ஃபாஸில் நிறுவனம் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கூகுளின் வியர் ஒ.எஸ். சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் ஹார்ட் பீட் சென்சார், அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், அலிமீட்டர் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
ஃபாஸில் ஜென் 5 சிறப்பம்சங்கள்:
- 1.3 இன்ச் வட்ட வடிவம் கொண்ட AMOLED டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் வியர் 3100
- 1 ஜி.பி. ரேம்
- 8 ஜி.பி. மெமரி
- கூகுளின் வியர் ஒ.எஸ்.
- கிரவுன் மற்றும் இரண்டு புஷ் பட்டன்கள்
- நான்கு பேட்டரி மோட்கள்
இந்த சீரிஸ் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற அம்சங்களை வழங்கும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில்வாடிக்கையாளர் கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச்களில் பல்வேறு செயலிகள் ஆட்டோ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மியூசிக் ஸ்டிரீமிங் சேவை, ஸ்பாட்டிஃபை, பீஸ் ஆஃப் மைண்ட், சேஃப்டி ஆப், நூன்லைட் மற்றும் நைக் ரன் கிளப் போன்ற செயலிகள் முதன்மையாக இருக்கின்றன.
விலை
ஸ்விம் ப்ரூஃப் ஸ்பீக்கர் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் கால்களை மேற்கொள்ளும் வசதியை வழங்குகிறது. இந்தியாவில் ஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ. 22,995 முதல் துவங்குகிறது.