டிசி அறிவித்துள்ளது. ஒப்பீடளவுகளில் கைப்பேசி எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டு ஒலிப்பெருக்கி அமைப்பு, குறைந்த ஒலியை தருகிறது. நீங்களும் என்னை போல் கைப்பேசியில் அலாரம் உபயோகிப்பீர்களானால், வேலைக்கு  தாமதமாக செல்ல நேரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கைப்பேசியில் வரும் ஒலிபெருக்கியும், குறைவான ஒலி எழுப்புகிறது. அடுத்த முனையில் இருப்பவர் பேசுவதை கேட்க சிரமம் அடைந்தேன். தலையணி ஒலிகேட்கும் கருவிகள் மூலம் வரும் ஒலி, சுமாராக இருக்கிறது. இரண்டு சிம்க்ளுக்கான சிக்னல் வரவேற்பும் அவ்வாறே சுமாராக இருந்தது.

கேமரா மற்றும் பேட்டரி

13 எம்பி கேமரா கொண்ட பின் பக்கத்தில் ஒரு சிறு துருத்தல் உள்ளது. நான் அண்மையில் பார்த்ததில் இது ஒரு சிறந்த 13 எம்பி கேமரா ஆகும். வண்ண நிறைவு, செறிவு மற்றும் வெளிக்கொணர்வு ஆகியன உயர் தரமாக இருக்கின்றன. கேமரா, புகைப்படங்களை உடனடியாக எடுக்கிறது. ஹெச்டிஆர் செயல்வகையில், சற்று அதிக நொடிகளை எடுத்துக் கொள்கிறது. முன் பக்கம் உள்ள 8எம்பி கேமரா நன்றாக இருக்கின்றது. கேமரா பயன்பாடு ப்யூடிஃபை என்றொரு அம்சத்தை கொண்டுள்ளது.

2600எம்ஏஹெச் உள்ள பேட்டரி நன்றாக வேலை செய்கிறது. ஒரு சாதாரண நாளின் மிதமான பயன்பாட்டில், எனக்கு 8 மணி நேர பேட்டரி ஆயுள் கிடைத்தது. இது ஒரு நாள் முழுவதுக்குமான பயன்பாட்டிற்கு போதுமானது. தொடர்ந்து விளையாடினால் மட்டுமே கைப்பேசியின் பேட்டரி ஆற்றல் குறைகிறது. ஆனால் இது எல்லா கைப்பேசியிலும் நிகழும் ஒன்றாகும்.

இறுதி வார்த்தை

இதன் வடிவமைப்பு, காட்சித்திரை மாற்றும் கேமரா ஆகியவற்றை மீறி பார்த்தால், ஹெச்டிசி டிசையர் 820எஸ் ஏற்புடைய பேட்டரி ஆயுளும் சுமாரான செயல்பாடும் கொண்ட ஒரு கைப்பேசி ஆகும். நான் எதிர்பார்த்தப்படி, பட்டியலில் முதன்மையாக இல்லாவிடினும், சவாலை இது நன்றாக கையாள்கிறது. ஒட்டுமொத்தமாக ஹெச்டிசி டிசையர் 820எஸ் ஒரு நல்ல கைப்பேசி. பட்ஜெட் பிரிவின் உயர் விளிம்பில், மற்றுமொரு தெரிவை தருகின்றது. இருந்தும் கூட, இந்த ஹெச்டிசி-க்குப் பதிலாக, நீங்கள், ஒன் பிளஸ் ஒன், எம்ஐ4 அல்லது ஆனர் 6 போன்றவற்றை தெரிவு செய்யலாம்.

logo
Hardik Singh

Light at the top, this odd looking creature lives under the heavy medication of video games.

Advertisements
Advertisements

ஹெச்டிசி டிசையர் 820

ஹெச்டிசி டிசையர் 820

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.