விமானத்தின் வரும் சத்தத்தை 70% குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை…!

விமானத்தின் வரும் சத்தத்தை 70% குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை…!
HIGHLIGHTS

நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த நாசா விஞ்ஞானிகள் விமானத்தின் இரைச்சலை 70 சதவீதம் வரை குறைத்து சாதனை படைத்துள்ளனர்.

விமானங்கள் இயக்கப்படும் போது அதிக அளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும் காரணத்தினால், வானில் பறக்கும் விமானத்திலிருந்து வரும் ஒலியை நிலத்தில் இருந்தே கேட்க முடிகிறது. அவ்வாறு இருப்பதனால், விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் இந்த இரைச்சல் சத்தம் காரணமாக பெரிதும் பாதிகப்படுகின்றனர். விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் இந்த சத்தம் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்நிலையில், விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் சத்தத்தை குறைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. பல்வேறு டெஸ்ட்களுக்கு பின் தற்போது அந்த டெஸ்டில் குறிப்பிடத்தக்க வெற்றியை எட்டியுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாசாவின் சோதனை விமானங்களில் நடத்தப்பட்ட பல்வேறு மாற்றங்களுக்குப் பின் அவை இயக்கப்பட்டபோது இரைச்சல் சத்தம் 70% குறைந்துள்ளதாகவும், இதற்காக விமான அமைப்பில் மூன்று தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அளவுக்கு விமானத்தின் இரைச்சல் குறைக்கப்படுவது விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு சத்தம் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பு அவர்களுக்கு ஏற்படாது என்றும் தெரிவித்தனர்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo