சாம்சங்கின் 4K HDR வசதி கொண்ட ஸ்மார்ட் டிவி அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 07 Aug 2019
HIGHLIGHTS
  • இந்த டி.வி.க்கள் ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ ஆன்லைன் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படும்

  • ஆன்லைன் தரவுகளை பயன்படுத்தும் வகையில் இந்த காலத்து இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது

சாம்சங்கின்  4K  HDR  வசதி கொண்ட  ஸ்மார்ட் டிவி  அறிமுகம்.
சாம்சங்கின் 4K HDR வசதி கொண்ட ஸ்மார்ட் டிவி அறிமுகம்.

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தி ஃபிரேம் ஸ்மார்ட் 7-இன்-1 32 இன்ச் HD  மற்றும் 40 இன்ச் ஃபுல் HD . LED. டி.வி. என அழைக்கப்படுகின்றன.

இந்த டி.வி.க்கள் ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ ஆன்லைன் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருகிறது.இதில் சாம்சங் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி.க்களில் ஆன்லைன் தரவுகளை பயன்படுத்தும் வகையில் இந்த காலத்து இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது

தி ஃபிரேம் 55-இன்ச் 4K HDR . டி.வி. வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி ரூ. 4,999 விலையில் இருந்து வழங்கப்படுகிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் 12, 2019 இல் துவங்குகிறது. தி ஃபிரேம் 55- இன்ச் டி.வி. விலை ரூ. 1,19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

32-இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி.யை வாங்குவோருக்கு ரூ. 999 முதல் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. 40-இன்ச் சாம்சங் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி.  அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரம் முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 32-இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி. விலை ரூ. 22,500 என்றும் 40-இன்ச் மாடல் விலை ரூ. 33,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் மற்றும் ஹெச்.டி.ஆர். 10 உள்ளிட்டவை புகைப்படம் மற்றும் வீடியோக்களை மிக நேர்த்தியாக பிரதிபலிக்கின்றன. இதில் பிக்ஸ்மி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

தி ஃபிரேம் டி.வி.யில் QLED தொழில்நுட்பம் மற்றும் இன்-பில்ட் மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. தி ஃபிரேம் டி.வி. பயன்படுத்தாத சமயத்தில் ஆர்ட் மோடிற்கு சென்று கலை சார்ந்த புகைப்படங்களை திரையில் காண்பிக்கும். இத்துடன் டி.வி. வைக்கப்பட்டுள்ள அறையின் சூழலுக்கு ஏற்ப ஸ்கிரீன் பிரைட்னஸ் தானாக மாறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

தி ஃபிரேம் டி.வி. பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுடன் வயர்லெஸ் முறையில் இணைந்து கொண்டு ஸ்மார்ட் திங்ஸ் செயலி மற்றும் ஒன் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்குகிறது. பில்ட்-இன் ஏர்பிளே 2 வசதியும் வழங்கப்பட்டு இருப்பதால் ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் டேட்டாக்களையும் டி.வி.யில் பார்க்க முடியும்.

logo
Sakunthala

coooollllllllll

email

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready LED Smart Android TV 32Y1 (Black) (2020 Model)
OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready LED Smart Android TV 32Y1 (Black) (2020 Model)
₹ 19499 | $hotDeals->merchant_name
Vu 100 cm (40 inches) Full HD UltraAndroid LED TV 40GA (Black) (2019 Model)
Vu 100 cm (40 inches) Full HD UltraAndroid LED TV 40GA (Black) (2019 Model)
₹ 17899 | $hotDeals->merchant_name
Mi 80 cm (32 inches) 4C PRO HD Ready Android LED TV (Black)
Mi 80 cm (32 inches) 4C PRO HD Ready Android LED TV (Black)
₹ 13499 | $hotDeals->merchant_name
Samsung 108 cm (43 Inches) Wondertainment Series Ultra HD LED Smart TV UA43TUE60FKXXL (Black) (2020 model)
Samsung 108 cm (43 Inches) Wondertainment Series Ultra HD LED Smart TV UA43TUE60FKXXL (Black) (2020 model)
₹ 36999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status