எச்.டி.சி பட்டர்ஃப்லை Review

எழுதியது Vishal Mathur | அப்டேட் ஆனது May 12 2015
எச்.டி.சி  பட்டர்ஃப்லை Review
DIGIT RATING
90 /100
  • design

    90

  • performance

    90

  • value for money

    60

  • feature

    80

User Rating : 4/5 Out of 1 Reviews
  • PROS
  • தீப்பொறி தெறிக்கும் அதிவேக செயல்பாடு
  • நிகறற்ற 1080பி அதிதுல்லிய(HD) காட்சித்திரை
  • அருமையான கட்டமைப்பு
  • சிறந்த நீர்-தடுப்பு மதிப்பீடுகள்
  • சிறந்தப் பணிச்சுழலியல்
  • மேம்படுத்தப்பட்ட எச்.டி.சி சென்ஸ்(HTC Sense ) ஒரு புத்துணர்ச்சியூட்டும் மாற்றம்
  • அதிகபட்ச உபயோக வேளைகளிலும், திருப்தியளிக்கும் மினகல அடுக்கு ஆயுள்
  • CONS
  • ஆச்சரியமூட்டும் வகையில் ஏமாற்றமளிக்கும் புகைப்படக் கருவி
  • குழ்ப்பும் சிம்(SIM ) அடுக்கு பொறிமுறை
  • அனைத்து சிற்ப்புகளும் மிகப்பெரிய விலையோடு வருகின்றன

தீர்ப்பு

பட்டர்ஃப்லை அனைத்தையும்  அடுத்த நிலைக்கு  எடுத்துச்  செல்கின்றது.  நீங்கள்  இந்த  அலைபேசியை  ஏன்  வாங்க  வேண்டுமென்றால்,  அதன்  அருமையான  1080பி  அதிதுல்லிய  காட்சித்திரை,  சிறந்த  கட்டமைப்பு  தரம்,  தீப்பொறி  தெறிக்கும்   செயல்பாடு.  அதனோடு  நீங்கள்  ஒரு  சாதாரண  உபயோகச்  சுமை  கொண்ட  நாள்  முழுதும்  நீடிக்கக்கூடிய  மினகல  அடுக்கு ஆயுளையும்  கருத்தில்  கொள்ள  வேண்டும்.  பட்டர்ஃப்லையின்  புகைப்படக்கருவி,  ஒன். எக்ஸ் இன்  (One X)  அதிசிறந்த  புகைப்படக்  கருவியை விட  தரம்  குறைந்து  இருந்ததை  கண்டு  ஆச்சரியப்பட்டோம். ஆனால்  எந்த  ஒரு  தற்கால  ஆண்ட்ராய்ட்  (Android ) நுண்ணலைபேசிக்கும்  இல்லாத  ஒரு  ஒயில்  கண்டிப்பாக  இதற்கு  உண்டு.

இது இந்தியாவிற்கு  வர  நேரம்  பிடித்தது;  பெயரிலிருந்து  ‘ஜே’ (J)  அகற்றப்பட்டது,  மேலும்  சில சிறிய  மாற்றங்க்களோடு  இது  இறுதியாக  இந்தியாவிற்கு  வந்தது  -  எச்.டி.சி  பட்டர்ஃப்லை  என்ற பெயரில்.  ஃபேப்லெட் (phablet)  என்றெல்லாம்  ஆடம்பரமாக  அழைக்காமல், நுண்ணலைபேசி  என்றே எச்.டி.சி யால்  அழைக்கப்படும்  இது  ஒரு 5 அங்குல  காட்சித்திரை  கொண்ட  நுண்ணலைபேசியாகும்.  விவரக்குறிப்பைப்  பார்த்துவிட்டு  யாரோ  சொன்னார், “ இதன்  பெயர்  மென்மையான  “பட்டர்ஃப்லை”  (Butterfly) என்றில்லாமல்  “ஹல்க்”  (Hulk)  என்றிருக்க வேண்டும்”  என்று.  அனைத்து   அம்சங்களையும்  பார்க்கும்  பொழுது,  நாங்களும்  அதை  வழிமொழிகிரோம்.  எனினும்  பெயரோடு  நின்றிடாமல், பட்டர்ஃப்லை யை  உற்று  நோக்குவோம்.

 

 

BUY எச்.டி.சி பட்டர்ஃப்லை

எச்.டி.சி பட்டர்ஃப்லை detailed review

கட்டமைப்பும்  வடிவமைப்பும்


முதற்பார்வை  முதலே  பட்டர்ஃப்லை யின்  சிறிய  மற்றும்  பெரிய கூறுகள்  உங்கள்  கவனத்தை  ஈர்க்கின்றன.  ஐப்பானிய  வடிவத்திலிருந்து  மிகப்பெரிய  மாற்றமே  அதன்  பின்புறத்தை  நெகிழியிலிருந்து  பாலிகார்பனேட்டுக்கு (polycarbonate )  மாற்றியதுதான்.  ஏனென்றால்  பெரிய  நுண்ணலைபேசியை  ஒரு  கையால்  செயல்படுத்துகையில்  ரப்பர்போன்ற (rubberized )  பூச்சு  பெரிதும்  உதவுகிறது.  மேலும்  நாம்  பாலிகார்பொனேட்  பூச்சை  எச்.டி.சி  எவ்வளவு  நன்றாக  உபயோகிக்கிறது  என்பதை  நாம்  ஒன்-எக்ஸ்,  ஒன்-எக்ஸ்   பிளஸ்  மற்றும்  எச்.டி.சி. டபுல்யு.பி.8.எக்ஸ்(HTC WP8X)  போன்ற  வடிவங்களில்  பார்த்திருக்கிறோம்.

விமர்சனத்திற்காக  நமக்கு  வழங்கப்பட்டது   ஒரு  கருப்பு  அலைபேசி.  அதன்  தட்டையான   பக்கங்களில்   மினுமினுப்பும்  இருந்தன.   மேலும்  முழு-வெள்ளை    மற்றும்  முழு-சிகப்பு  என  வேறு   இரு  நிறங்களிலும்  இது  கிடைக்கும்.   தனிப்பட்டமுறையில்  எனக்கு  சிகப்பு  பூச்சு  கொண்ட  கருப்பு  சாதனம்,   மற்ற  இரண்டையும்  விட  அதிகம்  பிடித்திருந்தது,  தனிப்பட்ட  விருப்பத்திற்குட்பட்டதே!  வெள்ளை  நிறங்கொண்டது,  தூசுபடியாமலிருக்க  பின்புற  பாலிகார்பனேட்டில்  மழ மழ  பூச்சு  கொண்டிருக்கும்.  மொத்தமாக,  மூன்று  முக்கிய  அம்சங்கள்  இதை  ஒரு  நல்ல  பிடிமானமுள்ள  அலைபேசியாக்குகின்றன.

இதன்  புகைப்படக்  கருவியானது  பின்புற  மூடியில்  அழகாக  அமர்கின்றது.  ஒன்.எக்ஸ்  சற்றே  உயர்ந்திருந்த  புகைப்படக்  கருவியானது.   மேஜையில்  வைக்கும்பொழுது  கீரப்படுவதை  நாம்  சுட்டிக்காட்டியதன்  வினைவாக  இந்த  மாற்றம்  செய்யப்பட்டது  வரவேற்கத்தக்கது.  

ஸாம்சங்கின் (Samsung )  போட்டியாள்ர்களைவிட  எச்.ட்.சி  அலைபேசிகள்  நல்ல  கட்டுமான  உணர்வை  தருகின்றன  என்பது  ஒரு  நேர்மையான  அளவீடாகும்.  ஒன்.எக்ஸ்  ஐ,  காலக்ஸி  எஸ் 3 (Galaxy S III )  யோடும்  பட்டர்ஃப்லையை  நோட் 2  (Note 2)  வோடும்  ஒப்பிட்டுப்பார்த்தால்,  நமக்கு  இது  புலப்படும்.  ஸாம்சங்  அலைபேசிகள்  பிரிந்து  விழுபவை  என்பதோடு , அதிகம்  பளிச்சிடும்  பின்புற  நெகிழி  விலை  உயர்ந்த  அலைபேசிகளுக்கும்  அழகல்ல. 

பட்டர்ஃப்லையின்  சிறந்த  கட்டுமாடத்திற்கான்  பாராட்டுக்களை  உற்று  நோக்குகையில்  அது  ஐ.பி.எக்ஸ்-5 (IPX-5 )  நீர்தடுப்பு  அளவீடு  பெற்றுள்ளது  தென்படுகிறது.  அந்த  அளவீட்டின்  விவரத்தின்படி -  நீர்ப்பீச்சிலிருந்து  பாதுகாக்கப்பட்டது.  3மீ  தூரத்திலிருந்து,  3 நிமிடங்களுக்கு,  30 கே.என்/ மீ^2  (30kN/m2 )  அழுத்ததில்,  6.3 மிமீ  அளவுள்ள  துளையிலிருந்து,  நிமிடத்திற்கு  12.5 லி நீர்  வெளியீட்டு  அளவில்  வரும்  நீரிலிருந்து  அனைத்துக்  கோண்ங்களிலும்  பாதுகாக்கப்பட்டது.  சாதாரணமாக  சொல்வதென்றால்,  மழைபெய்து  கொண்டிருக்கையில்,  அலைபேசியில்  பேசிக்கொண்டே   சிற்றுந்திலிருந்து  இறங்கி  அலுவலகத்துக்கு  போவதை  திறம்பட  தாங்கிக்கொள்ளும்.

வெளிப்படையாக  சொல்வதென்றால்  பட்டர்ஃப்லையின்  கட்டமைப்பைக்கண்டு  நாம்  வியக்கின்றோம்.  தயாரிக்க  உபபோயகப்படுத்தப்பட்ட பொருட்கள்  உணர்வதற்கும்,  பயன்படுத்தவும்  நன்றாக  இருக்கின்றன.  மேலும்  பயன்படுத்த  சுகமாக  இருக்க  வேண்டும்  என்பதை  சிந்தனையில்   கொண்டே   தயாரித்திருக்கின்றனர்.  இதில்  முதன்மையாக  இருப்பது  5 அன்குல காட்சித்திரையை  சுற்றியுள்ள  மிக  மெல்லிய  பட்டி.  இது   பட்டர்ஃப்லையின்  அகலத்தை  அடக்கமாக  வைக்கிறது.  இது  முதல்  படி.  இரண்டாவது,  அதன் மெல்லிய  அமைப்பு.  9.1 மிமீ  கனத்தில்  இது  ஒன்.எக் ஸைப்  போன்றதே,  ஆனால்  தட்டையான  வடிவம்  இதை  ஒரு  சாக்லேட் (chocolate )  பலகை  போன்ற  உணர்வைத் தருகின்றது.  பின்  பட்டை  இருபுறத்திலும்  சிறிது  மடக்கப்பட்டுள்ளது.  பல  கோண்ங்களில்   பட்டர்ஃப்லை  அடக்கமாகவும்  தேவைக்கேற்பவும்  இருந்தாலும்  சில அம்சங்கள்  அதற்கு  சற்று  சீறும்  கோணத்தை  தருகின்றன.  பககவாட்டில்  இருக்கும்  கம்பி  வடிவம்,  மினுமினுக்கும்  நிறஙகள் (கருப்பு - வடிவத்தில்  மட்டும்)  ஆகியவை  அடங்கும்.  இயர்பீசிலும் (earpiece)  இதே  போன்ற  மினுமினுப்பும்,  கம்பி  வடிவமும்  கொடுக்கப்பட்டுள்ளன.  மேலும்  இதிலிருந்து  நீளும்  சாம்பல்  நிற  நெகிழியிலும்  இது  தெரிகிறது.  

நாம்  சற்றே  பணிச்சூழலியலை  மீண்டும்  பார்ப்போம்.  மேலும்  துறைகளின்  பொறுத்தப்பட்ட  நிலையையும் , உபபோகத்தையும்  சாம்சங்  காலக்ஸி  நோட் 2, ஆப்பிள்  ஐ ஃபோன் 5 (Apple iPhone 5 )  மற்றும்  இந்நிறுவனத்தின்  முன்னோடி  ஒன். எக் ஸோடு  ஒப்பிட்டுப்  பார்ப்போம்.  அலைபேசியை  எதிரிலிருந்து  பார்க்கையில்  வலது  கனத்திலும்  எச்.டி.சி,  சுழற்றப்பட்ட  உலோக  வடிவத்தை  பொறுத்தியுள்ளது.  ஒலி-கட்டுப்பாட்டுக்கு  கொடுக்கப்பட்டுள்ள  உயர்த்தம்  பயன்படுத்த  ஏதுவாகவுள்ளது,  அலைபேசியில்  பேசிக்கொண்டிருக்கையிலும்.  இது  இதன்  உயர்தர  வடிவமைப்பிற்கு  எந்தவிதத்திலும்  பங்கம்  விளைவிக்கும்   அளவிற்கு  நீட்டிக்கொண்டும்  இல்லை.  இருபுறத்திலும்  சிகப்பு  கம்பி  பட்டைகள்  மேலிருந்து  கீழாக  இருக்கின்றன.  மேல்புறத்தில்  3.5 மிமீ  ஹெட்ஃபோன்  (headphone ) துறையும்,  நுண்-எஸ்.டி(microSD )  மற்றும்  நுண்.சிம்  கார்டுகளுக்கான  துளைகளும்  உள்ளன.  இரண்டு  துளைகளும்  ஒரே  நெகிழியினாலான  மூடியைக்  கொண்டு  அணுகமுடியும்.  எனினும்  சிம்  கார்டு  துளையைக்  கண்டறிவது  கடினமாகவுள்ளது.  இது  வாடிக்கையாளரை  குழப்பும்  வகையில்  உள்ளது.  சிம்  கார்ட்டின்  ஊசித்துளையை  மூடியை  திற்ந்தவுடன்  அணுகலாம்,  ஆனால்  அது  பிணைக்கு  மிக  அருகில்  அமைந்துள்ளது .

ஒரு  நிமிடத்திற்கு,  அதிகபட்ச  வாடிக்கையாள்ர்கள்  உபயோகப்படுத்த  கற்றுக்கொடுக்கும்  காகிதங்களை  படிப்பதில்லை   என்று  வைத்துக்கொள்வோம்.  நம்  முதல்  முயற்சியின்  குறுக்கே  வருவது  இரு  ஒலிவாங்கிகளில்  முதலாவது.  இது  3.5மி. மீ   துறையின்  அருகே  இருக்கிறது.  அதில்  குத்தினால்,  அதுவும்  திறப்பதில்லை.  இதன்  பின்   நாம்  பதட்டத்தோடு  நாலாபுறமும்  துளையைத்  தேடுகிறோம்.  அடிப்பாகத்தில்,  மூடியிட்ட  நுண்-யு.எஸ்.பி (micro USB )  துறைக்கு  அருகிலிருப்பது  இரண்டாம்  ஒலிவாங்கி.   இதில்  குத்தினால்  நாம்  வாடிக்கையாளர்   சீட்டைப்  படித்தும்  பிரயோஜனம்  இல்லை. 

சற்றே  சிறந்த  இடத்தில்   பொறுத்தமும்,  ஓரிரு  குறியீடுகளும்  வெகுவாக  உதவியிருக்கும்.  இதைப்பற்றிப்பேசுகையில்  இரண்டு  துறைகளின்  மூடிகளும்  சற்றே  கடினமாக  இருக்கின்றன.  சிம்  மற்றும்  எஸ்.டி  கார்டுகளின்   துறைக்கு  பெரும்  சேதம்  இருக்காதெனினும்,  யு.எஸ். பி  துறை  தினசரி   மின்னேற்றும்  காரணத்தால்  சேதமுற  வாய்ப்புண்டு.  ஏனோ,  சோனி  எக்ஸ்பீரியா  எஸ் (Sony Xperia S )  மற்றும்   எக்ஸ்பீரிய  எஸ். எல்(Xperia SL )   வில்  இருந்த  வளைவு  இதன்  பிணைப்பில்   இல்லை.  இதனால்  பாதுகாப்பாக  முடுக்குவதும், வெளியெடுப்பதும்  சற்றே  சந்தேகத்திற்குரியது. 

பட்டர்ஃப்லையை  வடிவமைக்கும்  வேளையில்  சிந்தித்து  செயல்பட்டதற்கான  உதாரணங்கள்  சற்றே  தென்படுகின்றன.  அலைபேசியை  மின்னேற்றும்போது  முன்புறம்  இயற்பீசின்  அருகில்  ஒரு  எல்.ஈ.டி (LED )    சுட்டிக்காட்டி  இருப்பதும்  பின்புறம்,    புகைப்படக்கருவிக்கு  அருகில்  ஒன்று  இருப்பதையும்  காணமுடிகிறது.  எந்த  கோணத்தில்  வைத்து  மின்னேற்றினாலும்  சிகப்பு  விளக்கு  மின்னேற்றம்  முழுவடைந்த்தும்  பச்சையாக  மாறுவதைக்  காண  முடிகிறது.  அலைபேசியின்  எடை  சமனும்  சிறப்பாக  இருப்பதால்,  கீழே  தவறவிட்டு  அதைக்  காரணமாகக்  கூற  இயலாது!

அலைபேசியில்  அளவுகளைப்  பற்றி பேசுகையில்,  5 அங்குல  அலைபேசியாக  இருந்தும்  எச்.டி.சி  எப்படி  இதனை  ஒரு  கையில்  பயன்படுத்த  ஏதுவாக  அமைத்தது  என்பதை  நினைத்தால்  ஆச்சரியமாக  இருக்கிறது.  நோட் 2,  5.5  அங்குல  அளவுள்ளது  என்பதை  மனதில்  கொண்டாலும்,  இது  அதைவிட  கையாளுவதற்கு  மிகவும்  எளிதாக  இருக்கிறது.  விலையடிப்படையில்  அருகாமையிலிருக்கும்  போட்டியாளர்களோடு  ஒப்பிடுகையில்  பட்டர்ஃப்லை,  ஒன்- எக்ஸ்-ஐ  விட  சற்றே  பெரியதாகவே  இருக்கிறது.  நீங்கள்  உங்கள்  ஆட்காட்டி  விரலை  ஐஃபோன்  மேல்பாகத்தில்  பக்கவாட்டில்  வைத்தால்  அதுவே  இதன்  உயரமாகும்.  கனத்தைப்  பற்றிக்  கூறுகையில்,  ஒரு  பென்சிலை (pencil )  ஐஃபோன்  5 - இன்  பக்கத்தில்  வையுங்கள்.  அதுதான்  பட்டர்ஃப்லையின்  கனம்.  ஒன்-எக் ஸ்  மற்றும்  ஐஃபோன்-5   உபயோகப்படுத்திவிட்டு  சட்டென்று  பட்டர்ஃப்லைக்கு   மாறினோம்.  ஆனாலும்  அலைபேசியை  பிடித்திருக்கும்  கையாலேயே  வலைப்பக்கத்தை  திருப்பவும்,  சமூக  வலைதளத்தில்  செய்தி  எழுதவும்  முடிந்தது  குறிப்பிடதக்கது.

அம்சங்களும்  விவரக்குறிப்புகளும்:

செயல்பாட்டு  சக்தியைப்  பற்றி  விவரிப்பதற்கு  முன்னால்  உற்சாகமூட்டும்  அம்சத்தைப்  பற்றி  பேசுவோம்  -  காட்சித்திரை.  1080 பி  அதிதுல்லிய  பகுத்தல்   கொண்ட  முதல்  அலைபேசியும்  இதுவே.  இதில்  மிகவும்  பிரமிப்பூட்டுவது  என்னவென்றால்  440  பிபிஐ(440ppi )  கொண்ட  காட்சித்திரை  இதனை  அனைத்து  முன்னோடி  நுண்ணலைபேசிகளிலும்  மிக  அதிக  பிக்ச்ல் (pixel )  நெறுக்கம்  கொண்டதாக  ஆக்குகிறது.  ஒப்பிட்டுப்   பார்க்கையில்   ஐஃபோன்- 5 யின்  காட்சித்  தரை  326 பிபிஐ.  விவரக்குறிப்புகள்  ஒரு  புறமிருக்க,  மேலும்  பல  அம்சங்கள்  காட்சித்திரையை  அனுபவிப்பதில்  தாக்கத்தை  ஏற்படுத்தக்கூடும்.  காட்சித்திரை  சிற்ந்ததா?  இல்லையா?  என்பதை  செயல்திறன்  பகுதியில்  காண்போம். 

1.5 கி. ஹெர்ட்ஸ் (1.5GHz) வேகங்கொண்ட  குவால்காம்  எச்-4  பிரோ  ஏ.பி.க்யூ.8064  குவாட்  கோர்  பிராசசர்  (Qualcomm S4 Pro APQ8064 quad core processor ), 2 ஜி.பி  ராமின்  உதவியோடு  வருவது  வருங்கால  ஆண்ட்ராய்ட்  முன்னோடிகள்  வரப்போகும்  அளவுகோலாகும்.  இதன்  எஸ். ஒ.சி (SoC )  ஏட்ரினோ  320  கிராஃபிக்ஷ்  (Adreno 320 graphics)  கொண்டதாகும்.  இதனை  எதிர்த்து  நிற்பது  2 ஜி.பி  ராமோடு  வரும்  காலக்ஸி  நோட்  2 வின்  எக்ஸைநோஸ்  4412  குவாட்  கோர்  பிராசசர் (Galaxy Note II’s Exynos 4412 quad core processor ).  இதன்  வேகம்  1.6ஜி. எச். ஹெர்ட்ஸ்  மற்றும்  எஸ். ஓ. சி  மாலி  400  எம்.பி  கிராஃபிக்ஸ் (Mali-400MP graphics) .   இவ்விரண்டு  செயல்பாட்டுத்  திறங்களையும்  ஒப்பிடுகையில்  விவரக்குறிப்பேட்டில்   அதிக  வேகத்தோடு  இருந்தாலும்,  எக்ஸைனோஸ்  4412  32  என்.எம் (nm)  தலைமுறையைச்  சார்ந்தது.  ஆனால்  எஸ்.4.  ப்ரோ (S4 PRO)  28  என்.எம்  தலைமுறைக்கு   மாறுகிறது.  குவால்காமிடம்  ஒரு  விதமான  மாறுபாட்டில்  எஸ்.4  ப்ரோ  மற்றும்   அனைத்து   விதங்களான  எஸ்.4  ப்ளசும்  ஒரே  தொழில்  நுட்பத்தில்  அடங்கியுள்ளன.  வெறும்  எண்களைப்  பார்க்கையில்  ஞாபக  எண்ணிக்கை  வேகத்தில்   பட்டர்ஃப்லையின்  வேகம்  இரு  அலைவரிசை  எல்.பி.டி.டி.ஆர்.2  ராம்  க்கு  500  எம்.ஹெர்ட்ஸ் (dual channel LPDDR2 RAM),   ஆனால்   எக்ஷைனோஸோ  நோட்  2 வில்  400  எம்.ஹெர்ட்ஸ்   -  நேரடியாகவே,  எச்.4  ப்ரோ  செயல்திறனில்  மிஞ்சியும்,  மின்  உபயோகத்தில்  குறைவாகவும்   இருக்க  வேண்டும்.   உண்மையில்  இது  நிகழ்கிறதாவென்று   செயல்திறன்   பகுதியில்   காண்போம். 

பட்டர்ஃப்லையில்  16 ஜிபி  உள்ளடக்கிய  சேமிப்பகமும்,  நுண்-எச்.டி  அட்டையில்  மூலம்  64 ஜிபி  சேமிப்பை   அதிகமாக   அட்டை  துளையினால்  பெறமுடியும்.   எச்.டி.சி  ஒன்-எக் ஸில்  64  ஜிபி   உள்ளடக்கிய  சேமிப்பு   கிடைக்கிறது,  ஆனால்   அதில்  அட்டைக்கான  துளை  இல்லை.  கேலக்ஸி  நோட்  2  விலும்  16ஜிபி   உள்ளடக்கிய   சேமிப்பும்,  சேமிப்பு   அட்டைக்கான   துளையும்  இருக்கின்றன.  பட்டர்ஃப்லைக்கு   நிகராண   விலையிலோ  ஆப்பிள்  ஐஃபோன்  5 இல்  16ஜிபி   சேமிப்பு   இருக்கிறது,  ஆனால்   அதில்  சேமிப்பு   அட்டைக்கான   துளையில்லை.   எச்.டி.சி   இந்த  அலைபேசியை   ஆண்ட்ராய்ட்   4.1  ஜெல்லிபீனோடு  (Android 4.1 Jelly Bean)  வெளியிட்டுள்ளது   சற்று  ஏமாற்றமளிக்கின்றது.  ஒரு  நுண்ணலைபேசிக்காக  இவ்வளவு   செலவு   செய்கையில்   மிகவும்   அண்மைக்கால   ஓ. எஸ் (OS)   எதிர்ப்பார்ப்பது   சரியே.  எனினும்  அண்டிராய்டு   4.2  க்கான  காத்திருப்பு  துவங்கிவிட்டது,  இன்றோ  நாளையோ   மேம்படுத்தப்பட்ட   பட்டர்ஃபலை   வந்தே  தீரும்.

பட்டர்ஃப்லையில்  8 எம்.பி  புகைப்படக்  கருவி  இருக்கிறது.  ஆனால்  இது  எச்.டி.சி  ஒன்  வரிசையிள்ள  நுண்ணலைபேசிகளில்  இருப்பது  போல்  அல்ல.  சில  மற்றங்களும்   உண்டு.  சிறந்த  குறைந்த-ஒளி  செயல்பாட்டிற்காக  பி.எஸ்.ஐ (BSI Sensor )  உண்ரி,  0.7  விநாடியில்  ஒரு  படம்  எடுக்கவும்,  0.2  விநாடியில்  தானியங்கி   கூர்விக்கவும்  தேவையான  இமேஜ்  சிப்  (ImageChip )  ஆகியவை  உண்டு.  எஹ் 2.0 (f2.0)  துளை   எஹ் 2.4  (f2.4 )  குவியத்தைவிட  405  அதிக  ஒளியை  உள்ளே  விடுகிறது.

பட்டர்ஃப்லைக்கும்  நோட் 2 க்கும்   இடையேயான  மிகப்பெரிய  வித்தியாசம் -  ஸ்டைலஸ்(stylus).   எச்.டி.சி,  பட்டர்ஃப்லையை  பேப்லெட்   என  அழைக்கவிரும்பாமல்   ஒரு  நுண்ணலைபேசியாகவே  பாவிக்கிறது.  எனவே  நோட் 2 வுக்கு   தனித்துவமான  எஸ்-பென்னும் (S Pen),  அதனோடு  வரும்  கையெழுத்து,  ஏர்  வியு(Air View )  போன்ற  சிறப்பம்சங்களும்   உண்டு.

இப்பொழுது  மிகவும்  முக்கிய பகுதிக்கு  வருவோம்  மின்கல  அடுக்கு.  இத்துணை  அதிக  பயன்பாடுகளை  சக்தியூட்டும்  தொகுப்பிற்கு,  எச்.டி.சி  நிச்சயம்  கவனம்  செலுத்தியிருக்க  வேண்டும்.  பட்டர்ஃப்லை  2020  எம்.ஏஎச் (2020mAh)  மிங்கல அடுக்குடன்  வருகிறது.  சேம்சங்கிலோ  3200  எம்.ஏஎச்  மின்கல  அடுக்குடன்  வருகிறது.  நமது  முந்தைய  தேர்வுகளிலும்   அதை  வாங்கியவர்களின்  பதிவுகளின்  படியும்  நோட் 2  ஒரு  முறை  மின்னேற்றி  மிதமான  உபயோகத்தோடு,  தொடர்ந்து  3ஜீ ( 3G )  வேலை  செய்தும்  இரு  நாட்கள்  மின்கல  அடுக்கு  ஆயுள்   நீளும்.  பட்டர்ஃப்லைக்கு  இதற்கு  ஈடுகொடுப்பது  கடினமாகும்.

புதிய  விட்ஜெட்டுகள்  மற்றும்  பின்னணிகளின்  மூலம்  பட்டர்ஃப்லையிலிருக்கும்  எச்.டி.சி  சென்ஸ்  புத்துண்ர்ச்சி  60  எஃப்.பி.எஸ் - களை  தாங்கும்  பிராஜக்ட்  பட்டருக்கு  (Project Butter supporting 60fps)  நன்றி . 1080பி  அதிதுல்லிய  காட்சித்திரையில்  மாற்றங்கள்  அருமையாக  இருக்கின்றன.  பூட்டுத்திரையில் அதே  நான்கு குறுக்குப்பாதைகள், அதை  திறப்பதற்கு  இழுத்து  வட்டத்தில்  விட  வேண்டும்.  பூட்டுத்திரைக்கு  நாம்  வானிலை  ஒளிச்சித்திரங்களை தேர்வு  செய்கிறோம் . இவை கண்கவரும்  வண்ணத்தில்  உள்ளன.


செயல்திறன்

நாம்  பொதுவாக  இந்த  பகுதியில்  மற்ற  அம்சங்களின்  செயல்பாடுகளை  ஆராயவிரும்புவதற்கு  முன்  நுண்ணலைபேசியின்  அமைப்பின்  செயல்திறனைப்பற்றி  ஆராய்வோம்.  இந்த  அலைபேசியைப்  பொறுத்தவரை  முதலில்  காட்சித்திறையைப்  பற்றி  முதலில்  பேசுவோம்.  1080பி  அதிதுல்லிய  காட்சித்திரையுடன்  வரும்  முதல்  நுண்ணலைபேசி  இதுதான். முதலில்  நம்  கருத்தைக்  கவர்வது  காட்சியின்  கூர்மை  அளவு.  ஐஃபோன் 5  மற்றும்  ஒன்-எக்ஸ்  ஆகியவற்றோடு  ஒப்பிடுகையில்  பட்டர்ஃப்லை  அவற்றை     வெல்லும்  விதம்  ஆச்சரியமளிக்கிறது.  மிகக்குறைந்த  பிரகாசம்,  50%  பிரகாசம்  மற்றும் 100%  பிரகாசம்  ஆகிய  அளவுகளில்  சோதித்தும்  பட்டர்ஃப்லை  மற்ற  இரண்டையும்  எளிதாக  தோற்கடித்தது.    எனவே,  குறுஞ்செய்திகளைப்  படிப்பதும்,  வலைதள்த்தில்  உலவுவதும்  மிகத்  துல்லியமாக  இருக்கின்றன.  பெரும்பாலான  எச்.டி.சி  அலைபேசிகளைப்  போல,  ஒரு  பக்கத்தை  போர்ட்ரைட்(portrait)  விததிதில்  வைத்து  பெரிதாக்குகையில்  வார்த்தைகளை  மடித்துவிடுவதில்லை.  எனினும்  லேண்ட்ஸ்கேப் (landscape )  விதத்தில்  படிக்கவே  நீங்கள்  விரும்புவீர்கள். 

மேலும்  எஸ்.எல். சி.டி 3 (S-LCD3 )  காட்சித்திரையோடு  வரும்  முதல்  நுண்ணலைபேசியும்  இதுவே.  எச்.டி.சி  ஒன்  வரிசையின்  எஸ். எல்.சி.டி.2 (S-LCD2 )வை  விட  இது  ஒரு  பெரிய  முன்னேற்றம்.  கருப்பு  நிறத்தின்  அடற்தியும்,  வெள்ளையின்  தூய்மையும்  நல்ல  மேம்பாடுகள்.  இது  அனத்து  நிறங்களின்  வெளிப்பாடுகளிலும்  சிறப்பாக  உணரப்படுகிறது.  இன்றுவரை  காலக்ஸி  நோட் 2 வின்  சூப்பர்  அமோல்ட்        (Galaxy Note II’s Super AMOLED )   கட்சித்திரை  முன்னோடியாக  இருந்தாலும்,  பட்டர்ஃப்லை  ஒன்றும்  சளைக்கவிலலை.  முதலில்,  கொரில்லா  க்லாஸ்  2 (Gorilla Glass 2 )  கொண்ட  பட்டர்ஃப்லையின்  காட்சித்திரை  சற்று  எதிரொளிப்பதுபோல்  தோன்றினாலும்,  காட்சித்திரையில்  உயர்ந்த  தரத்தால்,  சூரியவொளியிலும்  காட்சியின்  தெளிவில்  எந்தப்  பிரச்சனையும்  இல்லை.  இந்நிலையில்  குறைந்த  பட்ட  பிரகாசமாக  50%  தேவைப்படும்.  தானியங்கி  பிரகாச  கட்டுப்பாடு  சிறப்பாகச்  செயல்பட்டு  சொற்களை  படிக்க  ஏதுவாக்கியது.  ஆனால்  ஒளிச்சித்திரங்கள்  பார்க்கையில்  சற்றே  தோய்விருந்தது.  உள்ளொலியில்  சில  1080பி  எச்.டி  மற்றும்  720பி  எச்.டி  ஒளிச்சித்திரங்களைக்  காண்கையில்  ஆனந்தத்தில்  திளைத்தோம்.  நாம்  முன்பே  பேசியது  போல,  சிறந்த  நிறக்கையாளுமையின்  காரணமாக  இந்த  சாதனத்தில்  ஒளிச்சித்திரங்கள்  மிகவும்  சிறப்பாகத்  தெரிகின்றன.

எச்.டி.சி  பட்டர்ஃப்லையில்  மேலும்  ஒரு  சிறப்பம்சம்  உண்டு.  அதுவே  குவால்காம்  எச்.4  ப்ரோ  சக்தி  தொகுப்பு(Qualcomm S4 Pro power package).  இந்தச்  செயலியோடு  இந்தியாவில்  வெளியிடப்பட்டுள்ள  முதல்  நுண்ணலைபேசி  இதுவே.  மேலும்  க்வாட்  கோரின்  திறம்  1.5கி. ஹெர்ட்ச்(quad core brilliance clocks at 1.5GHz)  ஆக  எண்ணிக்கையை  உயர்த்துகிறது.  நாம்  இந்த  செயலியின்  திறத்தை  மிகவும்  நம்புகிறோம்.  அளவுகோல்  சோதனைகளும்  இதை  நிரூபிக்கின்றன.  போட்டியாளர்களுக்கான  அளவுகோல்  சோதனைகளின்  முடிவுகள்  இதைத்  தெளிவுபடுத்துகின்றன. 

நிஜ  வாழ்க்கை  உபயோகத்திலும்  பட்டர்ஃப்லை  மிகவும்  வேகமாகவே  உள்ளது.  இதை  உபயோகித்த  பிறகு  ஒன்-எக் ஸும்,  நோட் 2 வும்  சற்று  மெதுவாக  இருப்பதாக  தொன்றுகிறது.

நாம்  முன்பு  கூறியதுபோல  புதிய  அட்ரினோ  320  சிப்,  காலக்ஸி  எச்-3 யிலிருக்கும்  மாலி-400  எம்.பி (Mali-400MP )  மற்றும்  ஒன்-எக்ஸிலிருக்கும்  டெக்ரா 3 (Tegra 3 )  யோடு  போட்டியிடுவது  ஆர்வத்துக்குரியாதாகவே  இருந்தது.  ஆனால்  சோதனை  முடிவுகளின்  படி  இரண்டும்  பட்டர்ஃ ப்லைக்கு  சமமாகவே  செல்பட்டன.  ஒரே  ஒரு  சிறப்பம்சம்  என்னவென்றால்  பட்டர்ஃப்லையின்  அட்ரினோ  320  மற்ற  இரண்டையும்  விட  விளையாட்டுகளின்  போது  அதிக  சட்ட  எண்ணிக்கையைத்  தந்தது.

எச்.டி.சி  பட்டர்ஃப்லையில்  புகைப்படக்  கருவியின்  செயல்திறன்  ஏனோ  ஏமாற்றமளிப்பதாகவே  உள்ளது.  முக்கியமாக,  இதிலுள்ல  புகைப்படக்  கருவி  ஒன்-எக் ஸில்  உள்ளது  போலவே  8எம்.பி  யோடு  இருக்கிறது.  சிறந்த  குறந்த  ஒளி  செயல்திறனுக்காக  பி.எஸ்.ஐ.  அளவி,  0.7  விநாடிகளில்  ஒரு  புகைப்படம்  எடுப்பது,  0.2  விநாடிகளில் தானியங்கி-குவியம்  செய்வது  போன்றவற்றிற்காக  இமேஜ்  சிப்  போன்ற  சில  மேம்பாடுகளும்  உண்டு.  எச்.டி.சி  ஒன்  பர்ஸ்ட் (burst )  விதத்தில்  ஒளிச்சித்திரப்  பதிவின்  போதே  புகைப்படம்  எடுக்கும்  அணுகலை  தந்ததிலிருந்து,  விரைவாகப்  படமெடுப்பது  எச்.டி.சி  புகைப்படக்  கருவியின்  ஒரு  அளவுகோலாகவே  இருந்தது.  எனினும்  தானியங்கி  குவியத்தின்  வேகத்தில்  பிரச்சனை  இல்லையென்றாலும்,  அதன்  தரம்  திருப்திகரமாக  இல்லை.  பட்டர்ஃப்லையால்  நாம்  எடுத்த  அனைத்துப்  புகைப்படங்களும்  மிகவும்  மிருதுவாகவே  இருந்தன.  மேலும்  குவியத்தின்  பரப்பு  சாதாரன  அளவைவிட  குறைவாகவே  இருந்தது.  இதன்  எஃப்  2.0  துளை,  எஃப்  2.4  குவியத்தைவிட  405  அதிக  ஒளியை  உள்ளே  விடுகிறது.  இது  குறைந்து  ஒளி  சூழல்களில்  படங்களை  மேம்படுத்த  உதவும்.  ஆனால்,  துரதிர்ஷ்டவசமாக  பட்டர்ஃப்லையில் இருக்கும்  புகைப்படக்கருவி,  ஒன்-எக்ஸ்  மற்றும்.  ஐஃபோன் 5 விட  எந்தவிதத்திலும்  சிறப்பாக  இல்லை.  இதை  நாங்கள்  சூசகமாகவே  சொல்கிறோம்.  அனைத்து  பாத்தியதைகளுக்கும்  இடையே  உடையாததை  ஒட்டவைக்க நினைக்காமல் எச்.டி.சி ஒன்நின்   புகைப்படக்  கருவியை  பட்டர்ஃப்லையில்  வைத்திருந்தால்  சிறப்பாக  இருந்திருக்கும்.

எச்.டி.சி  பட்டர்ஃப்லை  எச்.டி.சி  ஒன்-எக்ஸ்  மற்றும்  ஆப்பிள்  ஐஃபோன்  5 இல்,  பல்வேறு  சூழல்களில்  அதிதுல்லிய  பகுத்தல்  செயல்படுத்தப்பட்டும்,  படாமலும்  எடுக்கப்பட்ட  பல  சோதனைப்  புகைப்படங்கள்  நம்மிடம்  உண்டு.  இவற்றைப்  பார்க்கையில்,  ஒளிச்சூழலின்  வேறுபாடுகளைக்  கருத்தில்  கொள்ளாமல்,  எச்.டி.சி  பட்டர்ஃப்லையின்  புகைப்படக்கருவி  இலட்சிய  அளவிலில்லை  என்ற  நாம்  கூறுவதன்  உண்மை  விளங்கும்.

மின்கல  அடுக்க  ஆயுளும்  50-50  நிலையிலேயே  உள்ளது.  இவ்வுளவு  சக்தியுள்ள  நுண்ணலைபேசிக்கு  2020  எம். ஏ. எச்  மின்கல  அடுக்கும்  சற்று  குறைவாக  தோன்றுகிறது.  நமது  சோதனைகளில்  பட்டர்ஃப்லையை  ஒரு  சாதாரண்  அலைபேசியாகவே  உபயோகித்தோம்.  30%  பிரகாச  அளவில்,  இடைவிடாத  ட்விட்டர் (Twitter),  வாட்ஸாப் (Whatsapp)  போன்ற  சாதாரண  உபயோகங்களோடு,  சில  பல  அலைபேசி  அழைப்புகளும்  செய்தால்,  காலை  7.30  மணிக்கு  100%  மாக  இருந்து  மின்கல  அடுக்கின்  ஆயுள்  மாலை  9.00  மணிக்கு  10%  ஆக  குறையும்.  மாறாக,  மற்ற  எந்த  அமைப்பையும்  மாற்றாமல்  சக்தி  சேமிப்பு  விதத்திற்கு  20  சதவிகிதத்தில்   இருக்கும்.   இது  அவ்வளவு  மோசமானதாக  இல்லவிடிலும்   இரண்டு   நாள்  தொடர்ந்து  நீளும்  நோட்  2 வின்  3100  எம்.ஏ.எசின்  ஆயுளிற்கு  முன்னால்  சற்று  மங்கலாகவே  உணர  முடிகிறது.

எச்.டி.சி  அதன்  ஒன்  வரிசை  நுண்ணலைபேசிகளைப்  போல   பீப்பில்  பயன்பாடை (People)  இதிலும்  வைத்திருப்பது  பாராட்டுக்குரியது.  பீப்பில்  பயன்பாடு  தொடர்பு  குறிப்புகளைக்  கையாளும்  விதம்  மிகவும்  லாவகனமாவது.  எண்வரிசைப்  பலகை,  தொடர்புகள்,  குழுக்கள்   மற்றும்  வரலாறு   என  பண்முனைத்   திரைகளை  நீங்கள்  ஒரே  பயன்பாட்டில்  உபயோகிக்கலாம்.  முகப்புத்தகம்  மற்றும்  ட்விட்டர்  தொடர்புகள்  பற்றிக்கொள்ளும்  விதம்  வியப்பளிக்கிறது.  தொடர்புகளுக்கான  புகைப்படங்களையும்  நீங்கள்  தேர்வு  செய்து  கொள்ளலாம்.  ஒரு  குறிப்பிட்ட  தொடர்பை  திறந்தால்  அவரின்  அனைத்து  சமூகவலைதள  நடவடிக்கைகளையும்  ஒன்றாக  தெரிந்து  கொள்ளலாம்.  பட்டர்ஃப்லையின்  அழைப்புத்  தரம்  மிகவும்  அருமையாக  உள்ளது.  இன்னும்  சொல்லப்போனால்  அதன்  இயர்பீஸ் மிருதுவாகவும்  உள்ளது, அதே சமயம்   தெளிவாகவும்  உள்ளது.  எனினும்  ஒன்  எக்ஸ்  அல்லது  ஐஃபோன் 5 விட  ஒலிஅடுக்குப்  பிழை  பட்டர்ஃப்லையிலேயே  அதிகம்  இருக்கிறது.  அழைப்பை  துண்டித்துவிட்டு  மறுபடியும்   அழைத்தால்  சரியாகி  விடுகிறது.  எனினும்  இது  இந்த  விமர்சன  சாதனத்தின்  பிழையாகக்  கூட  இருக்கலாம்.  

இறுதிவரிகள்

நாம்  சில அம்சங்களை  மறுக்க  முடியாது.  1080 பி  அதிதுல்லிய  காட்சித்திரை  எஸ்-எல்.சி.டி 3  பலகை  மற்றும்  ஸ்தூல்யமான  தண்ணீர்  எதிர்ப்பு  திரம்  கொண்ட  முதல்  முன்னோடி  நுண்ணலைபேசி  இதுவே.  மற்ற  நுண்ணலைபேசி  தயாரிப்பாளர்கள்  கற்றுக்கொள்ளும்  வகையில்  மிகவும்  சிறப்பாக  கட்டமைக்கப்பட்டுள்ளது.  செயல்பாட்டு  அளவுகள்  போட்டியாளர்களை  விரட்டியடிக்கும்  அளவிற்கு  உள்ளன.  மின்கல  அடுக்கின்  ஆயுள்  ஏற்றுக்கொள்ளும்படி   உள்ளது,  ஆனால்  நோட்2  பல  சந்தர்பங்களில்  இதை  வென்றிடும்.  அடிப்படையாக  இது  ஒரு  பெரிய திரை  நுண்ணலைபேசி . நோட் 2 வின்  எஸ்-பென்னின்  நலன்கள்  ஏதும்  இதிலில்லை.  ஒட்டுமொத்தமாக  இது  ஒரு  அதிக  விலை  கொண்ட  அலைபேசி.  செலவழித்தபின்  நீங்கள்  ஏமாற்றமடைய  மாட்டீர்கள்.  ஒரே  பிரச்சனை  இதுவே,  நீங்கள்  செலவழிக்கும்  பணத்திற்காகப்  போட்டியிடும்  பல  போட்டியாள்ர்கள்  உள்ளன.  கேலக்ஸி  எஸ் 3,  எச்.டி.சி  ஒன்  எக்ஸ்,  கேலக் ஸி  நோட் 2 மற்றும்  ஆப்பிள்  ஐஃபோன் 5  ஆகியவற்றுள்  உங்கள்  காட்சித்திரை  அள்விற்கான  தேவைக்கேற்ப  நீங்கள்  பெறலாம். 

logo
Vishal Mathur

https://plus.google.com/u/0/107637899696060330891/posts

Advertisements
Advertisements

எச்.டி.சி பட்டர்ஃப்லை

எச்.டி.சி பட்டர்ஃப்லை

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.