Chandrayaan 2 Moon Landing லைவாக எப்படி பார்ப்பது.?

Chandrayaan 2 Moon Landing லைவாக  எப்படி பார்ப்பது.?

Chandrayaan 2 Live Moon Landing: இஸ்ரோவின் சந்திரயான் – 2 விண்கலம், செப்டம்பர் 7, 2019 அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலவில் தரையிறங்குகிறது. இந்த வெற்றிகரமான முயற்சியால், உலக அளவில் பெருமை பெறுகிறது இந்தியா.

நிலவில் தரையிறங்கும் சந்திரயான் -2 நிகழ்ச்சியை இஸ்ரோ லைவாக ஒளிபரப்பும். இந்த வரலாற்று சாதனையின் நேரடி ஸ்ட்ரீமை நீங்கள் எவ்வாறு பார்க்கலாம் என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.

Chandrayaan-2 Moon landing live streaming
இஸ்ரோ தனது வலைத்தளமான isro.gov.in. -ல் சந்திரயான் 2 தரையிறங்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் லைவாக வெளியிடும். இதன் நேரடி ஸ்ட்ரீமை பிஐபி இந்தியா (PIB India) என்ற யூடியூப் சேனலில் பார்க்கலாம். தூர்தர்ஷன் நேஷனல் யூடியூப் சேனல், பெங்களூருவில் உள்ள செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையிலிருந்து சந்திரயான் தரையிறங்கும் நிகழ்வை ஒளிபரப்பும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதோடு இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் அதன் அப்டேட்டுகளை உடனுக்குடன் வெளியிடும்.

எல்லாமே திட்டமிட்டபடி நடந்தால், சந்திரனில் மென்மையாக தரையிறங்கும் நான்காவது நாடாகவும், சந்திரனின் தென் துருவப் பகுதியைத் தொடும் முதல் நாடாகவும் இந்தியா மாறும். சந்திரயான் -2 வில் உள்ள அனைத்து கூறுகளும் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டவை என்பதால், சந்திரனில் மென்மையாக தரையிறங்க முயற்சித்தல், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் சந்திரனின் நிலப்பரப்பை ஆராய்தல் ஆகிய பெருமைகளை இந்தியா பெரும்.

விக்ரம் லேண்டர் சந்திரயான் -2 ஆர்பிட்டரில் இருந்து திங்கள்கிழமை மதியம் 1:15 மணிக்கு பிரிந்து சந்திரனை நோக்கி இறங்கத் தொடங்கியது. புதன்கிழமை, சந்திரயான் -2 விண்கலம் சந்திரனைச் சுற்றி 35 கிமீ x 101 கிமீ சுற்றுவட்டப்பாதையில் நுழைய இரண்டாவது இலக்கை அடைந்தது. கடந்த ஜூலை 22 -ம் தேதி விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2. இந்த விண்கலம் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யன் என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo