Install App Install App

Jio வின் ரூ. 249 யில் நான்கு மடங்கு பலன்கள்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 06 Jun 2020
HIGHLIGHTS
  • JIO Rs,249 விலையில் துவங்கி அதற்கும் அதிக விலை சலுகைகளில் வழங்கப்படுகிறது.

  • Jio புதிய சலுகையில் பயன்பெற வாடிக்கையாளர்கள் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி ஜூன் 30 வரை

  • Ajio , டிரெண்ட்ஸ், டிரெண்ட்ஸ் ஃபுட்வியர் போன்ற தளங்கல்

Jio வின்  ரூ. 249 யில் நான்கு மடங்கு பலன்கள்
Jio வின் ரூ. 249 யில் நான்கு மடங்கு பலன்கள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிரீபெயிட் பயனர்களுக்கு நான்கு மடங்கு பலன்களை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் பயனர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல், டிரெண்ட்ஸ் ஃபுட்வியர் மற்றும் ஏஜியோ தளங்களில் பயன்படுத்துவதற்கான தள்ளுபடி வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.

ஜியோ அறிவித்திருக்கும் நான்கு மடங்கு பலன்கள் ஜியோ ரூ. 249 விலையில் துவங்கி அதற்கும் அதிக விலை சலுகைகளில் வழங்கப்படுகிறது. வவுச்சர்கள் ரீசார்ஜ் தொகைக்கு இணையான மதிப்புக்கு வழங்கப்படுகிறது. ரீசார்ஜ் நிறைவுற்றதும் வவுச்சர்கள் மைஜியோ செயலியின் கூப்பன்ஸ் பகுதியில் சேர்க்கப்படுகிறது.

புதிய திட்டத்தில் பயன்பெற வாடிக்கையாளர்கள் ஜியோ பிரீபெயிட் சலுகையில் குறைந்தபட்சம் ரூ. 249 விலையில் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். ரீசார்ஜ் செய்து முடித்ததும் ரிலையன்ஸ் டிஜிட்டல், டிரெண்ட்ஸ், டிரெண்ட்ஸ் ஃபுட்வியர் மற்றும் ஏஜியோ வவுச்சர்கள் மைஜியோ செயலியின் கூப்பன் பிரிவில் சேர்க்கப்படும்.

ஜியோ புதிய சலுகையில் பயன்பெற வாடிக்கையாளர்கள் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது ஜியோ புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த வவுச்சர்களின் அதிகபட்ச மதிப்பு ரூ. 300 ஆகும். இதனை பயன்படுத்த பயனர்கள் ஏஜியோ, டிரெண்ட்ஸ், டிரெண்ட்ஸ் ஃபுட்வியர் போன்ற தளங்களில் குறைந்தபட்சம் ரூ. 999 விலைக்கு பொருட்களை வாங்க வேண்டும். ரிலையன்ஸ் டிஜிட்டல் சேவையில் குறைந்த பட்சம் ரூ. 10 ஆயிரத்துக்கு பொருட்களை வாங்க வேண்டும்.

ரீசார்ஜ் செய்யும் போது வழங்கப்படும் தள்ளுபடி வவுச்சர்களை மேலே குறிப்பிடப்பட்டு உள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் அடுத்த முறை பொருட்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Jio's Rs. 249 yields fourfold data
Tags:
Reliance Jio JIO OFFER JIO PLAN Jio RS249 Plan Jo Jio recharge Jio benefit ரிலையன்ஸ் ஜியோ ஜியோ ஜியோ ஆபர்
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status