Vivo T4 Ultra 5G with 50MP periscope Camera launched in India
Vivo அதன் புதிய ஸ்மார்ட்போன் Vivo T4 Ultra 5G, போன் இந்தியாவில் இந்த வாரம் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது இது இந்த வாரம் ஜூன் 11 அன்று 12 PM அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது, மேலும் இந்த போனின் டிசைன் கலர் ஆப்சன் மற்றும் பல அம்சங்கள் இங்கு டீஸ் செய்யப்பட்டுள்ளது மேலும் ப்ளிப்கார்டில் டெடிகேட்டட் பக்கத்தில் இதன் அனைத்து தகவல்களையும் பெறலாம்.
மேலும் இதில் ஒரு buzz பாப்புலர் டிப்ஸ்ட்டர் அதன் விலையை லீக் செய்துள்ளார், ஆனால் Vivo அதிகாரபூர்வமாக விலை பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை ஆனால் இந்த T4 Ultra 5G விலை தகவல் மூலம் பிராண்ட் பற்றி தேய்ந்து கொள்ள முடியும் மேலும் Vivo T4 Ultra தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் கூற்றுப்படி, விவோ டி4 அல்ட்ரா 5ஜி இந்தியாவில் சுமார் ரூ.35,000 விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பிடுகையில், அதன் முன்னோடியான விவோ டி3 அல்ட்ரா 5ஜி ரூ.31,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
Vivo T4 Ultra 5G இரண்டு கலரில் அறிமுகமாகும் அவை ப்ளாக் மற்றும் வைட் ஆகும், மேலும் இதை Flipkart மற்றும் அதன் அதிகாரபூர்வ Vivo இ-ஸ்டோரில் வாங்கலாம்.
வரவிருக்கும் விவோ டி4 அல்ட்ரா போனில் 120 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரெட்டுடன் 6.67 இன்ச் pOLED குவாட்-கர்வ்ட் டிஸ்ப்ளே இருக்கும். இது கண் பராமரிப்பு அம்சங்களையும் 5,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ டி4 அல்ட்ரா, மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது, இது 2 மில்லியனுக்கும் அதிகமான AnTuTu ரேட்டிங்கை எட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த போன் LPDDR5X ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வரக்கூடும், இது Android 15-அடிப்படையிலான FunTouchOS 15 யில் இயங்குகிறது.
இதையும் படிங்க: CMF போனின் சுண்டி இழுக்கும் ஒரேஞ் கலரில் இந்த போனை அதிரடி டிஸ்கவுண்டில் வாங்கலாம்
இந்த பிராண்ட் போனின் பின்புற கேமரா அமைப்பின் விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளது. போட்டோ எடுப்பதற்காக, T4 அல்ட்ரா 5G ஆனது OIS உடன் கூடிய 50MP சோனி IMX921 ப்ரைம் கேமரா, 50MP 3x பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில், 50MP செல்ஃபி ஷூட்டர் இருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் பிற அம்சங்களில் 90W வேகமான சார்ஜிங் சப்போர்டுடன் 5,500mAh பேட்டரி மற்றும் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP69 சான்றிதழ் ஆகியவை அடங்கும்.