108MP கேமரா கொண்ட Redmi Note 10 Pro Max,மற்றும் Redmi Note 10 Proஅறிமுகம்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 05 Mar 2021
HIGHLIGHTS
  • இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது

  • ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது

108MP  கேமரா கொண்ட Redmi Note 10 Pro Max,மற்றும் Redmi Note 10 Proஅறிமுகம்
108MP கேமரா கொண்ட Redmi Note 10 Pro Max,மற்றும் Redmi Note 10 Proஅறிமுகம்

சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

- 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் 
- அட்ரினோ 618 GPU
- 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி 
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
- டூயல் சிம் 
- ரெட்மி நோட் 10 ப்ரோ - 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
- 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா
- ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் - 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, LED பிளாஷ்
- 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார் 
- 2 எம்பி டெப்த் கேமரா
- 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5020 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

இத்துடன் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா, நோட் 10 ப்ரோ மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இவைதவிர 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 5 எம்பி டெலிமேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் வின்டேஜ் பிரான்ஸ், கிளேசியல் புளூ மற்றும் டார்க் நைட் நிறங்களில் கிடைக்கிறது. 

ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999, 6ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடலின் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: xiaomi redmi note 10 pro redmi and note 10 pro max launched in india
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
₹ 13999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
₹ 15999 | $hotDeals->merchant_name
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen| 48MP Quad Camera
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen| 48MP Quad Camera
₹ 10499 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status