ப்ளாக் ஹோல் புகைப்படத்தை வெளியிட்ட நாசா..!

ப்ளாக்  ஹோல்  புகைப்படத்தை வெளியிட்ட  நாசா..!
HIGHLIGHTS

ஒரு பெரிய நட்சத்திரத்தின் அழிவு தான் ப்ளாக் ஹோல் என்றழைக்கப்படுகிறது.

நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலாக ‘பிளாக் ஹோல்’ எனப்படும் கருந்துளையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து நியூயார்க் நகரமே ஆச்சரியத்தில் உள்ளாகியது 

பூமியிலிருந்து சுமார் 5.4 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் விண்வெளியில் இருக்கும் இந்த கருந்துளையானது, எம்87 என்று அழைக்கப்படும் பால்வெளி மண்டலம் ஒன்றில் உள்ளது. இது சூரியனை விட மிகவும் பெரியது.

ஈஹெச்டி (EHT) தொலைநோக்கித் திட்டம் கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பின் இணையதளத்தால் ஈவெண்ட் ஹாரிஷன் தொலைநோக்கி திட்டம் என்றழைக்கப்படும் இத்திட்டம் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை பற்றிய தகவல்கள் சேகரிக்கவும், பிளாக் ஹோலைச் சுற்றியுள்ள சூழல்கள் கண்காணிக்கவும் ஏதுவாய் இருந்தது. 

மேலும் இந்த  ப்ளாக்  ஹோல்  என்றால்  என்ன ?

ஒரு பெரிய நட்சத்திரத்தின் அழிவு தான் ப்ளாக் ஹோல் என்றழைக்கப்படுகிறது.

ஒரு நட்சத்திரத்தின் ஹைட்ரஜன் அளவு தீரும்போது அந்த நட்சத்திரம் அளவில் மிகவும் சிறியதாக சுருங்கிவிடும்.

அந்த நட்சத்திரத்தில் உள்ள ஹைட்ரஜன் அடுக்குகளால் ஒரு அணுவைவிட சிறிய நட்சத்திரம் கூட அடர்த்தியிலும் ஈர்ப்பு விசையிலும் மிகுந்து காணப்படும். இந்த அடர்த்தியும் ஈர்ப்பு விசையும் தான் ப்ளாக் ஹோல் ஆகிறது.

இந்த அதிகப்படியான ஈர்ப்பு விசையால் தான் அந்தக் கருந்துளையைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களும் ஈர்கப்பட்டுவிடுகிறது.

ஒவ்வொரு பால்வெளி மண்டலம் எனப்படும் கேலக்ஸியின் நடுவிலும் ஒரு மிகப்பெரிய கருந்துளை இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கருந்துளையின் ஈர்ப்பு சக்தியானது மிகவும் அதிகம் என்பதால் இதற்குள் ஒளி ஊடுருவமுடியாமல் ஈர்க்கப்பட்டுவிடும். 

ஒரு கருப்பு பந்தைச் சுற்றி பிரகாசமான ஒளிக்கங்கு சூழ்ந்திருப்பதைப் போன்று வெளியிட்டிருக்கப்படும் இப்புகைப்படம் உலகம் முழுவதும் அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இதன்மூலம் நாசா ஒரு மைல்கல்லைப் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo