ரெட்மி யின் 23.8inch டிஸ்பிளே கொண்ட 1ஏ மாணிட்டர் சீன சந்தையில் அறிமுகம்

ரெட்மி யின் 23.8inch டிஸ்பிளே  கொண்ட 1ஏ மாணிட்டர் சீன சந்தையில் அறிமுகம்
HIGHLIGHTS

புதிய ரெட்மி மாணிட்டரில் 3-மைக்ரோ-எட்ஜ் வடிவமைப்பு

ரெட்மி மாணிட்டருக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி டிஸ்ப்ளே 1ஏ மாணிட்டரை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெட்மி மாணிட்டரில் 3-மைக்ரோ-எட்ஜ் வடிவமைப்பு மற்றும் 7.3எம்எம் அளவில் மெல்லிய வடிவமைப்பு உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இதன் ஸ்டான்டு டெக்ஸ்ச்சர் ஃபினிச் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகி இருக்கும் புதிய ரெட்மி மாணிட்டர் விலை 599 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 6330 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி மாணிட்டருக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

ரெட்மி 1ஏ மாணிட்டரில் புளூ லைட் வசதி மற்றும் கண்களை பாதுகாக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ரெட்மி மாணிட்டர் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் கொண்டிருக்கிறது. இதில் 23.8 இன்ச் 1920×1080 பிக்சல் ஐபிஎஸ் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இந்த மாணிட்டரின் பின்புறம் பவர் பட்டன், ஹெச்டிஎம்ஐ மற்றும் விஜிஏ போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo